களத்தில் பேக் ஐடிக்கள்.. மோடியின் தமிழக வருகை பற்றி டிவிட் செய்யும் போட்ஸ்.. பின்னணி என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகையை அடுத்து டிவிட்டரில் பெரிய போர் நடந்து வருகிறது.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடியின் தமிழக வருகையை அடுத்து டிவிட்டரில் பெரிய போர் நடந்து வருகிறது. மோடியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடுமையான சண்டை டிவிட்டரில் நடந்து வருகிறது.
மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். இதனால் தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோடிக்கு எதிராகவும், ஆதரவாகவும் டிவிட்டரில் செய்யப்படும் வைரல் டிவிட்டுகள் சில பொய்யான கணக்குகளால் உருவாக்கப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. குறிப்பிட்ட சில ஹேஸ்டேக்குகளை வைரலாக்குவதற்காக இப்படி செய்யப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

என்ன வைரல்
தற்போது டிவிட்டரில் இரண்டு ஹேஸ்டேக்குகள் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக டிவிட்டரில் #GoBackModi என்ற டேக் வைரலாகி வருகிறது. இன்னொரு பக்கம் மோடிக்கு வருகையை ஆதரித்து #TNWelcomesModi டேக் வைரலாகி வருகிறது. இதில் பல பிரபலங்களும் டிவிட் செய்து வருகிறார்கள்.

பிரச்சனை என்ன
இதில் #GoBackModi தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. #TNWelcomesModi டேக் தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு டேக்குகளிலும் போடப்படும் சில டிவிட்டுகள் ரோபோட்கள் மற்றும் பொய்யான கணக்குகள் மூலம் போடப்படும் டிவிட்டுகள் என்று புகார் எழுந்து இருக்கிறது.

புகார் எப்படி
அதாவது பொதுவாக டிவிட்டரில் ஒரு ஹேஷ்டேக்கை வைரலாக்க வேண்டும் என்றால் அதில் ஒரே நேரத்தில் நிறைய பேர் டிவிட் செய்ய வேண்டும். உதாரணமாக ''#IdlyVadaiSambar'' என்ற டேக்கை வைரலாக்க வேண்டும் என்றால் ஒரே நொடியில் அதில் பலர் டிவிட் செய்ய வேண்டும் .இப்படியாக தொடர்ச்சியாக நீண்ட நேரம் டிவிட் செய்யப்பட்டால்தான் அது டிரெண்ட் ஆகும். இந்த நிலையில் இதுபோன்ற டிவிட்டுகளை பொய்யான ஐடிக்கள் மற்றும் போட்கள் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போட் என்றால் என்ன
பொதுவாக டிவிட்டரில் நிறைய போட் (bot) ஐடிக்கள் இருக்கும். இது சாப்ட்வேர் மூலம் உருவாக்கப்பட்ட ஐடிக்கள் ஆகும். அதாவது இதற்காக ஸ்பெஷல் சாப்ட்வேர்கள் இருக்கும். இந்த போட் (bot) ஐடிக்கள் தானாக மனிதர்கள் போல டிவிட் செய்யும். இதற்கு சில கட்டுப்பாடுகளை மட்டும் விதித்தால் போதும், நாம் எப்படி விரும்புகிறோமோ அதேபோல் போட் (bot) ஐடிக்கள் மனிதர்கள் போல டிவிட் செய்யும்.

எப்படி வேண்டுமானாலும்
அதாவது மோடிக்கு ஆதரவாக போட் (bot) ஐடிக்கள் டிவிட் செய்ய வேண்டும் என்றால் செய்யும், எதிராக செய்ய வேண்டும் என்றாலும் செய்யும். எந்த டேக்கை உலகம் முழுக்க டிரெண்ட் ஆக்க வேண்டுமோ அதை போட் (bot) ஐடிக்கள் மூலம் டிரெண்ட் செய்ய முடியும். இந்த நிலையில்தான் மோடிக்கு ஆதரவாகவும, எதிராகவும் செய்யப்படும் டிவிட்க்கள் போட் (bot) ஐடிக்கள் மூலம் செய்யப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வைரல்
அதாவது #TNWelcomesModi என்பது போட் (bot) ஐடிக்கள் மூலம் டிரெண்ட் செய்யப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இதை டிரெண்ட் செய்யும் பேக் கணக்குகள் குறித்து புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதேசமயம் #GoBackModi டேக்தான் போட் (bot) ஐடிக்கள் மூலம் டிரெண்ட் செய்யப்படுகிறது என்று பாஜகவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ஆனால் ஏற்கனவே மோடிக்கு ஆதரவாக சில போட் (bot) ஐடிக்கள் டிவிட் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications