"மாஸ்டர் மைன்ட்".. லிஸ்ட் எங்கே? திமுகவை பார்த்து வானதி இப்படி கேட்டுட்டாரே.. "தாமரை" மலர்ந்துருமோ?
திமுகவின் இந்தி எதிர்ப்பை பாஜகவின் வானதி சீனிவாசன் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் எத்தனை பள்ளிகளில் ஹிந்தி பாடம் உள்ளது? என்பதை வெள்ளை அறிக்கையாக, திமுக தலைமை வெளியிட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
இந்தி திணிப்பு நடவடிக்கைகளை மத்திய பாஜக அவ்வப்போது செய்து வருவது வழக்கம்.. அதிலும் தேர்தல் வரும் சமயங்களில் பாஜக கையில் எடுக்கும் ஆயுதம் ஒன்று இந்தி திணிப்பு மற்றொன்று, மதரீதியான நடவடிக்கைகள் ஆகும்..
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் ஹிந்தியை கையில் எடுத்துள்ளார்.. அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்குழுவின் 11-வது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக செக்
அதில், "கல்வி நிலையங்களில் தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே இனி ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். ஆங்கில வழிக் கல்வியை இந்தி வழிக்கல்வியாக மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதற்குதான் இன்றைய தினம் நேற்றைய தினம் பேரவையில் எதிர்ப்பும், தனித்தீர்மானமும் போடப்பட்டது.. ஆனால், தமிழக பாஜக இதனை எதிர்த்து வருகிறது. இந்தி திணிப்பு என்ற விஷயமே தமிழகத்தில் இல்லை, அப்படி திணிப்பு நடந்தால், அதை தமிழக பாஜக எதிர்க்கும் என்று அடித்து சொன்னார் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்..

மீடியா பாயிண்ட்
நயினார் மட்டுமல்ல, 2 நாளைக்கு முன்பு அண்ணாமலையும் அதே கருத்தைதான் சொன்னார்.. இந்தித் திணிப்பை மத்திய அரசு செய்தால் அதைத் தமிழக பாஜக எதிர்க்கும் என்றார். இந்நிலையில், தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் திமுக அரசுக்கு கேள்வி ஒன்றை எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: ஹிந்தியில் மருத்துவ படிப்பை துவங்க, திமுக நாளிதழில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது... தமிழில் மருத்துவப் படிப்பு வரும்போது, அதை திமுக ஏற்குமா? தமிழில் மருத்துவப் படிப்பு விவகாரத்தில் திமுக நிலைப்பாடு என்ன என்பதை, முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்...

அமித் ஷாவா
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு என்று திமுக ஆட்சியின் அவலங்களால், தமிழக மக்கள் கொந்தளித்து போயுள்ளனர்... இதை திசை திருப்ப, ஹிந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை, திமுக மீண்டும் கையிலெடுத்திருக்கிறது. பாஜக அனைத்து இந்திய மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் அளித்து வருகிறது.. மத்திய பாஜக அரசு எந்த மாநிலத்திலும், எந்த இடத்திலும் ஹிந்தியை திணிக்கவில்லை.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகளை, இந்தி திணிப்பு என திரித்து, திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது..

உயிர்மூச்சு
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளிலேயே பள்ளிக் கல்வி முதல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை.. ஹிந்தியை எதிர்க்கும், தமிழ் தான் எங்கள் உயிர் என பேசும் திமுக நிர்வாகிகளில் யாராவது தங்கள் பிள்ளைகளை, தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளனரா? தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் ஹிந்தி பாடம் உள்ளது? என்பதை வெள்ளை அறிக்கையாக திமுக தலைமை வெளியிட வேண்டும் என்று கேட்டுள்ளார்.. திமுகவின் இந்தி எதிர்ப்பு விவகாரங்களில் சமீபலமாகவே வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications