நிலைமை சீரியஸ்.. அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலையை பார்த்ததும் ஏற்பட்ட குழப்பம்.. அது எப்படிங்க?
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் காதில் காயம் ஏற்பட்டது எப்படி என்றகேள்வி எழுந்துள்ளது.
அமலாக்கத்துறை ரெய்டை தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அதில், செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
உடல்நிலை எப்படி? : செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜி ICU ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்; சுய நினைவில்லாமல் உள்ளார்; நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை; அவர் காது அருகே வீக்கம் உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி ரத்த அழுத்தம், நெஞ்சு வலி காரணமாக இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. திமுக இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையில் உள்ளார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள், செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனைக்கு பின் தெரியவரும். அவர் சுயநினைவில் இல்லை. அவரை கடுமையாக தாக்கி உள்ளனர். அவரை துன்புறுத்தி உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.,
காதில் வீக்கம்: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் காதில் காயம் ஏற்பட்டது எப்படி என்றகேள்வி எழுந்துள்ளது. காதில் வீக்கம் எப்படி ஏற்படும், என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கைது: அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று சோதனை செய்தனர். 17 மணி நேரங்களுக்கு பின் அவர் வீட்டில் சோதனைகள் முடிந்தது.
செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
சோதனை முடிந்த அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை கைது செய்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். அவர் காலையில் வாக்கிங் சென்ற போது தொடங்கிய ரெய்டு இரவு வரை நீடித்தது.
அவர் வீட்டில் இருந்து சில பைகளையும் எடுத்து சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காகவும், முறையாக கைது செய்யவும் அவரை அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழக்கு பின்னணி: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.
ஆஞ்சியோ: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆஞ்சியோ என்பது தமனி சார்ந்த பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும். இதுபோக குறுகலான அல்லது தடைபட்ட தமனிகளை சரி செய்ய பயன்படுத்தப்படும். மேலும் நரம்புகளை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.
ஒரு வடிகுழாயுடன் இணைக்கப்பட்ட ஒரு காற்றழுத்தப்பட்ட பலூன் தமனியின் பாதைக்கு அனுப்பப்பட்டு பின்னர் நரம்பு அல்லது தமனி பாதையின் அளவு பெரிதாக்கப்பட்டு ரத்த ஓட்டம் அல்லது மூச்சு காற்று ஓட்டம் சரி செய்யப்படும். இந்த ஆஞ்சியோ சிகிச்சைதான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட உள்ளதாம்.












Click it and Unblock the Notifications