3 பக்கமும் அடி.. எடப்பாடிக்கு எதிராக இஸ்லாமிய வாக்குகள்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்.. அலறும் அதிமுக
சென்னை: திமுகவினருக்கு எதிராக இஸ்லாமியர்கள் திரும்பி சிறுபான்மையினர் வாக்குகள் சென்றுவிடும் என்றும் சொல்ல முடியாது. இஸ்லாமியர்களை விடுதலை செய்ய ஏற்கனவே அரசு பரிந்துரை செய்துவிட்டது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர்தான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார். அப்படி இருக்க எடப்பாடி இதில் ஸ்டாலினை எப்படி எதிர்க்க முடியும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். அவரின் இந்த பேட்டி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி: அதில், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போல பேசும் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை ஏன் கேள்வி கேட்க மறுக்கிறார். ஆளுநர் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய கையெழுத்து போடவில்லை. அதை ஏன் இவர் கேட்கவில்லை. சிஏஏவிற்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதற்கு கூட எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிக்கவில்லையே. இப்போது கூட அவர் மோடியை எதிர்க்கவில்லையே. மோடி பெயரை சொல்லவில்லையே. ஏன்?
இப்போதும் கூட திமுகவை மட்டும்தானே எடப்பாடி பழனிசாமி எதிர்க்கிறார். ஏன் ஆளுநரை பற்றி பேசவில்லை. 4 வருடம் ஆட்சியில் இருந்த போது மோடி தயவு.. டெல்லி தயவு எடப்பாடி பழனிசாமிக்கு தேவைப்பட்டது. அதனால் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று ஆதரவு கொடுத்தார். இப்போதுதான் கூட்டணியில் இல்லையே. ஆட்சியில் இல்லையே. இப்போது பாஜகவை எதிர்க்க வேண்டுமே? இப்போது ஏன் அவர் ஆளுநர் ரவியை பற்றி பேசுவது இல்லை.
( விபூதியை அழித்த எடப்பாடி.. புத்தம் புதிய தோற்றம்.. ஆளே மாறிட்டாரே.. பின்னாடி பகிரங்க பிளான்!)
திமுகவினருக்கு எதிராக இஸ்லாமியர்கள் திரும்பி சிறுபான்மையினர் வாக்குகள் சென்றுவிடும் என்றும் சொல்ல முடியாது. இஸ்லாமியர்களை விடுதலை செய்ய ஏற்கனவே அரசு பரிந்துரை செய்துவிட்டது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர்தான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார். அப்படி இருக்க எடப்பாடி இதில் ஸ்டாலினை எப்படி எதிர்க்க முடியும். அவர் ஆளுநரைத்தானே எதிர்க்க முடியும்? அவர் ஆளுநரிடம்தானே கேட்க முடியும். ஆனால் அங்கே கேட்கவில்லையே. இஸ்ரேல் - பாலஸ்தீனம் போருக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எதுவும் சொல்லவில்லையே.
வாக்குகள் பிரியும்: இஸ்லாமியர்களை வைத்துக்கொண்டு மட்டும் வெற்றிபெற்றுவிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுபான்மையினரை தாண்டி மோடிக்கு எதிராக ஒரு வாக்கு உள்ளது. காங்கிரசை நம்பி திமுகவிற்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் செல்கிறது. சிறுபாண்மையினரை நம்பி மட்டும் எடப்பாடி வெல்ல முடியாது. அந்த வாக்குகள் + மோடி எதிர்ப்பு வாக்குகள் + நடுநிலை வாக்குகள் இவற்றைபெற வேண்டும். இதை எல்லாம் செய்தால்தான் எடப்பாடி வாக்குகளை வெல்ல முடியும்.

ஆனால் இதை எல்லாம் சொல்லாமல் எடப்பாடி வெல்ல முடியும். எடப்பாடி விமர்சனம் வைக்கிறார் அதனால் எடப்பாடி பதிலடி கொடுக்கிறார். எடப்பாடி அதனால் வளர்ந்துவிட்டார்.. ஸ்டாலினுக்கு எதிராக நிற்கிறார் என்று சொல்ல முடியாது. சிறுபான்மையினரை மட்டும் ஆதரித்து பேசி அவர்கள் வாக்குகளையும் வாங்க முடியாது. மற்றவர்களின் வாக்குகளையும் வாங்க முடியாது. வாக்குகளை வெல்ல வேண்டும் என்றால் முழுக்க முழுக்க மோடியை எடப்பாடி எதிர்க்க வேண்டும்.
சீமான் எப்படி மோடிக்கு எதிரான வாக்குகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தை பெறுகிறார். அது போல இவரும் வாக்குகளை பெற வேண்டும். அதற்கு நீண்ட காலம் எடப்பாடி மோடியை எதிர்த்து பேச வேண்டும். அப்படி பேசினால் வேண்டுமானால் கொஞ்சம் வாக்குகள் எடப்பாடிக்கு கிடைக்கலாம். ஆனால் அது கிடைக்குமா என்பது சந்தேகம். ஒருவருடமாவது எடப்பாடி இதற்காக உழைக்க வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications