பிரபல 9 எழுத்து நடிகர்.. பாஜக வர்றாராமே.. கண்ணை உறுத்திய "வளர்ச்சி".. கொக்கி போட்டாச்சு.. "சிவ சிவ"
சென்னை: தமிழக பாஜகவின் தேர்தல் வியூகம் வேகம் எடுத்து வருகிறது. அந்தவகையில், சோஷியல் மீடியாவில், தினமும் புது புது தகவல்கள் வட்டமடித்தவாறே உள்ளன.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த வியூகங்களில் தமிழக அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன.. இதில் எல்லாருக்கும் முன்னாடியே களத்தில் குதித்தது பாஜகதான்..

பாஜக: தமிழகம் முழுவதும் களப்பணியில் ஈடுபட்டுவரும்நிலையில், மாற்று கட்சியிலிருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு வலையை விரித்துவருவதாக கூறப்படுகிறது..
மற்றொருபக்கம் பிரபலங்களையும் பாஜகவில் இணைக்க முயற்சிப்பதாக தெரிகிறது.. எந்தவிதமான அரசியல் பின்புலம் இல்லாதவராக இருந்தாலும், அவர் பிரபலமானவராக இருந்தால், தேர்தலில் சீட் தரும் நடைமுறை, வடமாநில பாஜகவில் இயல்பாகவே உள்ளது. டிக்டாக் பிரபலங்கள் உட்பல பலருக்கு சீட் கிடைத்ததை மறுக்க முடியாது.. இதற்கு காங்கிரஸ் கட்சியும் விலக்கல்ல.
நட்சத்திர அந்தஸ்து: அந்தவகையில், பிரபல நடிகர் ஒருவருக்கு தமிழக பாஜக வலையை விரித்துள்ளதாம்.. டிவி தொகுப்பாளராக இருந்து, நட்சத்திர அந்தஸ்தில் தற்போது உயர்ந்திருப்பவர் அந்த "சிவ" நடிகர்.. இவரது படங்கள் இப்போது ரூ.100 கோடி வசூலை தாண்டியிருக்கும் நிலையில், உச்ச நட்சத்திர அந்தஸ்தையும் இந்த நடிகர் பெற்றுவிட்டார்.
இவரது இந்த அசுர வளர்ச்சிதான், பல்வேறு வழிகளிலும் கண்ணை உறுத்த தொடங்கிவிட்டது. பிரபல இசையமைப்பாளரின் மனைவி விவகாரத்தில் இவரது பெயர் அடிபட்டு வரும்நிலையில், நடித்து முடித்துள்ள புதிய படங்களும், ரிலீஸ் செய்யப்படாமல் தள்ளிப்போய்க் கொண்டே இருப்பதால், நெருக்கடிக்கு ஆளாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த நெருக்கடியைதான், பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முனைப்பு காட்டி வருகிறதாம்.
பாஜக பிரமுகர்: அந்தவகையில், பாஜக பிரமுகர் ஒருவர், நடிகரிடம் சென்று பேசியதாக தெரிகிறது. "உங்கள் வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை.. உங்களுக்கு எதிராக சினிமாவில், ஒரு கூட்டமே வேலை செய்து கொண்டிருப்பது உங்களுக்கே தெரியும்.. தனியாக நின்று அவர்களை உங்களால் சமாளிப்பது கஷ்டம்.. பாஜகவில் சேர்ந்தால் உங்களுக்கு பக்கபலமாக கட்சி இருக்கும்... நீங்கள் சம்மதித்தால், டெல்லி தலைவர்கள் முன்னிலையில் சேருவதற்கு ஏற்பாடு செய்து விடுகிறோம் என்றெல்லாம் சொல்லி பேசினார்களாம்.
ஆனால், இதற்கு அந்த நடிகர், உடனடியாக ஓகே சொல்லவில்லையாம்.. அதேசமயம், மறுப்பும் சொல்லவில்லையாம். ரிலீஸ் நேரத்தில் யாராவது பிரச்சனை செய்தால், உங்கள் உதவியை கேட்பேன் என்று மட்டும் சொன்னாராம்.. இதையே தங்களுக்கு கிடைத்த பச்சை சிக்னலாக பாஜக நினைக்கிறதாம். எப்படியும் நெருக்கடிகள் தொடரும் சூழலில், கட்சிக்குள் வந்துவிடுவார் என்றும் பலமாக நம்புகிறதாம்.
எல்.முருகன்: இன்னும் இதுபோல் ஒருசில பிரமுகருக்கு வலையை வீசியிருப்பதாகவும் கூறுகிறார்கள். அன்று மாநில தலைமைப் பொறுப்புக்கு எல்.முருகன் வந்ததுமே, தமிழக பாஜகவின் நடவடிக்கைகள் வேகம் எடுத்ததை மறுக்க முடியாது. முருகன் பதவி ஏற்றபிறகு, நிறைய மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்தனர். திமுகவை சேர்ந்த விபி துரைசாமி, குக செல்வம் என்ற சீனியர் பிரமுகர்கள் முதல், திடமாக இருந்த குஷ்பு வரை, தன் பக்கம் இழுக்க, முருகனால் மட்டுமே அன்று முடிந்தது.
ஏற்கனவே பாஜகவுக்குள் நிறைய நட்சத்திர பேச்சாளர்கள் ராதாரவி, எஸ்வி சேகர் என பலரும் இருக்கும்போது, நமீதா, கலா மாஸ்டர், போன்றோரும் ஐக்கியமானார்கள்.. இதற்கு நடுவில் "சரவணபவன்" ஜீவஜோதி பாஜகவில் இணைந்தார். அவர் என்ன ஆனார் என்றே இதுவரை தெரியவில்லை..
இப்படி பல நட்சத்திரங்கள் கட்சியில் சேர்ந்தாலும், தேர்தல் சமயங்களில் மட்டுமே அவர்கள், "மின்னி" மறையும் நட்சத்திரங்களாகிவிடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
கவர்ச்சி அரசியல்: எனினும், மோடி என்ற பெரிய பிம்பத்திற்கே, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கிடைக்காத ஓட்டுக்கள், வெறும் "கவர்ச்சி அரசியலால்" கிடைத்துவிடுமா? திராவிட சித்தாந்தங்களில் ஊறிப்போன தமிழ்நாட்டில், பிரபலங்களால் மட்டும் மாற்றம் கொண்டுவந்துவிட முடியுமா?
எந்தவித அரசியல் பின்புலம் இல்லாமல், மக்களுக்கான போராட்டங்களையும் முன்னெடுக்காமல், அடித்தட்டு மக்களிடம் நெருங்கியும் செல்லாமல், வெறும் பாப்புலாரிட்டியை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியலுக்குள் வரும் நடிகர், நடிகைகளால், தமிழக மக்களின் மனங்களை அள்ளிவிட முடியுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications