விசிகவை விடக்கூடாது.. திமுகவிடமிருந்து திருமாவை வெளியே இழுக்க முயற்சி.. களமிறக்கப்பட்ட டீம்? பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை உடைக்க ஒரு டீம் களமிறங்கி உள்ளதாம். முக்கியமாக ஆளும் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியே கொண்டு வருவதற்கான மிக தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம். இதற்கான பணிகளை ஒரு டீம் செய்து வருகிறதாம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அஞ்சலை உட்பட பலரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருமா கருத்து: இந்த விவகாரத்தில் திருமா மிகவும் காட்டமாக பேசி உள்ளார். அதில், ‛நான் என் அன்பு இளவலை இழந்துள்ளேன். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. கடும் கண்டனத்துக்குரியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஜனநாயக சக்திகள் கண்டித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளனர். 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசித்தவர் ஆம்ஸ்ட்ராங்.
அம்பேத்கரின் கொள்கைகள், அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள். சாமானியன் முதல் தவைர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது அரசின் கடமை, காவல்துறையின் கடமையாகும். இனிமேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்; வரும் காலத்தில் இதுபோன்று நடக்க கூடாது. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. அவரது கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது தான் உண்மை என்று கூறி உள்ளார்.
எடப்பாடி பிளான்: இந்த நிலையில்தான் திமுக - விசிக இடையே உள்ள இந்த விரிசலை பயன்படுத்தி திருமாவை வெளியே இழுக்க சிலர் நினைக்கிறாராம். தலித் சமூகத்தில் குரலாக இருக்கும் பலர் இதில் களமிறக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி விவகாரம் , சில அமைச்சர்கள் விவகாரம் என்று பல விஷயங்களில் திருமா - திமுக இடையே விரிசல் ஏற்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது உள்ள விரிசலை பயன்படுத்தி விசிகவை அதிமுக கூட்டணிக்கு இழுக்க தீவிரமான முயற்சிகளை எடப்பாடி எடுத்து வருகிறாராம்.
கூட்டணி பிளவு: இதனால் விசிக - திமுக கூட்டணி முறிய போகிறது.. திருமா விஜயுடன் செல்ல போகிறார். திருமா திமுகவை விட்டு அதிமுகவுடன் செல்ல போகிறார் என்றெல்லாம் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இருவரின் கூட்டணி முறியும் என்ற வாதத்தை வைப்பதே அதிமுகதான். விசிகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக ஒரு பக்கம் முயன்று வருகிறது.
களமிறக்கப்பட்ட டீம்; இந்த நிலையில்தான் திருமாவை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர பணிகள் நடக்கிறதாம். சில தலித் அமைப்புகள், சில ஆக்டிவிஸ்டுகள் திமுக - விசிக கூட்டணியை விரும்பாத நிலையில் அதற்கான லாபிகளை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் திருமாவின் விமர்சனம் திமுக - விசிக கூட்டணியில் மேலும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது நடந்த தலித் ரீதியான விவகாரங்களை வைத்து தலித் அமைப்புகள் மூலம் பிரஷர் கொடுத்து விசிகவை திமுக கூட்டணியில்,இருந்து வெளியேற்றுவதே பிளான் என்கிறார்கள். திருமா விமர்சனம் கூட்டணி ரீதியான தோழமை சுட்டுதலா அல்லது கூட்டணி முறிவிற்கான தொடக்கமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications