டீல் முடிஞ்சது?.. அரண்டு போன கட்சிகள்.. கைமாறும் இடங்கள்.. திமுகவின் "பஞ்ச தந்திரம்".. மலைக்கும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் எம்பி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட திமுக தயாராகி வருகிறதாம். அதுகுறித்து சில யூகமான தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.

விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதனால் தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்த வகையில், தமிழகத்திலும் தேர்தல் பணிகள் துவங்கப்பட்டுள்ளன..

Are constituencies shifting to DMK alliance parties and What is DMK going to do

தேமுதிக: இதில் திமுகவை பொறுத்தவரை, மிகப்பெரிய கூட்டணியாக திகழ்ந்து வருகிறது.. ஆனால், வரும் தேர்தலில், மெகா கூட்டணியாக திமுக போட்டியிடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், திமுகவில் மேலும் சில கட்சிகள் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தேமுதிக, மநீம போன்ற கட்சிகள் திமுகவுக்குள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அதேசமயம், வரப்போகும் தேர்தலில், பெரும்பான்மையான இடங்களை தன் கையில் வைத்து கொண்டு போட்டியிடவே திமுக நினைக்கிறதாம்.. மேலும், ஒரே தொகுதியை ஒரே கட்சிக்கு, பல வருடங்களாகவே ஒதுக்கி தருவதால், அந்த பகுதிகளில் கட்சி வளர்ச்சியும், கட்சியினர் முன்னேற்றமும் பாதிக்கப்படுதாக திமுக தலைமை கருதுவதாக தெரிகிறது. எனவேதான், வரும் தேர்தலில், கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளை, மறுபடியும் அந்த கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடாது என்பதில், ஆளும் தரப்பு உறுதியாக உள்ளதாம்.

உதயநிதி: குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு 8 எம்பிக்கள் இருக்கிறார்கள்.. அவர்களில் பலர், தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டும் வருகிறார்கள்.. இவர்களில் சிலர் அதிமுக அனுதாபிகளாக இருப்பதாக தெரிகிறது.. அதனால், குறிப்பிட்ட அந்த எம்பிக்கள் மட்டும், மறுபடியும் வெற்றி பெறுவதை, திமுக விரும்பவில்லை போலும்.. எனவே, இந்த முறை அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், தொகுதிகளை மாற்றித் தர திட்டமிட்டுள்ளதாம்.

அதற்கு பதிலாக, திமுகவுக்கு விசுவாசிகளாக இருப்போருக்கு வாய்ப்பு தரப்படலாம் என்கிறார்கள்.. முக்கியமாக, உதயநிதியின் இளைஞர் அணியில், சிறந்து பணியாற்றக்கூடியவர்களுக்கு எம்பி சான்ஸ் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

இதில், திருவள்ளூர் தொகுதி, எம்பி, ஜெயகுமாருக்கும் சிக்கல் உள்ளதாக தெரிகிறது.. காரணம், அந்த தொகுதியைத்தான் திருமாவளவன் கேட்டிருப்பதாக சொல்கிறார்கள்.. எனவே, திருவள்ளுவருக்கு பதிலாக, காஞ்சிபுரத்தை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கக்கூடும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

விருதுநகர்: அதேபோல, விருதுநகரை, தன்னுடைய மகனுக்காக வைகோ கேட்டுக் கொண்டிருக்கிறார்.. ஆனால், இப்போது காங்கிரஸின் மாணிக்தாகூர் அங்கு உள்ளதால், வரும் தேர்தலில், அவருக்கு சிவகங்கையை தந்துவிடலாம் என்று திமுக நினைக்கிறதாம்.. அப்படி சிவகங்கையை மாணிக்தாகூர் கேட்டால், அங்கே ஏற்கனவே உள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கடி வரலாம்.. இதை தவிர்க்க வேண்டுமானால், சிவகங்கையை காங்கிரசுக்கு ஒதுக்காமல், தேனியை தந்துவிடலாம் என்று திமுக நினைக்கிறதாம்.

திருச்சியில் தன் மகனை களமிறக்க நேரு முயன்றுவருவதால், திருநாவுக்கரசுவுக்கும் போட்டியிடுவதில் சிக்கல் வரக்கூடுமாம்.. ஆனால், எப்படியும், மயிலாடுதுறையை முஸ்லீம் லீக்குக்கு திமுக ஒதுக்கிவிடும் என்கிறார்கள். கமல் நிச்சயம் கோவையில்தான் போட்டியிடுவார் என்பதால், பாஜக இங்கு அடித்து ஆடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. ஒருவேளை தேமுதிக, திமுக கூட்டணிக்குள் வந்தால், கள்ளக்குறிச்சியை ஒதுக்கக்கூடும் என்கிறார்கள்..

பாரிவேந்தர் பாஜக பக்கம் சாய்ந்துள்ள நிலையில், இந்தமுறை வேல்முருகன் அணி மாறக்கூடும் என்ற சலசலப்புகளும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

பெருகும் எதிர்பார்ப்பு: இன்னும் கூட்டணியே முடிவாகாத நிலையில், இப்படி பல யூகமான தகவல்கள் அரசியல் களத்தை தொடர்ந்து வட்டமடித்து கொண்டேயிருக்கிறது.. எனினும், தேர்தலுக்கு இன்னும் டைம் இருப்பதால், அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

பாரிவேந்தர் பாஜக பக்கம் சாய்ந்துள்ளார்.. எனவே, இந்த முறை திமுக கூட்டணியில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.. அதேபோல, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும், திமுகவை சரமாரியாக கேள்வி கேட்டு, வருகிறார். இதனால், அவரும் அணி மாறக்கூடும் என்ற சலசலப்புகளும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

பெருகும் எதிர்பார்ப்பு: அதனால், 2 கட்சிகள் வெளியேற, மநீம, தேமுதிக போன்ற கட்சிகள் திமுக கூட்டணிக்குள் நுழையலாம் என்கிறார்கள். எனினும், இன்னும் கூட்டணியே முடிவாகாத நிலையில், இப்படி பல யூகமான தகவல்கள் அரசியல் களத்தை தொடர்ந்து வட்டமடித்து கொண்டேயிருக்கிறது.. தேர்தலுக்கு இன்னும் டைம் இருப்பதால், அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. எப்படியும் சீட் விவகாரத்தில், பொருமல்களும், அதிருப்திகளும், ஏமாற்றங்களும் வெடிக்கவே செய்யும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+