நமது வரிப்பணம் ஏன் வீணடிக்கப்பட வேண்டும்? லீமா ரோஸ், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா ஏழைகளா.. கஸ்தூரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் காரும், டிரைவர் படிகளாக மாதந்தோறும் ₹75,000 மற்றும் உதவியாளர் படிகளாக ₹25,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுபோன்ற ஆடம்பர வசதிகளைச் செய்து தருவதற்காகவா நமது வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டும்? லீமா ரோஸ் மார்ட்டின், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா, எ.வ.வேலு, செங்கோட்டையன், வன்னியரசு, ரேவந்த் சரண் போன்ற மிகவும் ஏழை எளியவர்கள் உட்பட அனைவருக்குமா? என்று நடிகை கஸ்தூர் கேள்வி எழுப்பி உள்ளார்.

முதலமைச்சர் விஜய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் காரும், டிரைவர் படிகளாக மாதந்தோறும் ரூ.75,000 மற்றும் உதவியாளர் படிகளாக ரூ.25,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Are Leema Rose Udhayanidhi Aadav Arjuna and E V Velu poor Actress Kasthuri lashes out

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுபோன்ற ஆடம்பர வசதிகளைச் செய்து தருவதற்காகவா நமது வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டும்? லீமா ரோஸ் மார்ட்டின், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா, எ.வ.வேலு, செங்கோட்டையன், வன்னியரசு, ரேவந்த் சரண் போன்ற மிகவும் ஏழை எளியவர்கள் உட்பட அனைவருக்குமா?

இந்த "ஏழை" மக்கள் ஏற்கனவே மாதச் சம்பளமாக ரூ.1,05,000 (ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்) பெறுகிறார்கள் என்பதையும், சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மட்டும் தினமும்ரூ.₹500 பெறுகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!

என்ன முட்டாள்தனம் இது? சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையான மக்களைப் போலப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தட்டும், சாதாரண மனிதனைப் போல நடந்து செல்லட்டும். இந்த 5 நட்சத்திர ஆட்சிமுறையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். மேயர்களும் நகராட்சி அதிகாரிகளும் ஏற்கனவே பெறுகிறார்கள் என்பதுதான் இதற்கான தர்க்கம் என்றால்- அவர்களுடன் போட்டி போடுவதற்குப் பதிலாக, முதலில் அந்த தண்டச் செலவுகளை வெட்டுங்கள் என்று சொல்கிறேன்!

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் ₹2 லட்சம் கடன் சுமை இருக்கிறது.பலர் என் மீது விரல் சுட்டுவார்கள், முதலில் தெரிந்து கொள்ளுங்கள்- என்னிடம் இருப்பது எதுவாக இருந்தாலும், அதில் ஒற்றைப் பைசா கூட மக்கள் பணம் இல்லை. என்னிடம் கார் இல்லை.

நேர்மையான/நடைமுறை ரீதியிலான காரணங்களுக்காக நான் பெரும்பாலும் மெட்ரோ, ஆட்டோ மற்றும் பேருந்துகளில்தான் பயணம் செய்கிறேன். மக்களை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்கு இதுவே வழி. முன்னுதாரணமாக எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழி இதுதான்.

உண்மையான சமூக சேவகர்களும், நேர்மையான பத்திரிகையாளர்களும் இந்த சட்டமன்ற உறுப்பினர்களை விட சுயநலமின்றி எவ்வளவோ வேலைகளைச் செய்கிறார்கள், ஆனால் இந்தச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஆடம்பரம் தேவையா?

அம்பானி, அதானியிடம் வேலை செய்யும் டிரைவர்களுக்குக் கூட அதிகபட்சமாக ₹30,000 தான் சம்பளம் கிடைக்கும், அப்படியிருக்க இந்த "மகத்தான தியாகிகளுக்கு" மட்டும் இலவச கார், மாதம் ₹1 லட்சம் எதற்கு? அதோடு ₹1 லட்சம் சம்பளம், வருகைப் பதிவு ஊக்கத்தொகை வேறு!!! இவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதில்லை, இலவசத் தங்கும் வசதி மற்றும் இலவச ரயில் பயணத்திற்கும் தகுதியானவர்கள்...

முதலமைச்சர் விஜய், இந்த அதிர்ச்சிகரமான செலவினத்தை உடனடியாகத் திரும்பப் பெறுங்கள்!" இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தள பக்கதில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+