என்னங்க சொல்றீங்க.. கண்ணசைத்த எடப்பாடி.. சொல்லாமல் கொள்ளாமல் சீமானுக்கு ஆதரவு? நீங்களே பாருங்க
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எங்கே சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக ஆதரவு தெரிவிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி அப்படி எதையும் சொல்லவில்லையே என்று நினைக்கலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ரகசியமாக இதில் காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ளது.

அதிமுக நிலைப்பாடு: இப்படிப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு கிட்டத்தட்ட மிக முக்கியமானதாக மாறி உள்ளது. அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. வடக்கில் அதிமுகவிற்கு நல்ல வாக்கு வாங்கி உள்ளது. முக்கியமாக விக்கிரவாண்டியில் 36 % வாக்கு வங்கி உள்ளது. அப்படி இருக்க அதிமுகவின் இந்த வாக்குகள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி உள்ளது.
அதிமுகவின் இந்த வாக்குகளை பெற தீவிரமான முயற்சிகளை பாமக, நாம் தமிழர் முயன்று வருகிறது. பாமக இங்கே பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் எப்பவும் போல தனியாக போட்டியிடுகிறது.
அன்புமணி மூவ்: இங்கே அன்புமணி அதிமுகவினர் ஆதரவை கேட்டுள்ளார். எம்ஜிஆர் ஜெயலலிதா போட்டோவை வைத்து அன்புமணி பிரச்சாரம் செய்கிறார். அதிமுக வாக்குகள் அப்படியே தங்களுக்கு வரும் என்று அன்புமணி நினைக்கிறார். அதிமுகவின் 30+ வாக்குகளை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதில் அன்புமணி தீவிரமாக களப்பணிகளை செய்து வருகிறார்.
சீமான் கோரிக்கை; இன்னொரு பக்கம் சீமானும் அதிமுகவின் ஆதரவை கேட்டுள்ளார். அன்புமணி போல போட்டோ எல்லாம் வைக்காமல் நேரடியாக சீமான் எடப்பாடி ஆதரவை கேட்டுள்ளார். அதில், கட்சி ஆரம்பிக்கும் முன்பு ஜெயலலிதாவை ஆதரித்து.. அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். இலங்கை போர் நடந்தது. என் சொந்தங்களை கொன்ற கூட்டத்திற்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்தேன். அதன்பின் 2011 தேர்தலில் மீண்டும் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்தேன்.
2014ல் மீண்டும் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். எந்த பிரதி பலனும் எதிர்பார்க்கவில்லை. பணம் வாங்கவில்லை. உண்டியல் குலுக்கித்தான் பிரச்சாரம் செய்தேன். இப்போது நாங்கள் விக்கிரவாண்டியில் நாங்கள் நிற்கிறோம். அதிமுக ஆதரவை கேட்கிறோம்.
அதிமுக - சீமான் கூட்டணி; நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன். இந்த ஒரு தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை. அப்படி இருக்க அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், என்று கேட்டுள்ளார்.
எடப்பாடி முடிவு என்ன?: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எங்கே சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக ஆதரவு தெரிவிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ரகசியமாக இதில் காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாமகவினருக்கு வாக்களிக்க கூடாது என்று எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளாராம். கட்சி மாவட்ட, கிளை செயலாளர்களை போனில் அழைத்து அதிமுக வாக்கு பாமகவிற்கு செல்ல கூடாது என்று உத்தரவிட்டு உள்ளாராம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவது 2026ல் பாமகவின் சீட் பேரத்திற்கு வலுசேர்க்கும். அவர்கள் 2026ல் நம்முடன் வந்தால் அதிக சீட் கேட்பார்கள். அதற்கு இடம் கொடுக்க கூடாது. பாமகவின் அரசியல் எழுச்சிக்கு அதிமுக உதவிடக்கூடாது.
திமுக எதிர்ப்பு வாக்குகள் எளிதாக பாமகவிற்கு சென்றுவிட கூடாது. மற்ற கட்சிகளுக்கு கூட போகலாம். பாஜக கூட்டணிக்கு செல்ல கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளிடம் பேசி உள்ளாராம். முன்னதாக அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் காரணமாகவே எடப்பாடி இப்படி ஒரு கோரிக்கையை வைத்து உள்ளாராம்.
இதன் மூலம் சீமானுக்கு ரகசியமாக ஆதரவு அளிக்க எடப்பாடி மூவ் செய்து வருகிறாரோ.. வெளிப்படையாக இல்லாமல் சீமானுக்கு அதிமுக மறைமுக ஆதரவை வழங்குகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications