• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டபுள் ஷாக்" எடப்பாடி பழனிசாமிக்கு.. "திமுக + பாஜக".. என்னமோ நடக்குதே.. ரெடியா இருங்க".. கைகூடுமா?

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க தயாராகிறாராம்
Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு புது சந்தேகம் ஒன்று எழுந்துள்ளதால், அது தொடர்பான கலக்கமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. என்ன நடக்கிறது?

அதிமுகவை கிட்டத்தட்ட தன் பிடியில் கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அடுத்தக்கட்ட அதிரடிகளில் இறங்கினார்.

தேர்தல் ஆணையம், நீதிமன்றம் இரு இடங்களிலும் காலடி வைத்தார்.. தன் தரப்பு வாதங்களை வைத்து, முறையீடு செய்துள்ளர்.

சூப்பர்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி சூப்பர்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி

கலக்கம்

கலக்கம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, ஹைகோர்ட்டில் 2 நாட்கள் தொடர்ந்து நடந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம், நீதிபதி ஜெயச்சந்திரன் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இது, எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது... இதனால், இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற நம்பிக்கையில், ஓபிஎஸ் தரப்பினர் வலம் வருகின்றனர்.. நீதிமன்ற உத்தரவு எப்படி இருக்க போகிறதோ என்ற கலக்கம் எடப்பாடி தரப்புக்கு அதிகம் சூழ்ந்துள்ளதாகவே தெரிகிறது.

போஸ்டிங்

போஸ்டிங்

ஆனால், இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், பாஜக மீது சற்று அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் இருப்பதாக கூறப்படுகிறது.. டெல்லி தலைவர்களை நேரில் சந்தித்து பேச 2 முறை அப்பாயிண்மென்ட் கேட்டும் மறுக்கப்பட்டுவிட்ட வருத்தமும் எடப்பாடிக்கு இருக்கவே செய்கிறது.. இதுபோக மாநில தலைவர் அண்ணாமலை மீதும் சில வருத்தங்கள் இருப்பதாக தெரிகிறது.. காரணம், தற்காலிக பொதுச்செயலாளர் என்ற எடப்பாடியின் புது போஸ்டிங்கை அண்ணாமலை உட்பட எந்த தமிழக பாஜக தலைவர்களும் பெரிதாக ரசிக்கவில்லை.

ப்ரியமானவர்கள்

ப்ரியமானவர்கள்

அதிமுக தொடர்பாக ஏதாவது ட்வீட்களை பதிவிட்டால்கூட, எதிர்க்கட்சி தலைவர் என்றே எடப்பாடியை குறிப்பிட்டு வருகின்றனர்.. பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அக்கட்சியில் ஒருவரும் வாழ்த்தும் சொல்லவில்லை.. ஓபிஎஸ் - எடப்பாடி ஒற்றை தலைமை விவகாரம் குறித்து கேள்வி கேட்டபோதும், "அண்ணன் எடப்பாடி பழனிசாமி, அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், இருவருமே எனக்கு பிரியமானவர்கள்.. அதிமுகவுடன்தான் நாங்கள் கூட்டணி வைக்கிறோமே தவிர, அதிமுக தலைவர்களுடன் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தது, எடப்பாடியை சற்று அதிரவே செய்தது.

லிஸ்ட்

லிஸ்ட்

இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக நடவடிக்கையால் மேலும் நொந்து போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன... காரணம், பாஜக இந்த விஷயத்தில் டபுள் கேம் ஆடுவதாகவே எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம்.. கொங்குவை பொறுத்தவரை, எடப்பாடியின் செல்வாக்குதான் விரிவடைந்து உள்ளது.. இது பாஜகவுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.. அதனால்தான், எப்போது தேர்தல் வந்தலும் கோவை உட்பட பெரும்பாலான கொங்கு பகுதிகள் வேண்டும் என்று பாஜக லிஸ்ட்டை நீட்டும்.. ஆனால், பலம்பொருந்திய கொங்குவை யாருக்கும் தர முன்வந்ததில்லை எடப்பாடி பழனிசாமி.. அதனால்தான், உள்ளாட்சி தேர்தலை பாஜக தனித்து சந்திக்கும் சூழலே ஏற்பட்டது.

 கலர் + நிறம்

கலர் + நிறம்

இப்போது எம்பி தேர்தலை எதிர்நோக்கி உள்ளது பாஜக.. எனவே, கொங்குவை எக்காரணம் கொண்டும், யாருக்கும் விட்டுத்தரக்கூடாது என்பதிலும், பாஜகவின் பலத்தை அங்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் பல கணக்குகளை போட்டுவருகிறது.. அதிமுக பிரிந்துள்ள சூழலில், எடப்பாடிக்கு மேலும் சப்போர்ட் செய்தால், தங்களால் கொங்குவில் வளர முடியாது என்றும் பாஜக இன்னொரு கணக்கு போடுகிறது.. எனவே, கொங்குவில் எடப்பாடி இன்னும் வளர்ந்தால் தங்களால் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்தே, எடப்பாடி விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது.

 ரத்தத்தின் ரத்தங்கள்

ரத்தத்தின் ரத்தங்கள்

நாளுக்கு நாள் பாஜகவின் செயல்பாடு மற்றும் கொங்குவில் அரசியல் கணக்குகள் இவையெல்லா பார்த்தால், ஒருவேளை திமுக - பாஜக மறைமுக டீல் போடுகிறார்களோ, என்ற சந்தேகம் எடப்பாடிக்கு உள்ளதாம்.. சிவசேனா போல இங்கேயும் வேலை காட்டுகிறதோ என்ற சந்தேகமும் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளதாம்.. பாஜகதான் இப்படி என்றால், மாநில அரசும் அதற்கேற்றபடி பழிவாங்கி கொண்டிருப்பதால், திமுக - பாஜக இந்த 2 கட்சிகளையுமே முழுமையாக நம்பவில்லையாம்..

 பிளான் + திட்டம்

பிளான் + திட்டம்

இப்படியே போனால் 2 கட்சிகளும் தன்னுடைய செல்வாக்கை சரியவிட்டுவிடும் என்பதை அறிந்த எடப்பாடி, அடுத்தக்கட்ட வியூகத்தை ஆரம்பித்துவிட்டார்.. இதற்கெல்லாம் ஒரே வழி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதுதான் என்று முடிவெடுத்துள்ளாராம்.. இந்த சுற்றுப்பயணம் எதற்காகவென்றால், தன்னுடைய செல்வாக்கை ஒட்டுமொத்த நிலைநிறுத்துவது மட்டுமல்ல, ஒருவேளை எம்பி தேர்தலின்போது, தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் வந்தாலும், அதை சமாளிக்க கூடிய அளவுக்கு தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்திவிட வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறாராம்.. என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம்...!

English summary
Are DMK BJP working against Edappadi palanisamy and Who will prove their strength in Kongu எடப்பாடி பழனிசாமி தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க தயாராகிறாராம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X