மேயர் பிரியாவை பார்த்ததுமே.. முட்டி போட்டு கெஞ்சி அழுத ஊழியர்கள்.. சென்னையில் பரபரப்பு
மேயர் பிரியா ராஜனிடம் மருத்துவமனை ஊழியர்கள் புகார் சொன்னார்கள்
சென்னை: சென்னை மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்ட, தரமணி நிகழ்வில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஏழை, எளிய மக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பக்கத்திலேயே இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்களுக்கான சிகிச்சைகளை உடனடியாக அளிப்பதற்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான மருத்துவ வசதிகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகிறது..

தரமணி நிகழ்வு
அத்தனையும் மக்களுக்கு பயன்தர தக்கவகையில் அமைந்து வருகிறது.. அந்த வகையில், அடையாறு மண்டலம் தரமணி, பாரதியார் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை சென்னை மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார்... தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம், கோவிட் தடுப்பூசி முகாம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

நர்ஸ்கள்
இந்த மருத்துவ முகாமில் 30 டாக்டர்கள், நர்ஸ்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.. இந்த நிகழ்வில் மேயர் பிரியா ராஜன் பேசும்போது, "ஏற்கனவே கொளத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்... இப்போது மூன்றாவது இடமாக தரமணியில் தொடங்கப்பட்டுள்ளது... தொடர்ந்து இந்த முகாம்கள் மீதமுள்ள அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நேரில் ஆய்வு
முன்னதாக, இந்த முகாமில் அமைக்கப்பட்டிருக்கும் பரிசோதனை மையங்களை மேற்பார்வையிட்டார் மேயர் பிரியா ராஜன்... பள்ளியின் முதல்மாடியில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை மருத்துவ மையத்திற்கும் பார்வையிட சென்றார்.. அப்போதுதான் திடீரென்று மேயரின் முன்பு ஊழியர்கள் சிலர் மண்டியிட்டு கண்ணீர் விட ஆரம்பித்தனர்.

சம்பளம்
தாங்கள் ஆயுஷ் மருத்துவமனையை தொடங்கியது முதல் கடந்த 6 வருடங்களாக மருத்துவம் சாரா பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம்... எங்களுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்ததாரர் எங்களது சம்பளத்தை தரவில்லை.. கொடுக்க வேண்டிய 10 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில், 8500 ரூபாய் மட்டுமே தருகிறார்.. இதை கேட்டதற்கு 3 மாதமாக சம்பளமே தராமல் இழுத்தடிக்கிறார்கள்...

உறுதி
அவர்கள் சொல்கிறபடி கேட்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்... நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அழுது கொண்டே சொன்னார்கள்.. இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரியாராஜன், நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி தந்தார்.. புதிதாக பொறுப்பேற்ற மேயர் முன்பு, முட்டி போட்டு ஊழியர்கள் அழுது புகார் சொன்ன விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications