Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மூன்று முடிச்சு".. அவருமா? இங்கேயா? தூண்டிலை திருப்பி வீசும் எடப்பாடி.. அப்ப திமுக கூட்டணி உடையுமா?

மநீம இந்த முறை அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணியை சந்திக்குமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மநீம மற்றும் காங்கிரஸ் இந்த இரு கட்சிகள் குறித்த ஒரு யூகமான தகவல் ஒன்று இணையத்தில் சுற்றி கொண்டிருக்கிறது.. தமிழகத்தில் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன? என்பது உறுதியாக தெரியாத நிலையில், தற்போதுள்ள கூட்டணிகளே உடையக்கூடும் வாய்ப்பும் உள்ளதாக சொல்கிறார்கள்.. அது என்னென்ன கட்சிகள்?

கமல்ஹாசனை பொறுத்தவரை, திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றுவருவதாக கூறுப்படுகிறது.. அதேபோல, கமல் இணைந்தால், அது கூட்டணிக்கு பலமாக இருக்கும் என்றே திமுகவும் நம்புகிறது.

 மவுரியா மவுரியா

மவுரியா மவுரியா

காரணம், நகர்ப்புற வாக்காளர்களின் வாக்குகளை கமல் வெகுவாக அள்ளுவார் என்பதே திமுக போடும் கணக்கு.. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் 3 தொகுதிகளை பெற கமல் விரும்புகிறாராம்.. ஆனால் ஒரே ஒரு தொகுதி மட்டுமே தரப்படும் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டதாக தெரிகிறது.. ராமநாதபுரம் தொகுதியை மய்யத்துக்கு ஒதுக்க திமுக கூட்டணி விரும்புகிறது.. ஆனால் தென்சென்னை மற்றும் கோவை தொகுதிகளையே பெற கமல் விருப்பம் காட்டுகிறார்.. இந்த தொகுதிகளில் ஒன்றில் கமலும், இன்னொரு தொகுதியில், கட்சியின் துணை தலைவர் மவுரியாவும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.. 3 சீட் என்றால் திமுக கூட்டணியில் ஒதுக்கப்படுமா? என்று தெரியவில்லை..

 டச்சிங் டச்சிங்

டச்சிங் டச்சிங்

அந்தவகையில், திமுகவுடனான பேச்சுவார்த்தை எப்போது முடிவுக்கு வரும்? திமுகவின் கூட்டணி நகர்வுக்கு கமல் ஒப்புக் கொண்டாரா? என்ற ஆர்வம் அதிகரித்தபடியே வரும்நிலையில்தான், திடீரென திமுகவை விட்டுவிட்டு, ஸ்டிரைட்டாக காங்கிரஸ் தலைமையையே கமல் டச் செய்துவிட்டது சற்று அதிர்வை உண்டுபண்ணியது.. திமுகவுடன் கூட்டணி வைப்பதாக இருந்தால், அதுகுறித்த நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த சிக்னலையும் கமல் தராத நிலையில், திடுதிப்பென்று காங்கிரஸ் பக்கம் ஏன் ஆதரவு அலையை வீசுகிறார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

 விஷயமே வேற

விஷயமே வேற

24ம் தேதி டில்லியில் நடக்க உள்ள ராகுலின் பாதயாத்திரையில் கமல் பங்கேற்க உள்ளார்... அதிலும் காங்கிரஸ் அழைப்பில் கமல் பங்கேற்க உள்ளார்.. இதனை கேஎஸ் அழகிரியும் வரவேற்றுள்ளார்.. காங்கிரஸ் நிகழ்வில் கமல் பங்கேற்பது, திமுக கூட்டணியில் இணைவதற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டாலும், விஷயமே வேறு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. காங்கிரஸ் நிகழ்ச்சியில் மட்டுமே கமல் பங்கேற்க போகவில்லையாம்.. தேர்தல் கூட்டணிக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கவே கமல் செல்வதாக சொல்கிறார்கள்.. அப்படியானால் இதில் திமுகவின் ரோல் என்ன? என்பதுதான் அடுத்த சந்தேகம்.

 டமார் சண்முகம்

டமார் சண்முகம்

மற்றொருபக்கம், காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பதும் புது கேள்வியாக கிளம்பி உள்ளது.. இதற்கு காரணம், அன்று சிவி சண்முகம் பேசிய பேச்சுதான்.. பாஜக - திமுக கூட்டணி ஏற்படும் என்ற சிவி சண்முகம் பேசியிருந்தது, 4 நாட்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை கிளப்பியது.. அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில்தான் இருப்பதாக அண்ணாமலை சொல்லி வரும்நிலையில், சிவி சண்முகத்தின் இந்த பேச்சு 2 விதமான செய்திகளை உணர்த்துவதாக இருந்தது.. ஒன்று, பாஜகவுடன் அதிமுகவுக்கு கூட்டணி வைக்க விருப்பமில்லை என்பதையே, சிவி சண்முகம் இப்படி பூடகமாக சொன்னதாக சொல்கிறார்கள். மேலும், காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிடுவதற்காகவே, பாஜகவை திமுகவுடன் கோர்த்து சொன்னதாகவும் தெரிகிறது.

திமுக

திமுக

ஏற்கனவே, திமுகவுடன் பல்வேறு விஷயங்களில் காங்கிரஸ் முரண்பட்டு வருகிறது.. காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது என்று கேஎஸ் அழகிரியே வெளிப்படையாக சொல்லிவிட்டார்.. இந்த முறை அதிக சீட்களை கேட்டு பெறுவோம் என்றும் சொல்லி, தங்கள் கட்சியின் கூட்டணி ரேட்டை அதிகப்படுத்தி விட்டதாகவும் தெரிகிறது.. காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நெருக்கமாகி வருகிறார் என்றும், தன்னுடைய மகன் மிதுனின் நண்பரும், அரசியல் விமர்சகருமான சுனிலை வைத்து, காங்கிரஸ் கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி முயன்று வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார்களை சொல்லி வருகின்றனர்.

 கோலம் மாறுதே

கோலம் மாறுதே

ஒருவேளை பாஜகவை கழட்டிவிட்டு, காங்கிரஸுடன் எடப்பாடி கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. இந்த வியூகத்துடன், கமலின் காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் பொருத்தி பார்க்க உள்ளது.. சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் மணி, நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், அதிமுக பக்கம் கூட்டணி வைக்க கமல் முயன்றுவருவதாக தெரிகிறது என்றும் தன் அனுமானத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

 தோழர்கள்

தோழர்கள்

ஆக, சிவி சண்முகத்தின் பேட்டி, கமலின் பயணம், அழகிரியின் பேச்சு, எடப்பாடியின் காங்கிரஸ் நகர்வு, போன்றவைகளை எல்லாம் வைத்து பார்த்தால், தனி லாபிக்கான முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள்.. எடப்பாடி + பாமக + காங்கிரஸ் + கமல் + கம்யூனிஸ்ட்கள் என்றும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாம்.. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. அரசியலில் எதுவுமே மாறும் என்பதால், எதையுமே உறுதியாக சொல்ல முடியாத சூழலும் உள்ளது.. அந்தவகையில், இந்த கூட்டணி அனுமானமும் வியப்பை தந்து வருகிறது.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+