ஆபரேஷன் "50000".. கொங்குவில் உதிக்கும் "உதயசூரியன்".. ஸ்டாலின்தான் காரணம்.. பூரித்த செந்தில் பாலாஜி
கொங்குமண்டலத்தில் திமுக வளர்ச்சி குறித்து செந்தில்பாலாஜி ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: மேற்கு மண்டலத்தில் திமுகவின் வளர்ச்சிக்கு காரணம், தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வரும் திட்டங்களும், அவரது அயராத உழைப்பும்தான் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பூரித்து சொல்கிறார்.
செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்ததில் இருந்தே, அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறார்.. அதிமுகவில் இருந்து வந்தவருக்கு இவ்வளவு முக்கியத்துவமா? என்று ஒருசில சீனியர்கள் திமுகவில் அதிருப்திக்கும் ஆளானார்கள்.
அதாவது, மாற்று கட்சியினரைவிட, திமுகவில் உள்ள ஒருசில முக்கிய தலைவர்கள், சீனியர்களே செந்தில்பாலாஜிக்கு அளிக்கப்படும் பொறுப்புகள், அசைன்மென்ட்டுகள், மற்றும் முதல்வருடனான அவருக்கான நெருக்கத்தை அறிந்து அப்செட்டுக்கு ஆளாகியதாக பலமுறை செய்திகள் கசிந்துள்ளன..
Recommended Video

கொங்கு "சூரியன்"
முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்கு பாத்திரமான நபராக செந்தில் பாலாஜி திகழ்ந்து வருவதும், திமுகவுக்குள் அவ்வப்போது ஒருசிலரிடம் இப்படி சலசலப்பை ஏற்படுத்தி விட்டு போவதும் இயல்பாக உள்ளது.. அதேசமயம், மாற்று கட்சியில் இருந்து முக்கியஸ்தர்களை திமுகவுக்கு இழுத்து வரும் பொறுப்பு, பெரும்பாலும் இவரிடம்தான் ஒப்படைத்து வருகிறது திமுக மேலிடம்.. அந்த வகையில்தான் கொங்குவையும், கொங்குவின் சீனியர் தலைகளையும் திமுக பக்கம் கொண்டு வருவருதை சீரும் சிறப்புமாகவே செய்து முடித்து வருகிறார் செந்தில் பாலாஜி..

வெட்டிவா + கட்டிவா
தன்னுடைய வெற்றி முத்திரையை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் பதிவு செய்தார். சமீபத்தில்கூட 50 ஆயிரம் மாற்றுக்கட்சியினரை திமுகவுக்கும் கொண்டு வந்து இணைத்தார்.. எனவேதான், வெட்டிவா என்றால் கட்டி வந்துவிடும் இயல்பு கொண்டவர் செந்தில் பாலாஜி என்று ஸ்டாலினே பலமுறை வெளிப்படையாக புகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது.. இத்தனை காலம் கொங்குவில் கால் பதிக்காத நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த திமுக, இன்றைய தினம் அங்கு தலைநிமிர்ந்து நிற்கிறது.. திமுக பக்கம் கொங்கு மண்டலம் மெல்ல மெல்ல சாய்ந்து கொண்டிருக்கிறது என்றால், இதற்கு செந்தில்பாலாஜியின் கடுமையான உழைப்பும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

பூரிப்பு + குஷி
இப்படிப்பட்ட சூழலில்தான், நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு செந்தில்பாலாஜி ஒரு பிரத்யேக பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், மின்கட்டண உயர்வு சலசலப்புகள், திமுகவின் திராவிட மாடலில் மின்சார துறையின் பங்கு, மேற்கு மண்டலம் திமுகவின் மண்டலமாக மாறிவருவது குறித்தெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி.. குறிப்பாக, கொங்கு மண்டல மக்கள் திமுகவை ஏன் விரும்ப தொடங்கி விட்டனர் என்பது குறித்து காரணங்களை அடுக்கி உள்ளார்.. முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியையும், வெளியிட்டு வரும் நலத்திட்டங்களின் பலனையும் நன்கு உணர்ந்து வருகிறார்கள் என்று பூரித்து சொல்கிறார் செந்தில்பாலாஜி.. அமைச்சர் நம்மிடம் சொன்னதாவது:

சக்சஸ் பிளான்
மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை, இந்த 15 மாத காலத்தில் தொடர்ந்து 5 முறை கோவை மாவட்டத்துக்கு வந்து சென்றுள்ளார்.. முதல் அரசு நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. இந்த முறை ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கி உள்ளார்.. மக்களுக்கான திட்டங்களை கொண்டு போய் சேர்ப்பது என்பது முதல்வரின் மிகப்பெரிய பலம்.. இதற்கு மேற்கு மண்டலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.. அதேபோல, தொழில் முனைவோர்களும் எளிதில் சந்திக்கக்கூடிய முதல்வராக உள்ளார்..

3 மணி நேரங்கள்
இதுவரை தொழில்துறைக்கென உள்ள அமைச்சர்கள்தாள், தொழில்முனைவோர்களை சந்தித்து குறைகளை கேட்பார்கள்.. சில சமயம், அந்த குறைகளை அதிகாரிகளை விட்டு கேட்க சொல்லிவிடுவார்கள்.. மாநாடு, கூட்டங்களை மட்டும் துவக்கி வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.. ஆனால், முதல்வரே அவர்களை நேரடியாக சந்திக்கிறார்.. அவர்களுடன் 3 மணி நேரம் அவர்களின் கோரிக்கையை கேட்டு, பிரச்சனையை தீர்த்து வைக்கிறார்.. இதையெல்லாம்தான் மேற்கு மாவட்டத்தை சார்ந்துள்ள மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர்.. திமுக கொண்டு வந்துள்ள திட்டங்களின் பலனையும் அனுபவிக்க தொடங்கியும் விட்டார்கள்.

சாத்திய கூறுகள்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவை பொறுத்தவரை, 100 வார்டுகள் கோவையில் உள்ள நிலையில் 96 வார்டுகள் முதல்வர் ஸ்டாலினுக்குதான் வெற்றி கிடைத்துள்ளது.. 31 பேரூராட்சி, 7 நகராட்சியில் திமுக பணியாற்றி கொண்டிருக்கிறது என்றால், முதல்வரின் ஆளுமை, முதல்வர் மீதான நம்பிக்கைதான் காரணம்.. அதனால்தான் 50 ஆயிரம் பேரை கட்சிக்குள் இணைப்பது சாத்தியமாகிறது.. அதனால்தான் முதல்வரின் அன்பையும் பெற முடிகிறது.. முதல்வரின் பாராட்டை நான் மட்டும் பெறவில்லை.. ஒவ்வொரு துறையிலும் முதல்வர் அந்தந்த அமைச்சர்களை ஊக்கப்படுத்திதான் வருகிறார்.

கீதா ஜீவன்
அன்பில் மகேஷூம் முதல்வரின் பாராட்டை பெற்றுள்ளார்.. வீரமங்கை என்று கீதாஜீவனும் பாராட்டை பெற்றுள்ளார்.. ஒரு மாநாட்டை நடத்திக்காட்ட வேண்டும் என்றால் கேஎன் நேரு, முதல்வரின் பாராட்டை பெற்றுவிடுவார்.. இப்படி ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு அமைச்சர்களும் பாராட்டை பெறுவார்கள்.. அப்படித்தான் எனக்கும் முதல்வரிடம் பாராட்டு கிடைத்துள்ளது.. நான் முதல்வருக்கு, ஒரு சிறுதுரும்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. என்னால் முதல்வருக்கு, ஒருசிறு சங்கடம்கூட வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.. அதற்கான உழைப்பையும் தந்து வருகிறேன்..

பிளஸ் + மைனஸ்
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.. தமிழக நிதியமைச்சருக்கும் விமர்சனங்கள் நிறைய உண்டு.. என்மீதும் உண்டு.. இந்த விமர்சனங்களுக்கு பதிலடி தந்தாலும் மற்றொரு புறம், இந்த விமர்சனங்களால், என்னை பக்குவப்படுத்தி கொள்கிறேன்.. நல்ல விமர்சனங்களாக இருந்தால் எடுத்துக் கொள்வேன்.. மேற்கு மண்டலத்தில் ஒருசிலர் தோல்வியின் விரக்தியில் விமர்சனங்களை வைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அதுபோன்ற விமர்சனங்களை கணக்கில் எடுத்து கொள்வதில்லை" என்றார்.
-
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications