"விடியல்".. ராமதாஸ் அப்படி சொன்னதும் திரும்பி பார்த்த கூட்டம்! திமுக + பாமக! உருவாகும் பழைய கூட்டணி?
சென்னை: பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிறுவனர் ராமதாஸ் பேசிய விஷயங்கள் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு முன்பாக அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிய போது, தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளை எடப்பாடி "கண்ட்ரோல்" செய்யவில்லை என்று ராமதாஸ் வெளிப்படையாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
அதிமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வைத்து இருந்தார். கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. அதிமுகவிற்கு ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை.

அதிமுக - பாமக
இதனால் தேர்தல் நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நிர்வாகிகளை சரியாக கட்டுப்படுத்த எடப்பாடிக்கு தெரியவில்லை. இதனால் எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதில் பலன் இல்லை என்று கூறி ராமதாஸ் அதிமுகவுடனான கூட்டணியை விமர்சனம் செய்துள்ளார். எடப்பாடியை வெளிப்படையாக விமர்சனம் செய்துவிட்டு ராமதாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். இப்படிப்பட்ட ராமதாஸ் மீண்டும் அதிமுகவின் மெகா கூட்டணியில் இணைவாரா என்பது சந்தேகம். ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே அதிமுகவை அன்புமணி கடுமையாக தாக்கி வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். நாங்கள் தனியாகத்தான் நிற்போம் என்று அன்புமணி ராமதாஸ் வருகிறார்.

திமுக
இந்த நிலையில்தான் எங்கே திமுகவுடன் பாமக நெருங்கி வருகிறதோ என்று கேள்வி எழுந்துள்ளது. ஆளும் திமுக அரசை பாமக பெரிதாக விமர்சனம் செய்வதே இல்லை. திமுகவின் சில திட்டங்களுக்கு அவ்வப்போது பாமக பாராட்டு அறிக்கை கூட வெளியிட்டு இருக்கிறது. அதோடு திமுகவிற்கு ஆதரவாக ஆளுநர் ஆர். என் ரவியை எதிர்த்தும் கூட பாமக அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறது. முக்கியமாக ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுகவிற்கு ஆதரவாக அறிக்கைகளை பாமக வெளியிட்டு வந்தது. இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் மாலை பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

கூட்டம்
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார். அதில், அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார். அந்த அளவிற்கு பாமகவின் குரலுக்கு மதிப்பு இருக்கிறது. சிலர் தினமும் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள், பேட்டி கொடுக்கிறார்கள், அப்படி ஏன் செய்யவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். சிலர் இப்படி விளம்பரத்திற்காக செய்வார்கள். விளம்பரத்திற்காக வாட்ச் காட்டுவார்கள். இதெல்லாம் நமக்கு தேவை இல்லை, என்று அன்புமணி ராமதாஸ் அண்ணாமலையை விமர்சனம் செய்து, திமுகவை பாராட்டுவது போல பேசி இருந்தார்.

ராமதாஸ்
இந்த நிகழ்வில் பேசிய ராமதாசும், விடியலுக்காக நாம் காத்திருக்கிறோம். விடியலுக்கு வெகு நேரம் இல்லை. பாமகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். நம் மக்கள் பாமகவின் தேவையை புரிந்து கொள்ள வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு நம்முடைய மிகப்பெரிய சாதனை. அந்த உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த நாம் பாடுபட வேண்டும். அதை கொண்டு வர போதிய அழுத்தத்தை நாம் கொடுக்க வேண்டும், என்று ராமதாஸ் பேசி இருந்தார். ராமதாஸ் இப்படி விடுயல் என்று சொன்னதுமே கூட்டத்தில் இருந்த பாமக நிர்வாகிகளே கொஞ்ச நேரம் ராமதாஸ் முகத்தை உற்று பார்த்தனர்.

நெருக்கம்
இவர்கள் இருவரின் பேச்சிலும் திமுகவை விமர்சனம் செய்யவில்லை. பொதுவாக பாமக பொதுக்குழுவில் பாமக ஆளும் கட்சி கூட்டணியில் இல்லை என்றால், ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்யும். ஆனால் இந்த முறை பாமக திமுகவை விமர்சனம் செய்யவே இல்லை. மாறாக விடியலுக்காக காத்திருக்கிறோம்.. விடியல் வெகு தொலைவில் இல்லை என்று கூட்டணிக்கு சிக்னல் கொடுப்பது போல பேசி இருக்கிறார் ராமதாஸ். அதிமுகவை கடுமையாக எதிர்க்கும் பாமக, ஏற்கனவே திமுகவுடன் நெருங்கி வருவதாக ஒரு பிம்பம் உள்ளது. இந்த நிலையில்தான் பொதுக்குழு கூட்ட பேச்சு.. திமுக + பாமக கூட்டணிக்கான விதையாக அமையுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications