விபூதியை அழித்த எடப்பாடி.. புத்தம் புதிய தோற்றம்.. ஆளே மாறிட்டாரே.. பின்னாடி பகிரங்க பிளான்!
சென்னை: எடப்பாடியிடம் நான் பார்த்த ஒரே மாற்றம் அவர் நெற்றியில் விபூதி இல்லை. எப்போதும் விபூதியுடன் வருவார். அது இப்போது இல்லை. அந்த விபூதியை அழித்துவிட்டு வருகிறார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். கிட்டத்தட்ட 1 மாதம் ஆக போகிறது இந்த கூட்டணியை முறித்து. இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.
இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தீவிரமாக முயல்கிறாரோ.. அதுதான் அவரின் திட்டமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி: அதில், இதுவரை மோடிக்கு மட்டுமே ஸ்டாலின் பதிலடி கொடுத்து வந்தார். இப்போது மோடி - எடப்பாடி ஒன்றாக இல்லை என்பதால் எடப்பாடிக்கும் சேர்த்து ஸ்டாலின் பதிலடி கொடுத்து வருகிறார். எடப்பாடி விமர்சனம் வைக்கிறார் அதனால் எடப்பாடி பதிலடி கொடுக்கிறார். எடப்பாடி அதனால் வளர்ந்துவிட்டார்.. ஸ்டாலினுக்கு எதிராக நிற்கிறார் என்று சொல்ல முடியாது. அவருக்கு சிறுபான்மையினர் வாக்குகள் சென்றுவிடும் என்றும் சொல்ல முடியாது.
திமுக மீது இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை. இஸ்லாமியர்களும் திமுகவை எதிர்க்கவில்லை. அப்படி இருக்க திமுகவினருக்கு எதிராக இஸ்லாமியர்கள் திரும்பி சிறுபான்மையினர் வாக்குகள் சென்றுவிடும் என்றும் சொல்ல முடியாது. இஸ்லாமியர்களை விடுதலை செய்ய ஏற்கனவே அரசு பரிந்துரை செய்துவிட்டது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர்தான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார். அப்படி இருக்க எடப்பாடி இதில் ஸ்டாலினை எப்படி எதிர்க்க முடியும்.
அவர் ஆளுநரைத்தானே எதிர்க்க முடியும்? அவர் ஆளுநரிடம்தானே கேட்க முடியும். ஆனால் அங்கே கேட்கவில்லையே. இஸ்ரேல் - பாலஸ்தீனம் போருக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எதுவும் சொல்லவில்லையே. அவர் சொல்லி இருக்கலாமே. அவர் ஏன் எதுவும் பேசவில்லை. எடப்பாடியிடம் நான் பார்த்த ஒரே மாற்றம் அவர் நெற்றியில் விபூதி இல்லை. எப்போதும் விபூதியுடன் வருவார். அது இப்போது இல்லை.

அந்த விபூதியை அழித்துவிட்டு வருகிறார். அவரிடம் பார்த்த ஒரே மாறுதல் இதுதான், சிறுபான்மையினரை அரவணைக்க வேண்டும். அவர்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று இப்படி செய்கிறாரோ என்று தோன்றுகிறது. அவரின் சமீபத்திய கூட்டங்களில் எல்லாம் நான் கவனித்தேன். அவர் விபூதி இல்லாமல் வருகிறார். இப்படி செய்தால் சிறுபான்மையினரை இழுக்கலாம் என்று அவர் நினைக்கிறார் போல. ஆனால் அது எல்லாம் நடக்காது.
விபூதி இருக்கோ.. இல்லையோ அவர் என்ன பேசுகிறார் என்பதே முக்கியம். அவர் பேசுவதை வைத்தே அவரின் அரசியல் இருக்கும். அவர் விபூதி வைத்துக்கொண்டு மோடியை எதிர்த்தால் கூட மக்கள் நம்புவார்கள். ஆனால் அவர் அதை செய்வது இல்லையே. அவரின் செயல்களில் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் வரவில்லை என்றால் எதுவும் நடக்காது, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications