தமிழ் படித்த பெண்கள் பிச்சைக்காரர்களா? நிர்மலா சீதாராமனுக்கு திமிர், கொழுப்பு, ஆணவம்-ஆர்.எஸ்.பாரதி
சென்னை: தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திலேயே பேசி இருக்கிறார்; அப்படியானால் தமிழ் படித்த தமிழகப் பெண்கள் அனைவரும் பிச்சைக்காரர்களா? நிர்மலா சீதாராமனுக்கு கொழுப்பு, ஆணவம், திமிர் இருப்பதால் தமிழ்நாட்டுக்கான நிதி தர முடியாது என்கிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்தார்.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது: மத்தியிலே இருக்கக் கூடிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாம் நிதி கேட்டால் திமிராகப் பேசுகிறார். என்ன சொன்னார் தெரியுமா? நீங்கள் இந்தி படித்தால்தான் பணம் தர முடியும் என்கிறார். எவ்வளவு திமிர், ஆணவம், கொழுப்பு.

தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்கனுமாம்
தமிழ்நாட்டிலே படித்து, வளர்ந்து- ஆந்திராவிலே திருமணம் செய்து, கர்நாடகாவில் ராஜ்யசபா எம்பியாகி இன்றைக்கு மத்திய நிதி அமைச்சராக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்திலேயே சொல்கிறார்.. தமிழ் படித்தால்.. தமிழ்நாட்டில் இருக்கிறவர்கள் தமிழ் மட்டுமே படித்தால் பிச்சை எடுக்கக் கூட உதவாது என்கிறார்.
தமிழக பெண்கள் பிச்சைக்காரர்களா?
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், நம்மைப் பார்த்து தமிழ் மட்டும் படித்தால், தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடியாதாம்? நான் கேட்கிறேன்.. தமிழ்நாட்டில் இருக்கிற பெண்களே.. நீஙகள் எல்லாம் பிச்சையா எடுக்கிறீர்கள்? வடநாட்டைச் சேர்ந்தவன் நாம் போடுகிற ரொட்டியை சாப்பிட்டுவிட்டு இங்கே பானி பூரி விற்கிறானே தவிர.. தமிழ்நாட்டுக்காரன் யாரும் பிச்சைக்காரன் இல்லை.. ஒவ்வொரு சிக்னலிலும் நிற்கிற பிச்சைக்காரன் யார் என பார்த்தால் வந்தவனுகதான்..
நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?
முன்னதாக நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழ் மொழி மீதான எமோஷன், அன்பு பற்றி பேசுவோம். மத்திய கல்வி அமைச்சர், தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க ஒப்புக் கொண்டிருந்தது; ஆனால் பின்னர்தான் கையெழுத்திடாமல் பின்வாங்கியது என தெரிவித்திருந்தார். திமுகவினர் மும்மொழிக் கொள்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்த உண்மையை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விவரித்தார்.
தர்மேந்திர பிரதான் விவகாரம்
தமிழ்நாட்டில் வாழ்ந்த என் அனுபவத்தைச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் படித்தால் நீங்கள் குறிவைக்கப்படுவீர். அநாகரீகம் என சொன்னதற்காக மாத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை மன்னிப்பு கேட்க வைத்தார்கள் திமுகவினர். அதாவது நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் முறைதான் அநாகரீகமானது என சொல்லி இருப்பார் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்; ஆனால் நீங்களோ ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அநாகரீகமானவர்கள் என சொல்லிவிட்டார் தர்மேந்திர பிரதான் என குற்றம்சாட்டினீர்கள். தர்மேந்திர பிரதானும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
பெரியார் மீது மறைமுக விமர்சனம்
தமிழ்நாட்டில் தமிழ் பற்றி பேசிய ஒரு பிரபலமான தலைவர் இருந்தார்; அவரது பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. தமிழ் தெரிந்தவர்களுக்கு அவர் யார் என்பது நன்கு தெரியும். அவர் தமிழை மோசமாக பேசியதற்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழை காட்டுமிராண்டி பாஷை என சொன்னவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்; திமுகவினரின் ஒவ்வொருவர் அறையிலும் அவர் படம்தான் இருக்கிறது; நாடாளுமன்ற திமுக அலுவலகத்திலும் அவரது படம்தான் இருக்கும். அவர்தான் திராவிடத்தின் அடையாளம்.
பெரியார் எழுத்து குறித்து நிர்மலா சீதாராமன்
1943-ம் ஆண்டு விடுதலையில், தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது.. இந்த ஒருவரியே போதுமானதுதான். ஆனாலும் விளக்கமாக சொல்கிறேன். மேலும் தமிழ் படித்ததால் பிச்சை எடுப்பதைத் தவிர உயிர்வாழ வேற ஒன்றுக்கும் பயனபடவில்லை என்பதோ இதற்காக செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால் வாழ்வில் வேறு பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஒரு அனுபவப் புலவர் பாடியுள்ளார். இப்படிப் பேசியவரின் படத்தைத்தான் அனைத்து இடங்களிலும் வைத்துள்ளனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications