Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உலை" வெச்சிட்டாங்க.. திமுக ஓட்டு சிதறுதா? "மேட்டரை" எடுத்து தந்த தம்பிதுரை.. வேலையை காட்டுதா பாஜக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் வாக்கு வங்கியை உடைப்பதற்கான வியூகத்தை பாஜக முன்னெடுத்து வரும்நிலையில், அதுகுறித்து ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

திமுக மீது எப்போதுமே சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமிய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது அபாரமானது.. அதிகமானது.. அசாதாரணமானது.

Are BJP and AIADMK breaking DMKs Minority vote bank and What did MP Thambidurai say to PM

காரணம், கடந்த காலங்களில் அவர்களின் உரிமை, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் குரல் கொடுத்த இயக்கங்களில் முதன்மையானது திமுக என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மிக நுணுக்கமாக இஸ்லாமிய மக்களுக்கு தன் ஆதரவையும், தோள்கொடுப்பையும் வழங்கியிருந்தார், கலைஞர்.

கலைஞர் கருணாநிதி: ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த நேரத்தில், குடியுரிமை சட்டம் தேசத்தில் அமலாக்கப்பட்டபோது, அதற்கு எதிராக வன்மையாக குரல் கொடுத்தது திமுக. ஆனாலும், சமீபகாலமாக, அரசு எடுத்த சில முடிவுகளில், இஸ்லாமிய அமைப்புகளுக்கு சிறு சிறு அதிருப்திகள் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த அதிருப்தியைதான் தங்கள் வாக்குகளாக ஸ்கோர் செய்ய பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

இதையடுத்தே, "பாஜகவின் B டீம்" என்று அறியப்பட்டவர்களை வைத்து, தமிழகத்தில் அடுத்த ஆட்டத்தை பாஜகவும் துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நமக்கு ஒரு பிரத்யேக செய்தி கிடைத்துள்ளது.

இரவு விருந்து: அதாவது, "தென்னிந்திய எம்.பி.க்களுடன் இரவு உணவு அருந்தினேன்" என்று பிரதமர் மோடி, கடந்த 2-ந்தேதி ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அந்த ட்விட் வைரல் ஆனது. அந்த இரவு விருந்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்களில் அதிமுகவின் மூத்த தலைவர் தம்பிதுரையும் ஒருவராவார். அந்த விருந்தின்போது, தம்பிதுரையிடம் நீண்ட நேரம் பேசியிருக்கிறார் மோடி.

அரசியல் குறித்து மோடி விசாரித்தபோது அதற்கு நிறைய விளக்கங்களை தம்பிதுரை தந்தாராம். குறிப்பாக, அதிமுக + திமுக இரு தரப்பு குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

"திமுக ஆட்சி மக்கள் வைத்த நம்பிக்கை பொய்த்துக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்காக திமுக போட்டிருக்கும் பட்ஜெட் பெரிதாக இருக்கிறது. அவர்களின் பண விளையாட்டை தடுத்தாலே போதும்.

சிறுபான்மை ஓட்டுக்கள்: திமுக கூட்டணிக்கு சிறுபான்மை ஓட்டு ப்ளஸ் பாயிண்டாக இருக்கு. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதினால சிறுபான்மை ஓட்டு திமுக கூட்டணிக்கு கிடைத்து வந்தது. ஆனால், முஸ்லீம்களின் நீண்டநாள் கோரிக்கையைக்கூட திமுக அரசு நிறைவேத்தலைன்னு கோபமா இருக்காங்க. இந்த முறை அவங்களின் ஓட்டு திமுகவுக்கு போகாது" என்று சொல்லியிருக்கிறார் தம்பிதுரை.

அதற்கு பிரதமர் மோடி, "அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன் இருந்தால் தான் தென்மாவட்ட முக்குலத்தோர் சமுக ஆதரவு அதிமுகவுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் எனக்கு வருகிறது.. ஆனால், அதை உங்க தலைவர் (எடப்பாடி பழனிசாமி) ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்? என்று கேட்டாராம்.

விளக்கம்: அதற்கு தம்பிதுரை, " முக்குலத்தோர் சமூகம் அவங்க பின்னாலதான் இருக்கு, ஓபிஎஸும் தினகரனும் சொன்னால்தான் அந்த சமூகம் கேட்கும்ங்கிறதெல்லாம் ஒருவித மாயை. தேனியியில் ஓபிஎஸ்சுக்கும், தஞ்சை-திருவாரூர் மாவட்டத்துல தினகரனுக்கும் வேண்டுமானால் அவங்க பேச்சை கேட்பாங்க. ஆனால், அதே சமூகத்துல செல்வாக்கா இருக்கிற தலைவர்கள் அதிமுகவில் இருக்காங்க. அதனால, முக்குலத்தோர் ஆதரவு அதிமுகவுக்கு நிறையவே இருக்கு" என்றாராம்.

அச்சு அசலாக, இதே வார்த்தையைதான் எடப்பாடி பழனிசாமி, கடந்த 3 வருடங்களாக தன்னிடம் சொல்லி வரும்நிலையில், அதையே தம்பிதுரையும் சொல்கிறாரே என்று ஆச்சரியமாக பார்த்தாராம் பிரதமர் மோடி.

முன்னதாக, தமாகா தலைவர் ஜிகே வாசனிடம், பிரதமர் மோடி விவாதித்திருக்கிறார்.. திமுகவை வீழ்த்தும் வியூகம் குறித்தும் ஆலோசித்துள்ளார். அப்போது, வாசன் பிரதமரிடம், "பண பலமும் அதிகார பலமும் இருக்கிற துணிச்சலில் திமுக தலைமை இருக்குது. ஒவ்வொரு ஓட்டுக்கும் முந்தைய தேர்தலைவிட, பணத்தை அதிகமா கொடுத்து வாங்கிடலாம்னு நினைக்கிறாங்க. ஆனால், மக்கள் அப்படி நினைக்கலை. அதிருப்தியிலதான் இருக்காங்க.

வாசன் யோசனை: திமுகவின் பண விளையாட்டை முடக்கினாலே போதும்... மக்கள் நியாயமா யோசிச்சு ஓட்டுப்போடுவாங்க. தமிழக களம் நமக்கு சாதகமாக இருக்கிறது. ஆனா, ஆளும் கட்சியின் அதிகாரமும் பணமும் அதை மாத்திடக்கூடாது" என்று வாசன் சொன்னாராம்.

ஆக, திமுகவின் பணபலம் குறித்த பாயிண்ட்டை வாசன் எடுத்துவைக்க, திமுகவின் இஸ்லாமியர் அதிருப்தி குறித்த பாயிண்ட்டை தம்பிதுரை எடுத்துவைக்க, இரு தரப்பு பாயிண்ட்களையும் வைத்து, அடுத்தக்கட்ட அரசியலை களவாட துவங்கி உள்ளதாம் மேலிட பாஜக..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+