"கிட்ட வரல, எட்டியும் பார்க்கல".. ஆளையே காணோமாமே.. அறிவாலயம் பக்கம் இப்படி ஒன்னு ஓடுது.. கதர்கள் "ஆ"
காங்கிரஸ் அழகிரி மீது ஈரோடு திமுகவினர் சிறு வருத்தத்தில் உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றனவாம்
சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற அசுர வேகத்தில் களமிறங்கி உள்ளது.. ஆனாலும், ஒருசில வருத்தங்களும் திமுக கூட்டணிக்குள்ளேயே வட்டமடித்து கொண்டிருக்கிறதாம்.. என்னவாம்?
10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்து, சந்திக்கக்கூடிய முதல் இடைத்தேர்தல் என்பதால், ஈரோடு கிழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
"இடைக்கால பொதுச்செயலாளராக" உருவெடுத்து, நீதிமன்றம் வரை போராடி, இரட்டை இலையையும் பெற்றுக் கொண்டு, கூட்டணிகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் களமிறங்குவதால், எடப்பாடி பழனிசாமிக்கு இது மிக முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது..

உதயசூரியன்
காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி என்றாலும், நேரடி போட்டி அதிமுக + காங்கிரசுக்கே ஏற்பட்டுள்ளது.. வழக்கமாக தேர்தல் என்றாலே உதயசூரியன் + இரட்டை இலை சின்னம்தான் பிரதானமாக நேருக்கு நேர் மோதும்.. ஆனால் இந்த முறை இரட்டை இலையும் , கை சின்னமும் மோதுவதால், புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. தமிழக மக்களிடம் தேர்தல் நேரத்தில் சின்னங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.. எனவே, உதயசூரியனா ? இரட்டை இலையா? என்று வரும் போது, போட்டி பலமாக இருக்கும். ஆனால், இங்கு கையும் இலையும் மோதுகின்றன.

வோட் ஷேரிங்
கையா? இலையா? என வருகிறபோது, தொகுதியில் இலை தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இதனையெல்லாம் ஆராய்ந்துள்ள எடப்பாடி தரப்பு, "ஓட்டுகளை பர்ச்சேஸ் செய்ய நினைப்பவர்களின் திட்டத்தை தடுத்து நிறுத்தினால் போதும். நாம் ஜெயித்துவிடலாம்" என்று கணக்கு போட்டு வருகிறதாம். ஆனால், திமுகவோ வேற முடிவில் உள்ளது.. திமுகவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் வாங்க வேண்டும், அந்த அளவுக்கு தேர்தல் பணியில் இறங்குங்க என்று முதல்வர் ஸ்டாலினே பொறுப்பு அமைச்சர்களை நேரடியாக கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

கை சின்னம்
அதனால்தானோ என்னவோ, கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கும் முன்பேயே, திமுக சார்பில் கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. சுருக்கமாக சொல்லப்போனால், திமுக வேட்பாளர் களத்தில் நின்றால், எந்த வகையான தேர்தல் பணிகள், யுக்திகளை திமுக பயன்படுத்துமோ அதே வேகத்தில் களப்பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். இந்த நிலையில், மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு சில வருத்தங்கள் இருக்கிறதாம்.. அதை பற்றிதான் ஒருசில தகவல்கள் கசிந்து வருகின்றன.

1 சதவீதம்
அதாவது, காங்கிரஸ் வேட்பாளரை ஜெயிக்க வைக்க திமுக களப்பணியாற்றி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரிக்கோ கொஞ்சம் கூட அக்கறையில்லை. இளங்கோவனுக்காக தேர்தல் பணிகளில் அழகிரி ஆர்வம் காட்டவில்லை. ஒரே ஒரு முறை இளங்கோவனை சந்தித்துவிட்டு சென்றதோடு சரி... தொகுதி பக்கமே அழகிரி வரவில்லை. காங்கிரஸை ஜெயிக்க வைக்க திமுகவுக்கு இருக்கும் அக்கறையிலும் ஈடுபாட்டிலும் 1 சதவீதம் கூட அழகிரிக்கு இல்லை" என்று திமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த ஆதங்கத்தை அமைச்சர்களிடமும் தெரிவித்திருக்கின்றனர். தொகுதியில் இருக்கும் காங்கிரஸ்காரர்களிடமும் இந்த புகைச்சல் இருந்து வருகிறதாம்.

அறிவாலயம்
எனவே, இதுகுறித்து அறிவாலயம் தரப்பில் விசாரித்தபோது, "காங்கிரசை நாங்கள் டிஸ்டர்ப் பண்ணவிரும்பவில்லை. கூட்டணி தர்மத்தை மதித்து, இளங்கோவனை வெற்றிப்பெற வைப்பது திமுகவின் கடமை. அதற்காக அமைச்சர்களும் மாவட்ட கழகத்தினரும் கடுமையாக பணி செய்து வருகின்றனர். அதனால், காங்கிரஸ் தலைவர்களை பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் வராமல் இருப்பது நல்லது. இல்லையெனில், நாங்களெல்லாம் பிரச்சாரம் செய்ததால்தான் இளங்கோவன் ஜெயித்தார் என வெற்றியில் சொந்தம் கொண்டாடுவார்கள். திமுகவுக்கு இது தேவையா? அதனால் தான் காங்கிரஸ் தலைகளை பற்றி நினைக்கவே இல்லை" என்கிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications