4800.. ஆசை ஆசையாய் 2 ப்ளான்.. பரம ரகசியம் காக்கும் 2 'தலைகள்'.. யாரு எடப்பாடி பழனிசாமி? திமுகவிடமா?
எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் ஆளுக்கு ஒரு வியூகத்தை கையில் எடுத்துள்ளனர்
சென்னை: ஓபிஎஸ் ஒரு அதிரடியில் இறங்கினால், அதைவிட பெரிய அதிரடியை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்து விடுகிறார்.. தற்போதைய அதிமுக அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது.
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகள், நீதிமன்றம் வரை சென்றுள்ளது.. சட்டரீதியான போராட்டங்களை ஓபிஎஸ் + எடப்பாடி இரு தரப்புமே எடுத்து வருவதால், அங்கு வரும் தீர்ப்பு மட்டுமே எடப்பாடி & ஓபிஎஸ் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியதாக உள்ளது.
அதேசமயம், அதிமுக பலவீனப்பட்டு இருப்பதை, தற்சமயம் பாஜக விரும்பவில்லை.. கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் + வலுவில்லாமலும் இருக்க வேண்டும் என்றே கணக்கு போடுகிறது..

ஆணித்தரம்
மேலும், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால், அது அதிமுகவால் மட்டுமே முடியும் என்பதை பாஜக ஆணித்தரமாக நம்புகிறது. எனவே, திமுகவை எதிர்க்க அதிமுகவின் பலம், மொத்தமாகவே பாஜகவுக்கு தேவைப்படுகிறது.. இதுபோக, தமிழகத்தில் 10 சீட்டுக்களையாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலும் ஈடுபட்டுள்ளது.. ஆனால், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இவர்களின் செயல்பாடுகளை பார்த்தால், இப்போதைக்கு இவர்கள் ஒன்றிணைவது போலவும் தெரியவில்லை.

அப்செட்
அந்தவகையில் ஆளுக்கு ஒரு வியூகத்தை தற்சமயம் முன்னெடுத்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, கடந்த சில நாட்களாகவே அப்செட்டில் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், சேலம் சென்றுள்ளார்.. அங்கு சில கட்சி வேலைகளையும் கவனித்து வருகிறார்.. இந்த சூழலில்தான், அய்யாதுரை, அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளார்..

கொக்கி
தென்மாவட்டங்களில் நல்ல செல்வாக்கை பெற்றவர் அய்யாதுரை.. நிறைய ஏழை மக்களுக்கு நேரடியாகவே உதவி வருவதுடன், தென்காசி மாவட்டத்தின் நலத்திட்ட பணிகளில் அளவுக்கு அதிகமாகவே ஆர்வத்தை காட்டி வருபவரும்கூட.. அதிருப்தி காரணமாகத்தான் திமுகவுக்கே சென்ற நிலையில், இவருக்கு சீட் மறுக்கப்பட்டு, பிறகு, அமமுகவுக்கு சென்றார்.. அங்கும் அதிருப்தி காரணமாக, ஒதுங்கி இருந்த அய்யாதுரைக்கு பாஜக கொக்கி போட முனைந்தது.. எந்த சீட் கேட்டாலும் அவருக்கு ஒதுக்கி தரவும் ஒப்புக் கொண்டது.. ஆனாலும், இந்த விஷயம் அறிந்த எடப்பாடி, அய்யாதுரை பாண்டியனை தன் பக்கம் இழுத்து கொண்டார்.. இது திமுகவுக்கு மட்டுமல்லாமல், அமமுகவுக்கும், பாஜகவுக்கும் ஷாக்தான்.

+3800 கோடி?
இதே வேகத்துடன்தான், அடுத்தடுத்த அதிருப்தி நபர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாம்.. இதில் திமுக, பாமக, அமமுக உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் விழுந்துள்ளதாகவும் தெரிகிறது.. இவர்களில் ஒருசிலர் இன்று மாலை எடப்பாடி முன்னிலையில் கட்சியில் இணையவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. உள்ளாட்சி தேர்தலில் திமுகவிடம் பல இடங்களை பறிகொடுத்த நிலையில், சொந்த மாவட்டத்தில் இப்போதே பலத்தை பெருக்கி வைத்து கொள்ள வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் பிளானாக உள்ளதாம்.

டவுட் ஆரம்பம்
அதேபோல ஓபிஎஸ் தரப்பை எடுத்துக்கொண்டால், புது டெக்னிக் ஒன்றை கையில் எடுத்துள்ளனர்.. அதன்படி, எடப்பாடி பழனிசாமி, திமுக தரப்புடன் நெருங்கி இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளனராம்.. இதற்கு காரணம், கொடநாடு வழக்கில் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க முயலாத சூழல் உள்ளதாலும், நெடுஞ்சாலை துறை ஊழலை கிடப்பில் அப்படியே போட்டுவிட்டதாலும், திமுக மென்மை போக்கை கையில் எடுக்கிறதா? என்ற சந்தேகத்தை கேட்டு வருகிறதாம்..

ரத்தத்தின் ரத்தங்கள்
இத்தனை நாளும், திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என்ற தகவல்கள் வெளிவந்த நிலையில், திமுகவுக்கு ஆதரவாக எடப்பாடி டீல் பேசியுள்ளார் என்று சிலர் ஓபிஎஸ் கூடாரத்திலேயே கொளுத்தி போட்டு வருகிறார்களாம்.. இப்படி இரு தரப்பிலுமே நாளுக்கு நாள் பரபரப்புகளும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் கசிந்து கொண்டேயிருக்கின்றன.. ஆனால், நடந்து கொண்டிருப்பது எதுவுமே அறியாமல், யார் தங்களுக்கு தலைவர் என்றும் தெரியாமல், கட்சி யார் கையில் இருக்கிறது என்றும் புரியாமல், இந்த பிரச்சனை எப்போது முடியுமோ என்ற கவலையுடன் காணப்படுகிறார்களாம் ரத்தத்தின் ரத்தங்கள்..!!
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications