அண்ணனின் கட்சியில் கை வைக்கும் "அண்ணன்".. நாம் தமிழர் ஆட்களை கொத்தாக தூக்கிய விஜய்? அஸ்திவாரமே ஆடுது
சென்னை: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் வரும் நாட்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாம் தமிழர் கட்சியில் தற்போது உட்கட்சி மோதல் எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் தமிழரில் இருந்து பலர் வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி பெரிய பிளவை சந்தித்தது. தற்போது மீண்டும் நாம் தமிழரின் அஸ்திவாரம் ஆட தொடங்கி உள்ளது. அந்த கட்சியில் மீண்டும் கட்சி மாறும் படலம் தொடங்கி உள்ளது.

அதன்படி முதல் ஆளாக கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அண்மையில் அறிவித்தனர். இதுதான் நாம் தமிழர் கட்சியின் பிரிவினைக்கு தொடக்க புள்ளியாக இருந்தது.
அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் சுகுமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கட்சியில் மேலும் பிரச்னையை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் யாரையும் தடுத்து நிறுத்த நாம் தமிழர் கட்சியின் சீமான் நினைக்கவில்லை. போனால் போகட்டும்.. கட்சி யாரையும் நம்பி இல்லை என்று சீமான் கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
எங்கே செல்கிறார்கள்; இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் வரும் நாட்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாம் தமிழர் கட்சியில் தற்போது உட்கட்சி மோதல் எழுந்துள்ளது.
த.வெ.க. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விக்கிரவாண்டியில் விரைவில் தவெக முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். முக்கியமாக சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் முடுக்கி விட்டு உள்ளாராம்.
நடிகர் விஜயின் கட்சியில் 5 முக்கியமான நிர்வாகிகள் சேர உள்ளனர். ஏ என்ற இனிஷியல் கொண்ட நபரும்.. இதற்கு முன் நடிகர் ஒருவருக்கு ஆதரவாக இருந்த 2 நபர்களும், திமுக அதிமுகவில் இருந்த 2 பேரும் விஜயின் தமிழக வெற்றிகழக கட்சியில் இணைய உள்ளார்களாம். அந்த வகையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை அணுகியுள்ளனர். அதிமுகவில் தன்னை கட்சித் தலைமை கண்டு கொள்ளாமல் இருப்பதால், அவரும் விஜய் கட்சிக்கு தாவி விடலாமா ? என்று தனது நலன் விரும்பிகளிடம் விவாதித்திருக்கிறார்.
நிர்வாகிகள் வருகை: இதற்கு இடையில்தான் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் வரும் நாட்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாம் தமிழர் கட்சியில் தற்போது உட்கட்சி மோதல் எழுந்துள்ளது. இதை பயன்படுத்தி நாம் தமிழர் நிர்வாகிகள் விஜய் பக்கம் வரலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications