அரசு அதிகாரிகள் இப்படி செய்யலாமா.. சட்டசபை டூ முதல்வர் விஜய் பேச்சு வரை.. தடுமாறும் தவெக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியில் அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குற்றச்சாட்டுகளை எல்லாம் பார்க்கும் போது, அதிகாரிகள் தவெக ஆட்சியில் சரியாக இல்லை என்றும், அவர்கள் மனம் போன போக்கில் செயல்படுவதாகவும் சில அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். முதல்வர் விஜய் சரியான முடிவெடுத்து அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்றால், தவெக அரசுக்கு தர்மசங்கடத்தில் போய் நிறுத்தும் என்றே எச்சரிக்கிறார்கள்.

தமிழக சட்டசபையில் நேற்று திமுக எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசுகையில், தவெக கூட்டணி அரசு பதவியேற்ற பின் நாங்கள் ஆயிரக்கணக்கான கேள்விகளை கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்பதால் கேள்வி நேரம் வைக்கப்படவில்லை. இதனால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

Are Officials Crossing Boundaries From Assembly to CM Vijay s Speech TVK Govt Fails to Act

கேள்விகள் கொடுத்து 93 நாட்கள் ஆகிவிட்டது. விதிப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் பதில்கள் தயாரிக்க வேண்டும் அதிகாரிகள் மெத்தனபோக்கால் கால தாமதம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காதவர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கத்தை சபாநாயகர் கேட்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் அனுப்பாமல் தாமதப்படுத்துவதும் அவையை அவமதிக்கும் செயல் என்று கூறினார்.

திமுக எம்எல்ஏவும், முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் பேசும் போது, கடந்த சட்டமன்ற நிகழ்வுகளில் 2001ல் 20 கேள்விகளுக்கு கூட விடைகள் அளிக்கும் சூழல் இருந்தது. இவை எல்லாம் கடந்த காலங்களில் நடந்தவை. நான் அமைச்சராக இருந்த போது எனக்கு மட்டும் 2 கவன ஈர்ப்பு மற்றும் கேள்விகள் வரும். சட்டசபையில் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை அந்தந்த தொகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

இதையடுதத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறும் போது, நான் குறிப்பேடுகளை எடுத்து பார்த்தேன். கடந்த காலத்திலும் நீண்ட நாட்களாக பதில் வராத கேள்விகள் உள்ளன. 2021 கொடுத்த கேள்விகளுக்கு 2025 ஆம் ஆண்டு வரை பதிலே வராமலும் இருந்திருக்கிறது. ஆனாலும் நான் அதிகாரிகளிடம் விரைவாக பதில்களை தயாரித்து அனுப்புங்கள் என கூறியுள்ளேன். தற்போது 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் வந்துள்ளன. ஆனால் ஒரே துறையின் பதிலாக இருப்பதால் கூடுதலாக பதில் வந்தவுடன் விரைவில் கேள்வி நேரம் சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்.

சட்டப்பேரவையில் சபாநாயகர் அமர்ந்ததும் உடன் அதிகாரிகள் அமர வேண்டுமல்லவா.. ஆனால் எந்த அதிகாரியும் வந்து அமரவில்லை என்று நேற்று சட்டசபையிலேயே அதிகாரிகள் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கேள்வி எழுப்பினார். பொதுவாக துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, அந்தத் துறையின் முதன்மைச் செயலாளர், துறை சார்ந்த உயராதிகாரிகள் சட்டசபையின் 'அதிகாரிகள் மாடத்தில்' கண்டிப்பாக அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் அமரவில்லை என்ற குற்றச்சாட்டினை தளவாய் சுந்தரம் முன்வைத்த போது, உண்மையிலேயே அப்படி நடந்திருந்து நேற்று..

இது ஒருபுறம் எனில் அண்மையில் கம்யூனிஸ்டுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க குஜிலியம்பாறை வட்டாட்சியர் உத்தரவிட்டார். இதேபோல் கல்லூரிகளில் இடதுசாரிகள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்று ஒரு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் அண்மையில் அமைச்சர் விக்னேஷ் போது, எழுதி கொடுத்த பதில் சரியானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்தது. அதேபோல் முதல்வர் விஜய், தொகுதி மறுவரையறை விஷயத்தில் 543 என்றே நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அமித்ஷா முன்பு அவரது கருத்து மாறி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவும் அதிகாரிகளின் வேலை தான் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்த புகார்கள் குற்றச்சாட்டுகளை எல்லாம் பார்க்கும் போது, அதிகாரிகள் தவெக ஆட்சியில் சரியாக இல்லை என்றும், அவர்கள் மனம் போன போக்கில் செயல்படுவதாகவும் சில அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். முதல்வர் விஜய் சரியான முடிவெடுத்து அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்றால், தவெக அரசுக்கு தர்மசங்கடத்தில் போய் நிறுத்தும் என்றே எச்சரிக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளை கொண்டுள்ள திமுகவே அதிகாரிகள் விஷயத்தில் நிறைய முறை கடந்த காலங்களில் ஏமாந்துள்ளது என்றும், தவெகவும் இதற்கு விதிவிலக்கல்ல என்றும் கூறுகிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+