Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதறுதா திமுக ஓட்டு.. "கேவலம், விஷத்தை குடிச்சிட்டு சாகலாம்".. சீமானின் 2 பிரம்மாஸ்திரம்.. பாஜக "ஆ"

திமுகவுக்கு எதிரான 2 வியூகங்களை சீமான் கையில் எடுக்க போகிறாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சி இந்த முறை 2 வகையான வியூகங்களை கையில் எடுத்துள்ளதாம்.. இந்த நகர்வை திமுக உற்றுநோக்கி வருகிறது.. அத்துடன் மிகுந்த எதிர்பார்ப்பையும் சீமான் களத்தில் ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த 2019 எம்பி தேர்தலின்போதே, 8 சதவிகிதம் வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் எண்ணமாக இருந்தது. ஆனால்.. அவர்களால் வெறும் 4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

ஏனென்றால் கமல் தனியாக கட்சி ஆரம்பித்து அப்போதுதான் முதல் தேர்தலையும் சந்தித்தார்.. அவரும் 4 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தார்.. அதனால்தான், நாம் தமிழருக்கு வந்திருக்க வேண்டிய ஓட்டுக்கள் கமலுக்கு சென்றது..

 சிங்கம் சிங்கிள்

சிங்கம் சிங்கிள்

அதேபோல சட்டமன்ற கமலுடன் சீமான் கூட்டணி வைப்பது போல ஒரு பேச்சு எழுந்தது.. அப்படி கூட்டணி வைத்தால், அதிமுக, திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களுடன், இவர்கள் 2 பேரின் வாக்குகளும் சேர்ந்து ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் என்றும் பெரிதாகவே நம்பப்பட்டது.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. சிங்கம் தனியாகத்தான் வேட்டையாடும், நாய், ஓநாய், பன்றிதான் கூட்டமாக வேட்டையாடும் என்று அவர் பாணியிலேயே கிண்டலாக சொல்லிவிட்டு நகர்ந்தார் சீமான்... எதிர்பார்த்தபடியே தனித்தும் களமிறங்கினார்.

சலசலப்பு

சலசலப்பு

தனித்து போட்டி என்ற நிலையில், கமலே கடந்த முறை கூட்டணி என்ற விஷயத்தில் இணைந்துவிட்டார்.. இந்த முறை, திமுக கூட்டணியிலேயே சாயும் நிர்ப்பந்தத்துக்கு வந்துள்ள நிலையில், சீமான் இன்னமும் தனித்து போட்டி என்பதில் உறுதியாக உள்ளார்.. 10 வருடமாக தனியாக தேர்தலை சந்தித்தும், ஒரு பலனுமில்லையே, கூட்டணி வைத்து போட்டியிட்டால்தான் தங்களுக்கும் எதிர்கால அரசியல் நிலைக்கும் என்று தம்பிகள் வலியுறுத்தியபோதும்கூட சீமான் மனம் மாறவேயில்லை.. தன்னுடைய கொள்கையையும் விட்டுக்கொடுக்கவில்லை.

 வோட் ஷேரிங்

வோட் ஷேரிங்

ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிட்டு, மலைபோன்ற கட்சிகளுடன் மோதி வரும் சீமானின் தைரியம் பேசப்பட்டு வருகிறது.. அந்தவகையில், இப்போதும் தேர்தலை தனித்து சந்திக்க தயாராகிவிட்டார்.. 40 தேர்தலிலும் போட்டியிடுவோம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார் சீமான்.. கடந்த முறை, பாஜக எதிர்ப்பு + அதிமுக அதிருப்தி ஓட்டுக்களை சீமான் பெற்றதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது.. இந்த முறை யார் ஓட்டை பிரிக்க போகிறாரோ என்ற கவலை, அதிமுக + திமுக + பாஜக கவலைகளுக்கு கூடுதலாக சேர்ந்துள்ளது.. வழக்கம்போல் பாஜக + திமுக இரண்டு கட்சிகளை குறி வைத்து அரசியல் செய்யும் சீமான் இந்த முறையும் அதே யுக்தியை கையில் எடுத்துள்ளார்..

 விஷத்தை குடி

விஷத்தை குடி

சமீபத்தில் பாஜகவின் குஜராத் வெற்றியை கடுமையாக விமர்சித்திருந்தார் சீமான்.. "இப்படி வெற்றி பெறுவதற்கு பதில், விஷத்தை குடிச்சிட்டு சாகலாம்.. பாஜக 8 முறை இல்லை, 80 வது முறை ஜெயித்தாலும் அது மகா கேவலம்" என்று விமர்சித்திருந்தார்.. பாஜகவுக்கான எதிர்ப்பு அரசியல் இனியும் கூடும் என்றாலும், திமுக பக்கம் இந்த முறை கூடுதல் கவனம் திரும்பி உள்ளதாக சொல்கிறார்கள்.. கடந்த முறை சட்டமன்ற தேர்தலின்போது, ஸ்டாலின் தொகுதியில்தான் நானும் போட்டியிடுவேன் என்று பிடிவாதமாக கூறியிருந்தபோதே, திமுகவின் மீதான காட்டம் தென்பட்டது. இந்நிலையில், 2 விதமான விஷயங்களை திமுகவுக்கு எதிராக சீமான் கையில் எடுக்கப்போவதாக சொல்கிறார்கள்.

 டேமேஜ் திமுக

டேமேஜ் திமுக

இனி வரும் காலத்தில், உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தியே திமுக அரசியல் நகரக்கூடிய சூழல் களத்தில் உருவாகி உள்ளது.. அந்தவகையில், உதயநிதி மற்றும் திமுகவை டேமேஜ் செய்யக்கூடிய வாரிசு அரசியலுக்கு எதிரான பிரச்சாரத்தையே சீமான் மக்களிடம் கொண்டு செல்லப்போகிறாராம்.. குடும்ப அரசியலை அம்பலப்படுத்தி, அதன்மூலம் மக்களின் ஆதரவை தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்று நாம் தமிழர் கட்சி நம்புகிறதாம்.. அதேபோல, இலவசங்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் இக்கட்சி மக்களிடம் எடுத்து போக போகிறதாம். இலவசங்களுக்கு எதிராக சீமான் பேசிய பேச்சுக்களை மக்களை பலமுறை சென்றடைந்துள்ளது.

 பிடிஆர்

பிடிஆர்

ஒருமுறை சீமான் பேட்டி தரும்போது, இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை நிதியமைச்சர் பிடிஆர் நிரூபிக்க முடியுமா? இலவசம் என்பது ஒருவகையான லஞ்சம்... இலவசங்களால் ஒரு புள்ளி அளவுக்குகூட நாடு வளராது... விவசாயிகளை வாழ்நாள் முழுவதும் பிச்சைக்காரர்களாக வைத்துக் கொண்டு, அவர்களுக்கு அவ்வப்போது ரூ.2 ஆயிரம் வழங்குவது எந்த வகையில் நியாயம்? விவசாயிகளை கையேந்தும் நிலைக்கு கொண்டு சென்றது அவமானம் என்று கொந்தளித்திருந்தார்.

 முழம் கரும்பு

முழம் கரும்பு

நேற்றுகூட திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார்.. "தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில், ஒரு முழம் கரும்பு இல்லைன்னு சொல்றதுக்கு வெட்கமாக இல்லையா? கரும்பு இல்லை என்று விவசாயிகள் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்களாம். அந்த வருத்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு முழம் கரும்பு இல்லைன்னா என்ன ஆகிடும்? விவசாயிகளிடம் நான் கேட்பது, ஒரு முழம் கரும்பு கூட இல்லாமல் காலம் முழுவதும் உழைத்து என்ன பெற்றீர்கள். உங்களது ஒரே பண்டிகை பொங்கல் தானே. அதைக் கொண்டாடக் கூட இலவசங்கள் வேண்டுமா? என்று காட்டமாக கேட்டிருந்தார்.

 டபுள் செக்

டபுள் செக்

அந்தவகையில், திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை தற்போதே துவங்கி விட்டார் சீமான்.. குறிப்பாக இத்தகைய பிரச்சாரத்தை பெருநகரங்களில் கொண்டு செல்ல போகிறாராம். காரணம், இந்த 10 வருட கால நாம் தமிழர் அரசியலில், கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஓரளவு ஆதரவை பெற்றுள்ளது என்றாலும், பெருநகரங்களிலும், மாநகரங்களிலும் சொல்லிக் கொள்ளும்படியான செல்வாக்கை அக்கட்சியால் இன்னமும் பெற முடியவில்லை. இந்த இலவச அறிவிப்புகளால், அதிருப்திக்கு உள்ளாகி இருப்பது நகர்ப்புற மற்றும் மாநகர மக்கள்தான்..

 ஹேப்பி டபுள்

ஹேப்பி டபுள்

அதனாலேயே இலவசத்துக்கு எதிரான பேச்சுக்களை அங்கு துவங்குவதுடன், கல்வி, மருத்துவம் போன்றவைகளை தனியாரிடம் தாரைவார்த்துவிட்டு, இலவசம் என்ற பெயரில் மக்களை முட்டாளாக்குவது குறித்த விஷயங்களைதான் புட்டு புட்டு வைக்க போகிறாராம் சீமான். ஆக, வாரிசு அரசியல் + இலவசங்கள் என்ற இருவித வியூகங்களுடன் நாம் தமிழர் ஜரூராக களத்தில் குதிக்க போகிறது. சீமான் இந்த முறை பிரிக்க போகும் வாக்குகள், திமுகவுக்கு சாதகமாக போகிறதா? அல்லது அதிமுக பாஜக கூட்டணிக்கு சாதமாக போகிறதா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!!

ரூட் மாறுதே

ரூட் மாறுதே

அதிமுகவின் ஆதரவு ஓட்டுக்களை நாம் தமிழர் கட்சி போன்றவை ஒவ்வொரு தேர்தலிலும் அறுவடை செய்து வருவதையும் பாஜக மேலிடமும் உற்று கவனித்து வருகிறது.. அதனால்தான், வேறு ஒரு வியூகத்தை இந்த முறை கையில் எடுக்கலாமா என்று யோசனை செய்து வருகிறதாம்.. அதாவது, எடப்பாடி பழனிசாமியை பாஜகவை எதிர்க்க வைத்து, திமுகவையும் எதிர்க்க வைத்து, நாம் தமிழர் கட்சியையும் எதிர்க்க வைத்து, பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க வைத்தால் என்ன? என்று நினைக்கிறார்களாம்.. இப்படி சிதறடிப்பதன் மூலமாக பாஜக கடந்த தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளதால், இதை இம்முறையும் ஒர்க் அவுட் செய்து பார்க்கலாமா? என்று கணக்கு போடுகிறார்களாம்.. இது மிகவும் சிக்கலான விஷயம் என்றாலும், நடைமுறை சாத்தியமா? எந்த அளவுக்கு பலன் தரும் என தெரியவில்லை என்ற கலக்கமும் பாஜகவிடம் உள்ளதை மறுக்க முடியாது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+