2 பிளான்.. ஸ்டாலினின் முன்னிலையில்.. கோவை செல்வராஜ் திமுகவில் நாளை இணைகிறார்.. காரணம் யார் தெரியுமா

கொங்கு மண்டல திமுகவில் கோவை செல்வராஜ் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஓபிஎஸ் அணியில் இருந்து சமீபத்தில் விலகிய கோவை செல்வராஜ், தமது ஆதரவாளர்களுடன் நாளை திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை காலை 10.30 மணிக்கு கோவை செல்வராஜ் திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்தி கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமூகமாக சென்றுகொண்டிருந்த இருவருக்குமிடையேயான உறவு சமீபமாக சரியில்லை என்றே கிசுகிசுக்கள் வெளியகின.. அதேசமயம், இரு தரப்புமே இதுகுறித்து அமைதி காத்து வந்தனர்...

அதற்கேற்றார்போல், கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் அணி சார்பில் நடக்கும் எந்த ஒரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் பங்கேற்காமல் இருந்து வந்தார்..

மனசாட்சிகள்

மனசாட்சிகள்

இதனால் அவர் ஓபிஎஸ்ஸுடனான கருத்து வேறுபாடு உறுதியாகிவிட்டதாகவும், ஓபிஎஸ் அணியிலிருந்து அவர் விரைவில் விலகிவிடுவார் என்றும் தகவல்கள் பரபரத்தபடியே இருந்தன.. இறுதியில், ஓபனாகவே குற்றஞ்சாட்டி வெளியேறிவிட்டார் கோவை செல்வராஜ்.. ஓபிஎஸ் + எடப்பாடி பழனிச்சாமி இருவருமே தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.. அதிமுக என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோருக்கிடையே நான் இருக்க விரும்பவில்லை... சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற என் மனசாட்சியும் இடம் தரவில்லை" என்று கூறி ஒட்டுமொத்த அதிமுகவையும் அதிர வைத்து, கட்சியில் இருந்து விலகினார் கோவை செல்வராஜ்.

சமாளிப்பு

சமாளிப்பு

இந்த விலகல், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மகிழ்ச்சி தந்தாலும், அதனால், எடப்பாடிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.. அதேபோல, ஓபிஎஸ்ஸுக்கு இந்த விலகல் சற்று அதிர்ச்சியை தந்தாலும், வைத்திலிங்கத்தை அவர் சமாளித்திருக்கலாமே, இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்திருக்கலாமே என்ற ஆதங்க குரல்கள் ஓபிஎஸ் தரப்பில் இருந்தே வெடித்து கிளம்பி வருகின்றன.

 வெள்ளாள கவுண்டர்கள்

வெள்ளாள கவுண்டர்கள்

காரணம், கொங்கு மண்டலத்தில் தன்னுடைய அரசியல் கடந்த 6 மாத காலமாகவே ஓபிஎஸ் விரிவுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.. இதற்காக, கொங்குவை மையப்படுத்தியே நிர்வாகிகளையும் நியமித்து வருவதாக தெரிகிறது.. குறிப்பாக, கொங்கு மண்டலத்திலேயே, கொங்கு நாடார்கள், அருந்ததியர்கள், நாயுடுகள், கொங்கு வன்னியர், செங்குந்த முதலியார்கள் போன்றோருக்கெல்லாம் முக்கியத்துவம் தந்து வருகிறார் ஓபிஎஸ்.. அதாவது வெள்ளாள கவுண்டர்கள் இல்லாதவர்களுக்கு முக்கியம் தந்து, அவர்களில் பலரை நிர்வாகியாகவும் நியமித்து வருகிறார்..

சான்ஸ்

சான்ஸ்

கொங்குவில் ஓபிஎஸ்ஸின் அரசியல் இப்படி உள்ள நிலையில், கோவை செல்வராஜ் போன்றோரின் விலகல், ஓபிஎஸ்ஸுக்கு மிகப்பெரிய சறுக்கல்தான் என்கிறார்கள். மற்றொருபுறம், கோவை செல்வராஜ் விலகலுக்கு, திமுகவில் சமீபத்தில் இணைந்த, மாஜி எம்எல்ஏ ஒருவர் காரணம் என்கிறார்கள்.. எப்படியும், விரைவில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. திராவிட இயக்கம் என்ற புள்ளியில் கோவை செல்வராஜ் பயணிப்பதால், நிச்சயம் பாஜக பக்கம் செல்ல மாட்டார் என்றும், திமுகவிலேயே இணைய நிறைய வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்..

 ஜாயிண்ட்

ஜாயிண்ட்

இப்படிப்பட்ட சூழலில்தான், கோவை செல்வராஜ் திமுகவில் இணைகிறார் என்றும், நாளை காலை 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொள்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.. டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் அவரது முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.. அந்தவகையில், திமுக கழகத்துக்கு கோவை செல்வராஜ் வருகை தந்தால், அது திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்தான் என்றே கணிக்கிறார்கள்..

 திராவிட பாரம்பரியம்

திராவிட பாரம்பரியம்

தேசியக் கட்சியிலும், மதவாதக் கட்சிகளிலும் இணையும் எண்ணம் இல்லை என்றும், திராவிடப் பிடிப்புள்ள நான் திராவிடக் கட்சிகளில் தான் இணைவேன் என்றும் கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.. மேலும் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியிலும், "ஜானகி அம்மாவுக்கு விழா எடுத்தது திமுகதான்.. இன்னைக்கு திராவிட பாரம்பரியம் என்றால் அது திமுகதான்.. அதனால் திமுகவில் இணைவதில் தவறு இல்லை" என்றும் வெளிப்படையாகவே பேசியிருந்தார்..

பட்டாளங்கள்

பட்டாளங்கள்

தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியும்கூட, கடந்த 3 நாட்களாகவே, இவரை தங்கள் பக்கம் இழுக்க கோவை பாஜக முயன்றதாக தெரிகிறது.. கடந்த சில மாதங்களாகவே, ஓபிஎஸ்ஸுடன் சுமூக சூழல் இல்லை என்ற பேச்சு அடிபட்டபோதே, கோவை செல்வராஜை தங்கள் பக்கம் அழைத்து வர பாஜக முயன்றிருக்கலாமே, கடைசி நேரத்தில் பேசியது பலன்தரவில்லை என்றே சொல்கிறார்கள்.. அதேசமயம், கோவை செல்வராஜ், பாஜக பக்கம் செல்லாதது ஒருவகையில் நல்லது என்றே அதிமுக தரப்பு நினைக்கிறதாம். அதேபோல, கோவை செல்வராஜ், திமுகவில் இணையும்பட்சத்தில், நிச்சயம் தன் ஆதரவாளர்களை திமுக பக்கம் அழைத்து செல்வார் என்கிறார்கள்..

 ஸ்பீடு ஸ்பீடு

ஸ்பீடு ஸ்பீடு

இதற்கான அசைன்மென்ட்டையும் செந்தில் பாலாஜி தரக்கூடும் என்றும், அதைவைத்தே, எம்பி தேர்தலுக்கான வேலைகள் கோவை தொகுதியில் வேகம் எடுக்கும் என்றும் தெரிகிறது.. மிகச்சிறந்த பேச்சாளரான கோவை செல்வராஜ், அதிமுக வாக்குகளை திமுக பக்கம் திருப்புவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.. அந்தவகையில், கொங்கு மண்டல கோட்டையான அதிமுக, மேலும் சிதறி நொறுங்கி விழும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.

 இழப்பில்லை

இழப்பில்லை

திமுகவில் கோவை செல்வராஜ் இணைய போகும் தகவல், கோவை மாவட்ட அதிமுக திமுக பாஜக கட்சிகளில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.. இதுகுறித்து, ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான ஆவின் வைத்தியநாதன் சொல்லும்போது, கோவை செல்வராஜ் அடிப்படையில் ஒருர காங்கிரஸ்காரர். இவர் திமுகவில் இணைவதால் அதிமுகவுக்கு இழப்பேதும் இல்லை... கட்சியின் உண்மையான விசுவாசிகள் அதிமுகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டார்கள் என்று திடமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+