Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்க, மோடி யாருக்கு கை காட்றார்? ஒருத்தரும் காணோமே.. ராகுல் ஜெயிலுக்கு போனால் நல்லது: யார்னு யாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி பதவி பறிப்புக்கு பிறகு, ராகுல்காந்தி மீதான எதிர்பார்ப்பு, காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.. அந்தவகையில், நடக்க போகும் கர்நாடக தேர்தலை, மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனராம் தொண்டர்கள்..!!

தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டும்தான் பாஜக காலை பதித்துள்ளது.. அதுவே இப்போது ஊசலாடி கொண்டிருக்கிறது.. நடந்து முடிந்த கருத்து கணிப்புகளை எடுத்துக்கொண்டால், சொல்லிக்கொள்ளும்படியான ரிசல்ட்டுகள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை.

Are expectations on Rahul Gandhi increasing and Will Congress party defeat BJP in karnataka Election

அநேகமாக இந்த முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தநிலையில், காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்ப‌தாக கணிப்புகள் வெளிவந்திருந்தது, பாஜகவை அதிர வைத்தது..

40% கமிஷன் : இத்தனைக்கும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, கர்நாடகத்திற்கு 8 முறை பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். ஏற்கனவே, அரசின் டெண்டர்களை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு 40 சதவிகித கமிஷன், முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்கள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என மக்களை பாதிக்கக்கூடிய பல பிரச்சனைகள் கர்நாடகாவில் உருவெடுத்து, பாஜகவுக்கு நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது..

ஆனாலும், காங்கிரஸ் இந்த முறை கர்நாடகத்தை விடுவதாக இல்லை.. ராகுல்காந்தியின் நடைபயணம் பெருத்த பலத்தை நாடுமுழுவதும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது கர்நாடகத்தில் சற்று அதிகமாகவே எதிரொலித்துவருகிறது.. போதாக்குறைக்கு எம்பி பதவியை பறிக்கவும், சூடாகிவிட்ட கதர் தொண்டர்கள், பாஜகவை வீழ்த்த ஒன்றுதிரண்டு வருகிறார்கள்.. அந்தவகையில், கர்நாடக காங்கிரஸ் உத்வேகம் கொண்டு எழுந்துள்ளது.. அதனால்தான், பாஜகவையும் தாண்டி, காங்கிரஸின் எழுச்சி கர்நாடகத்தில் பலமாக பேசப்பட்டு வருகிறது..

சாதி வாக்குகள்: இதற்குநடுவே, பொம்மை ஆகியோரின் மோதலும், ஊழலும், காங்கிரசுக்கு வலுவாகி கொண்டிருக்கிறது.. அத்துடன், லிங்காயத்து சமூகத்தினரின் ஓட்டுக்களையும், இஸ்லாமியர்களின் வாக்குகளையும் பிரதானமாக நம்பி உள்ளது... எனவே, காங்கிரஸ் தொண்டர்கள் பெருத்த நம்பிக்கையில், கர்நாடக தேர்தலை எதிர்நோக்கி உள்ளனர்.. இதனிடையே, இன்னொரு வீடியோவையும் காங்கிரஸ் தரப்பினர் இணையத்தில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள். பிரபல தமிழ் சேனல் ஒன்றுக்கு, மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில் கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெறுமா? ராகுல் காந்தி சிறை செல்வாரா? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது..

அதற்கு அவர் தந்த பதிலின் சுருக்கம்தான் இது: "மோடியும், அமித்ஷாவும் ராகுலை கண்டாலே நடுங்குகிறார்கள்.. ராகுல் போற இடத்திலெல்லாம் கூட்டம் சேருகிறது.. இவங்க போற இடத்துல கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஜனங்களையே காணோம்.. மோடி யாருக்கு கை காட்டிட்டு போறார் என்றே தெரியவில்லை.. மக்களே இல்லாத இடத்தில் மோடி கையை காட்டிட்டு போறார்.. யாருக்கு கை காட்டறார்? ஆகாயத்துல இருக்கிற முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு கையை காட்டி செல்கிறாரா? இங்கேயும்தான் வந்தாரு.. அவர் இங்கே வந்ததையும் யாரும் கண்டுக்கல. போனதையும் யாரும் கண்டுக்கல..

அனுதாபங்கள்: ராகுல் காந்தி சிறைக்கு போனால் போய்வரட்டுமே? என்ன இப்போ? சிறைக்கு செல்ல செல்ல, அவர் மீதுள்ள அனுதாபங்கள் ஏறிட்டே போகும்.. அவரை பதவியில் இருந்து நீக்கினீர்கள்.. அதுக்கப்பறம் உங்களால எங்கியுமே தலைகாட்ட முடியலயே.. எங்கே போனாலும் கேள்வி கேட்கிறார்களே, உங்களால பதில் சொல்ல முடியவில்லையே.. ராகுல்காந்தி, தேர்தலில் போட்டியிட முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது.. 5 நிமிடத்தில் எல்லாமே மாறலாம்.. இதே ஜட்ஜ்தானே அன்னைக்கும் இருந்தாரு..

இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும், காங்கிரஸ்தான் வெற்றி பெறும்.. பாஜக ஒருமுறைகூட ஜெயிக்காது.. ஆனால், அவர்கள் என்ன கணக்கில் இருக்கிறார்கள் என்றால், காங்கிரஸ் வெற்றி பெற்று வந்தால், அவர்களை விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். போன முறை இப்படித்தானே அங்கே நடந்தது? பாஜகவா அப்போது வெற்றி பெற்றது? ஜெயிச்சு வந்தவங்களை பாஜக விலை கொடுத்து வாங்கியது.. அந்த நம்பிக்கையில்தான் அமித்ஷாவும் இப்போது உள்ளார்..

பதிலடிகள்: உலகத்திலேயே பெரும் பணக்கார கட்சி பாஜகதான்.. அதானி என்கிற உலகபெரும் பணக்காரனை கையில் வெச்சிருக்கிறதே பாஜக.. அப்பறம் ஏன் கவலைப்பட போகுது? விலைகொடுத்து எம்எல்ஏக்களை வாங்குவாங்க.. கோவாவில் அப்படித்தான் நடந்தது.. மணிப்பூரில் அப்படித்தான் நடந்தது.. ஆனால், இனி அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.. ராகுல்காந்திக்கு செல்வாக்கு எக்கச்கக்கமாக கூடிவிட்டது" என்றார்.. மூத்த விமர்சகர் காந்தராஜின் இந்த வீடியோவைதான், காங்கிரஸ் தொண்டர்கள் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், இதற்கு பாஜக தரப்பில் பதிலடிகள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+