ஸ்டாலின் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா?.. வைகோவுக்கு தெரியுமா?.. சூப்பராக வலையை விரிக்கும் பாஜக..!
மதிமுக அதிருப்தியாளர்கள் பாஜகவில் இணைவதாக கூறப்படுகிறது
சென்னை: எம்பி தேர்தலை குறி வைத்து இப்போதே தமிழக பாஜக காய் நகர்த்தி வருகிறது.. அதன் ஒருபகுதியாக மதிமுக மீது வலையை வீசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாகவே மதிமுகவில் அதிருப்தி நிலவி வருகிறது.. கட்சியின் தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்படுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், வழக்கறிஞர் அணிச் செயலாளர் பாரத மணி ஆகிய 5 பேர் மட்டும்தான் அப்போது போர்க்கொடி தூக்கினர்.

அதிருப்தி
இதற்கு பிறகுதான் மேலும் அதிருப்தியாளர்கள், சீனியர்கள் என பெருகினர்.. வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட ஒரு கட்சியிலேயே வாரிசு அரசியல் எழலாமா? என்று தலைமைக்கு எதிராக கொந்தளித்தனர்.. இதுக்கு பேசாமல் திமுகவுடனேயே கட்சியை இணைத்து விடலாம் என்றும் கோரிக்கை விடுத்தனர்.. ஆனால், இதை மதிமுகவின் இன்னொரு தரப்பு கண்டுகொள்ளவே இல்லை.. இந்த கோரிக்கையும் பரிசீலிக்கவில்லை.

குழப்பம்
கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, திமுகவுடன் கட்சியை இணைப்பது குறித்து விஷமத்தனமாகப் பேசிவருகிறார்கள் என்றும், இவர்கள் எல்லாம் சீட் கேட்டு கிடைக்காத விரக்தியில், ஆதங்கத்தில், பொருமலில் இப்படியெல்லாம் பேசி வருவதாகவும் பதிலுக்கு குற்றஞ்சாட்டப்பட்டது.. அதிருப்திக்கு உள்ளானவர்கள் இல்லாமலேயே பொதுக்குழு கூடி முடிந்துவிட்ட நிலையில், இது மேலும் கட்சிக்குள் சலசலப்பை, முணுமுணுப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாஜக
இப்படிப்பட்ட சூழலில்தான் பாஜக என்ட்ரி தருகிறது.. திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள் என்பதை பார்த்து, அவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கும் வேலையை தமிழக பாஜக நன்றாக செய்யும்.. இதை சிறப்பாக செய்தவர் எல்.முருகன்தான்.. விபி துரைசாமி முதல் குஷ்பு வரை பாஜக பக்கம் திருப்பிய பெருமை இவரையே சாரும்.. ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள், விஐபிக்களை கட்சிக்குள் இணைத்த பெருமையும் முருகனையே சாரும் என்பதை மறுக்க முடியாது.

கவனம்
அந்த வகையில், திமுக, அதிமுகவையும் தாண்டி, இப்போது மதிமுக பக்கம் பாஜகவின் கவனம் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, மதிமுகவில் வாரிசு அரசியலை எதிர்க்கும், 10 மாவட்ட செயலர்கள், மூன்று உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சிகள் துவங்கி விட்டதாம்.. பொதுக்குழுவில் இவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அதிருப்தியாளர்களை வைகோ கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றாலும், மாற்று கட்சிகளை இவர்கள் தேடி கொண்டுதான் இருக்கிறார்கள் என தெரிகிறது.

ஸ்டாலின்
காரணம், கடந்த மாதமே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைவதற்கு அதிருப்தியாளர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் பரபரத்தன.. மேலும் சிலர் அண்ணா அறிவாலயத்தையே இன்னமும் வட்டமடித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.. ஆனால், ஒரு விஷயத்தில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்.. கூட்டணியில் மதிமுக இருப்பதால், அதிருப்தியாளர்களை சேர்ப்பதில் தயக்கம் காட்டுகிறார்.. ஒருவேளை வைகோ விரும்பினால் இணைப்பு பற்றி முதல்வர் யோசிக்கலாம் என தெரிகிறது.. மற்றபடி வைகோவை மீறி, மதிமுகவினரை கட்சிக்குள் சேர்க்க இதுவரை திமுக தலைமை தயாராக இல்லை என்கிறார்.

திமுக? பாஜக?
இதைதான் பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளது.. திமுக பக்கம் இல்லையென்றால், அடுத்த மாற்று கட்சி பாஜகதான் என்பதை உணர்ந்து, அதிருப்தியாளர்களுக்கு வலைவிரித்து வருகிறதாம்.. இப்போது மதிமுக சீனியர்கள் குழம்பி போய் உள்ளனர்.. திமுகவா? பாஜகவா? எங்கு சேருவது என்ற முடிவு தெரியாமல் தவிக்கின்றனர்.

குழப்பம்
அதனால், ராஜ்யசபா தேர்தலுக்கு முன்பு, திமுகவில் அதிருப்தியாளர்களை சேர்க்கும் முடிவை, முதல்வர் ஸ்டாலின் எடுக்கவில்லை என்றால், பாஜகவில் இணையலாம் அல்லது அதிமுகவில் கூட இணையலாம் என்ற முடிவில் உள்ளனராம். பெரும்பாலும் தென்மாவட்ட மதிமுகவினர், பாஜகவில் இணையவே ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.. ஆனால் அதற்குள் அதிருப்தியாளர்களை அழைத்து வைகோ பேசுவாரா? சமாதானப்படுத்துவாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications