• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"காவி".. டக்குனு வார்த்தையை விட்டுட்டாரே தலைவரு.. அப்ப அதேதானா?.. ஸ்டாலின் என்ன சொல்வாரோ.. சிக்கல்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி தற்போது தென்பட ஆரம்பித்துள்ளது.. முக்கியமாக இது கூட்டணி கட்சிகளிடம் இருந்து மெல்ல வெளிப்பட ஆரம்பித்துள்ளதாகவே கருதப்படுகிறது.

கடந்த வாரம் ஒரே நாளில் 2 விஷயங்கள் நடந்தன.. ஒருபக்கம் பாஜகவின் நயினார் நாகேந்திரன் ஒருபேட்டி தந்தார்.. மறுபக்கம் அதிமுகவின் பொன்னையன் இன்னொரு பேட்டி தந்தார்.

அது பாம்பு இல்லை.. எனது புருஷன்! நாகப்பாம்புடன் 4 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி! அதிர்ந்த கர்நாடக கிராமம்அது பாம்பு இல்லை.. எனது புருஷன்! நாகப்பாம்புடன் 4 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி! அதிர்ந்த கர்நாடக கிராமம்

"சசிகலா வந்தால் வரவேற்போம்" என்றார் பாஜகவின் நயினார்.. பாஜக வளர்வது தமிழகத்துக்கு ஆபத்து என்றார் பொன்னையன்.

நயினார்

நயினார்

இவர்கள் 2 பேரும் ஏன் இப்படி சொல்கிறார்? நயினார் ஏன் அதிமுகவை எரிச்சலுட்டும் வகையில் பேட்டி தருகிறார்? பொன்னையன் ஏன் பாஜகவை எரிச்சலூட்டும் வகையில் பேட்டி தருகிறார்? என்ற குழப்பங்கள் வட்டமடித்தன.. நயினார் மீது எடப்பாடி தரப்பு கோபம் கொண்டது.. எடப்பாடி தரப்பு மீது பாஜக கோபம் கொண்டது.. இரு தரப்பிலும் அதிருப்திகள், வருத்தங்கள் வெளிப்பட்டன.. இருவருமே ஒருவரையொருவர் குற்றம் சாட்டி கொண்டார்கள்.. ஒருவேளை பாஜக - அதிமுக கூட்டணி முறிகிறதோ? என்ற கேள்விகளும் எழுந்தன.

அண்ணாமலை

அண்ணாமலை

ஆனால், நயினார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அண்ணாமலை சொல்லிவிட்டார்.. பொன்னையன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று எடப்பாடி, ஓபிஎஸ் இருவருமே சேர்ந்து சொல்லிவிட்டனர்.. மேலும், அதிமுக - பாஜக கூட்டணி உறவு தொடரும், எங்களுக்குள் எந்த விரிசலும் இல்லை என்று அண்ணாமலை உறுதிப்படுத்தி உள்ளதுடன், இதையே, எடப்பாடி பழனிசாமியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

 பிரச்சனைகள்

பிரச்சனைகள்


எனினும், அதிமுக - பாஜக இடையே சுமூகமான சூழல் அவ்வளவாக இல்லை என்றே கருதப்படுகிறது.. இதை கணக்கு போட்டுதான், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுகவுடன் மறைமுகமான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் பரபரத்தன.. அதாவது, சிபிஎம், சிபிஐ கட்சிகளை பொறுத்தவரை, திமுக கூட்டணியில் இருந்தாலும், சமீப காலமாகவே, பாஜகவுடனான உறவில் திமுக மென்மை போக்கை கடைப்பிடித்து வருவதை ரசிக்கவில்லை.. அதனால், பாஜகவுக்கு எதிராக கூட்டணியை உருவாக்குவோம் என்று அதிமுக மேலிடத்தில் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

லிஸ்ட்

லிஸ்ட்

இந்த லிஸ்ட்டில் தமிழக காங்கிரசும் இணையலாம் என்றே சொல்லப்பட்டது.. இதற்கு காரணம், பிரதமர் மோடி சென்னை விழாவுக்கு வந்தபோது கூட, மாநில தலைவர் அழகிரி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.. அதாவது, "பிரதமர் விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டிருக்க கூடாது... பிரதமரின் சுற்றுப்பயணத்தை தெலுங்கானா முதல்வர் புறக்கணித்தார்... பிரதமர் வந்தால் வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசாமல் அரசு மேடைகளில் அரசியல் செய்கிறார் என்பதால், தெலுங்கானாவில் புறக்கணிக்கின்றனர். ஆனால் தமிழக முதலமைச்சர் விழாவில் கலந்து கொண்டது துர்திஷ்டவசமானது" என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

ஏற்கனவே பேரறிவாளனை கட்டிப்பிடித்த விஷயத்தில் காங்கிரஸ் தரப்பு நொந்து போயுள்ள நிலையில், தீவிர ஆர்எஸ்எஸ்காரரான வெங்கையாடு நாயுடுவை வரவழைத்து, தீவிர ஆர்எஸ்எஸ் எதிர்ப்பாளரான கருணாநிதிதியின் சிலையை திறக்க வைத்தது முதல், பட்டினப்பிரவேச விவகாரத்தில் பின்வாங்கியது வரை நேரடியாகவே பார்த்து நொந்து போய் உள்ளதாக தெரிகிறது..

 மாய தோற்றம்

மாய தோற்றம்

இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று அழகிரி செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்துள்ளார்.. "தமிழகத்தில் எங்கள் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சியில் இருக்கிறது... ஆட்சிக்கு எதிராக, அதிமுக - பாஜக பேசுகிற காரணத்தால், அவை தான் எதிர்க்கட்சி பணியை செய்வதாக, ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன.. அது உண்மையல்ல... நாங்களும் ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்.

 நண்பர்கள்

நண்பர்கள்

ஆட்சி எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை விளக்கி சொல்கிற நல்ல நண்பர்களாக இருப்போம்... ஆட்சியால் ஏற்படும் சங்கடங்களையும் சொல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே என்றாலும், இத்தனை வருட கூட்டணி காலத்தில், இதற்கு முன்பு ஒருபோதும் இப்படி சொன்னதில்லை.. இது திமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது...

டரியல்

டரியல்

ஆரம்பத்தில் இருந்து பொறுமையை கடைப்பிடித்து வந்த தமிழக காங்கிரஸ், பேரறிவாளன் விவகாரத்துக்கு பிறகு, தன்னுடை மனக்குமுறலை வெளிப்படுத்தியே வருகிறது என்பதும் கவனம் பெறுகிறது.. இந்த நிலை இப்படியே நீடிக்கும் பட்சத்தில், திமுகவுடன் கூட்டணி தொடருமா? அல்லது வேறு கூட்டணிக்கு தயாராகுமா? என்று தெரியவில்லை.. அதேபோல, மாநில நலனுக்காக பாஜகவுடன் நெருக்கத்தை திமுக தொடருமானால், அது எந்த மாதிரியான விளைவுகளை, அரசியல் களத்தில் ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

English summary
Are PMK, CPIM parties joining with admk and What are the BJP, DMK going to do கம்யூனிஸ்ட், பாமக அதிருப்தியாளர்கள் அதிமுகவில் மீண்டும் இணையலாம் என்கிறார்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X