மிஸ்ஸாயிருச்சோ.. ஸ்டாலினின் "ஹேப்பி" அறிவிப்பு.. விவசாயிகள் ஏமாற்றமா.. "கசக்கும்" பொங்கல் பரிசு?
பொங்கல் பரிசு பொருட்களால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது
சென்னை: 1000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசினை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. எனினும் சில பொருட்கள் மிஸ்ஸானது, விவசாயிகள் தரப்பில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாவதற்காக, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக வெளியிட்டிருந்த உத்தரவில், "2023ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செலவு
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.

தொகுப்பு
முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 02, 2023 அன்று சென்னையிலும் அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பு வெளியானபோதுதான், திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளையும் அதிமுக முன்வைக்க தொடங்கியது.. குறிப்பாக, இப்படி ஒரு பகீரை அப்போது முதன்முதலில் கிளப்பியதே எடப்பாடி பழனிசாமிதான்..

புளியில் பல்லி
பொங்கல் பரிசு தொகுப்பில் 500 கோடி ரூபாய் திமுக ஊழல் செய்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல துவங்கவும், அதிமுக மாஜிக்களும் அதையே ஒவ்வொருவராக சொல்ல ஆரம்பித்தனர்.. அதேபோல எச்.ராஜாவும் அவரது பேட்டிகளில், "புளியில் பல்லி இருக்கே" என்று திரும்ப திரும்ப சொன்னார்.. ஏற்கனவே பொங்கல் பணம் இல்லை என்ற ஆதங்கத்தில் மக்கள் அதிருப்தியில் இருந்தபோது, இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு மீதான குற்றச்சாட்டுகள் மேலும் அதிருப்தியை பெருக்கி, விமர்சனங்களையும் திமுக மீது உருவாக்கியிருந்தது..

வெல்லம் எங்கே
அதனால்தான் இந்த முறை, ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யப்பட்டுள்ளது.. ரூ 1000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன் பச்சரிசியும் சர்க்கரையும் தலா ஒரு கிலோ வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், விவசாயிகள் தரப்பில் ஏமாற்றத்துடன் இருப்பதாக சொல்கிறார்கள். வழக்கமாக, 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை இதுவரை வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது, அரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 பணம் வழங்கப்படும் என்று மட்டுமே அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதனால் கரும்பு விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்களாம்..

அப்செட்
எப்படியும் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் கரும்பு, வெல்லம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. எனவே, இந்த ஆண்டு கரும்பு, வெல்லமும் தமிழக அரசு அதிகளவில் கொள்முதல் செய்யும் என்றும் நம்பப்பட்டு வந்தது.. ஆனால், அப்படி எதுவுமே இல்லாமல், இந்த வருட பொங்கல் அறிவிப்பு, தங்களுக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டதாக கரும்பு விவசாயிகள் கருதுகிறார்களாம்.. எனினும், கரும்பு விவசாயிகளின் அதிருப்தியை போக்கும்வகையில், விரைவில் தமிழக அரசு, முக்கிய அறிவிப்பினை வெளியிடலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications