"அதுமட்டும்" நடந்தா பொழப்பு போச்சு! அதிமுகவில் குழி தோண்டிய குரூப்? எடப்பாடியாலேயே தடுக்க முடியாதாம்
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கட்சிக்குள் சிலர் வேறு மாதிரியாக காய் நகர்ந்தி வருவதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஒன்றரை மாதத்திற்கு பின் நேற்று நடைபெற்றது. இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இது பொதுக்குழு மூலம் எடுக்கப்பட்ட முடிவு. பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுத்த முடிவு.
அதனால் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். வழக்கில் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும். இதனால் கட்சி செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இன்றே வழக்கு விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

முடியாது
அதே சமயம் ஓ பன்னீர்செல்வம் தரப்பு தாங்கள் பதில் மனு தாக்கல் செய்ய 1 வாரம் அவகாசம் கேட்டது.இதையடுத்து ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் ஓ பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதேபோல் வழக்கு 30ம் தேதி இந்த மாதம் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் எடுத்துள்ள நிலையில் பாஜக மேலிடம் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கருதுகிறதாம்.சமீபத்தில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியையும், ஓ பன்னீர்செல்வத்தையும் ஒன்றாக சந்தித்தார்.

ஏன் இப்படி
மோடியை தனியாக சந்தித்து பேச இரண்டு பேருமே தனி தனியாக நேரம் கேட்டு இருந்தனர். ஆனால் இரண்டு பேருக்குமே தனியாக நேரம் கொடுக்கப்படவில்லை. மாறாக இரண்டு பேருமே விமான நிலையம் வாருங்கள், பிரதமர் மோடியை வரவேற்கலாம் என்று மட்டுமே இரண்டு பேருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று டெல்லி கொடுத்த சிக்னல் இது என்று கூறுகிறார்கள். ஆனால் எடப்பாடி இதை சுத்தமாக விரும்பவில்லையாம். எக்காரணம் கொண்டு ஓ பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி முறுக்கிக்கொண்டு இருக்கிறாராம்.

சேர கூடாது
அதேபோல் அதிமுகவில் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் சேர கூடாது என்றும் சிலர் காய் நகர்த்தி வருகிறார்களாம். அதன்படி அதிமுகவில் தென் மண்டல தலைவர்கள் பலர் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓ பன்னீர்செல்வம் போன பின் அவருடன் சேர்ந்து தென் மண்டல தலைவர்கள் பலர் அவரின் அணியில் இணைந்தனர். இவர்கள் எல்லாம் அதிமுகவில் கூண்டோடு தூக்கப்பட்டனர். இவர்களின் பொறுப்புகள் தற்போது எடப்பாடி அணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதாவது எடப்பாடி அணியில் அவருக்கும் ஆதரவாக இருக்கும் தென் மண்டல நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் எல்லோரும் ஓ பன்னீர்செல்வத்தை தீவிரமாக எதிர்த்து வருகிறார்களாம்.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் கொண்டு வர வேண்டாம். உங்களுக்கு முக்குலத்தோர் ஆதரவு நாங்கள் கொண்டு வருகிறோம். முக்குலத்தோர் எல்லோருக்கும் அவர் மட்டும் பிரதிநிதி கிடையாது. நாங்கள் இருந்ததால்தான் அவர் வளர்ந்தார். நாங்களே கட்சிக்குள் முக்குலத்தோர் ஆதரவை மீண்டும் கொண்டு வருவோம். தென் தமிழகத்தில் 2-3 மீட்டிங்குகளை போடுங்கள். பிறகு ஆதரவு எல்லாம் தானாக உங்களுக்கு வந்துவிடும். அதை பற்றி கவலை வேண்டாம். ஆனால் ஓ பன்னீர்செல்வம் வந்தால் உங்களுக்கான சப்போர்ட் போய்விடும். உங்களை அவர் ஓரம்கட்டிவிடுவார் என்று தென் மண்டல தலைவர்கள் சிலர் கூறி வருகிறார்களாம்.

பிரஷர்
இவர்கள் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்க்க காரணம் இருக்கிறது. அதன்படி ஓ பன்னீர்செல்வம் மீண்டும் உள்ளே வந்தால் அவரின் ஆதிக்கம் அதிகரிக்கும். அதோடு அவர் ஆட்களும் உள்ளே வருவார்கள். அவர்களின் ஆதிக்கமும் அதிகரிக்கும். அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டி இருக்கும். அப்படி செய்தால் தங்களுக்கு இருக்கும் பதவி போய்விடும். ஓபிஎஸ் சென்றதால் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் உயர் போஸ்டிங்குகளை பெற்றுள்ளனர். ஓபிஎஸ் திரும்ப வந்தால் இந்த பதவி தங்களை விட்டு போய்விடும் என்று இவர்கள் கருதுகிறார்களாம். இதனால் இவர்கள் எடப்பாடியை ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக முறுக்கிவிட்டுக்கொண்டு இருக்கிறார்களாம். எடப்பாடியே நினைத்தாலும் இவர்கள் ஓ பன்னீர்செல்வத்தை உள்ளே விட மாட்டார்கள் போல.. அந்த அளவிற்கு சிலருக்கு பதவி ஆசை இருக்கிறது என்கிறார்கள்.. விவரம் அறிந்த ரத்தத்தின் ரத்தங்கள்!
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications