Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரம்பலூர் டூ மதுரை.. திமுகவில் சேரும் "கட்சி".. இதோ ஸ்டார்ட் ஆயிடுச்சு.. கருவாடு மீண்டும் மீனாகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்படி இணையும்பட்சத்தில், சீட் விவகாரங்களில் முரண்பாடு ஏற்படும் என்றும் கணிக்கப்படுகிறது.

அதிமுக கூட்டணி வலுவாக இல்லை.. இன்னும் யாருமே அதிமுகவுடன் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை.. அந்தவகையில், இப்போதைக்கு திமுக கூட்டணி மட்டுமே வலுவாக உள்ளது..

Are new parties joining the DMK alliance soon and What are IKJ, DMDK and Kamals MNK going to do

இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய முயன்று கொண்டிருப்பதாக தெரிகிறது. இதில் கிட்டத்தட்ட உறுதியானது மக்கள் நீதி மய்யமாக உள்ளது.. பாஜக எதிர்ப்பினை கமல்ஹாசன் தொடர்ந்து பதிவு செய்துவருவதால், அதிமுகவைவிட, திமுக - காங்கிரஸ் கூட்டணியே, கமலுக்கு சாதகமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது..

கமல்ஹாசன்: அதனால்தான், கமலுக்கு மட்டும் ஒரு இடம் ஒதுக்குவதற்கு, திமுக கூட்டணியில் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இருந்தாலும், எப்படியாவது 2 இடங்களை, திமுக மேலிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என்பதிலும் மய்யத்தினர் உறுதியாக இருக்கிறார்களாம்.. எனினும், மய்யத்துக்கு ஒரு சீட், அதுவும் கமல் போட்டியிட மட்டுமே, அந்த ஒரு சீட் முடிவாகியிருக்கிறதாம்.. ஆனால், கோவையில் நிற்க விரும்புகிறார் கமல்ஹாசன்..

இது குறித்து ஸ்டாலினிடம் ஏற்கனவே அவர் தெளிவுப்படுத்தி விட்டார். ஸ்டாலினும் "நல்லது நடக்கும்" என்று மட்டும் சொன்னாரே தவிர, கமலுக்கு எந்தவிதமான உறுதியான தகவலும் தரவில்லை..

இடதுசாரிகள்: காரணம், கோவை எம்.பி. தொகுதியானது, இடதுசாரிகள் வசம் இருக்கிறது. கமல், கோவையை கேட்கிறார் என்றதுமே, சிபிஎம் தலைமை திமுக மேலிடத்திடம் பேசியிருக்கிறது..

"சிட்டிங் தொகுதியை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.. தொகுதியில் நிறைய வளர்ச்சி பணிகளை செய்து வந்துள்ளோம்.. அதனால் தொகுதியை எங்களிடமிருந்து பறித்து விடாதீர்கள்" என்று ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார்களாம். அதனால்தான், கோவை தொகுதி வேண்டும் என்று கமல் கேட்டதற்கு, "நல்லது" நடக்கும் என்று மட்டும் சொன்னாராம்.

சிட்டிங் தொகுதி: அதேசமயம், பெரம்பலூர் தொகுதியை கமலுக்கு ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக தெரிகிறது. காரணம், இந்த தொகுதியில் அமைச்சர் சிவசங்கருக்கும், ஆ.ராசாவுக்கும், பூசல்கள் வெடித்து வருவதால், இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே, பெரம்பலூரை கமலுக்கு ஒதுக்கிவிடலாம் என நினைக்கிறாராம்.. ஆனால், இதனை கமல் ஏற்பாரா? என்று தெரியாது.

பாரிவேந்தர்: இதே பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே தலைவர் பாரிவேந்தரும் போட்டியிட போவதாக சொல்கிறார்கள்.. இந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை பாரிவேந்தர் தொடர்ந்து செய்து வரும்நிலையில், பாஜக கூட்டணிக்கு தாவ போவதாக சொல்கிறார்கள்.. எனவே, பெரம்பலூரையே இந்த முறையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜக மேலிடத்திடம் கோரிக்கை வைக்க, அதற்கு மேலிடமும் ஓகே சொல்லிவிட்டதாம்.

எனவே, தற்போது உதயசூரியன் சின்னத்திலுள்ள பாரிவேந்தர், வரும் தேர்தலில் உதயசூரியன் எதிரான சின்னத்தில் களமிறங்க போவதால் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணி: அதுபோலவே, மதுரை தொகுதியை திமுக யாருக்கு ஒதுக்க போகிறது என்று தெரியவில்லை.. அஞ்சாநெஞ்சர் முக அழகிரி, திமுக மேலிடத்துடன் ராசியாகி உள்ளதால், துரை தயாநிதிக்கு மதுரையை ஒதுக்கலாம் என்கிறார்கள். அப்படியானால், "சிட்டிங் தோழரான", சு.வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிட முனைந்தால், கூட்டணிக்கு மதுரையை ஒதுக்க முடியாமல் போய்விடுமோ? என்ற கலக்கம் சிபிஎம் கட்சியை கவ்விக் கொண்டுள்ளது.

அதுபோலவே, தேமுதிகவும் கூட்டணிக்காக முயன்று கொண்டிருக்கிறது.. திமுகவுடன் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், விருதுநகர் தொகுதியிலேயே பிரேமலதா இந்த முறையும் போட்டியிட முயலலாம் என்கிறார்கள்.. ஆனால், இதே விருதுநகர் தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்க திமுக ஒதுக்க நேர்ந்தால், சீட் ஒதுக்கீடு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரபரப்பு: ஆக, இன்னும் கூட்டணியே உறுதியாகாத நிலையில், தொகுதி பஞ்சாயத்துக்கள் இப்பவே தலைதூக்க தொடங்கி விட்டதால், தமிழக அரசியல் களமே அனலடித்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+