முனுசாமி பேசிட்டிருக்கும்போதே..விழுந்த "கிலி" தகவல்.. கிறுகிறுத்த ரத்தத்தின் ரத்தங்கள்.. அசராத பாஜக
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு உறுதியான ஒன்றுதான், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி என்பதே கிடையாது என்று அதிமுக துணைப்பொதுச்செயலாளர் முனுசாமி கூறியிருக்கிறார்.. அந்த நேரம் பார்த்து, மற்றொரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக + பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது... பாஜகவுடனான கூட்டணி முறிந்ததை கொண்டாடும் வகையில், அதிமுக தொண்டர்களும், பாஜக தொண்டர்களும் ஆளுக்கொரு பக்கம் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

சிறுபான்மை ஓட்டுக்கள்: எனினும் நடந்து கொண்டிருப்பதெல்லாம் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. அதிமுக அறிவித்துள்ள இந்த முடிவுக்கு 2 வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஒன்று, அண்ணாமலை மீதான அதிருப்தி + மற்றொன்று சிறுபான்மையினர் ஓட்டுக்கள். எனினும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை திமுக லேசில் விட்டுத்தருமா தெரியவில்லை.
அதேசமயம், அதிமுக எடுத்த இந்த முடிவானது, மேலிட பாஜகவை அதிர வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.. உடனடியாக அண்ணாமலையை டெல்லிக்கு வர உத்தரவிட்டதுடன் கூட்டணி முறிவு குறித்து பாஜக நிர்வாகிகள் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்றவாறு, பாஜகவில் எந்த தலைவர்களுமே இதுகுறித்து கருத்து கூறாமல் அமைதி காத்து வருகிறார்கள்.
ஜிகே வாசன்: பாஜக - அதிமுக இருவருமே சேர வேண்டும் என்பதுதான், கூட்டணி கட்சிகளின் விருப்பமாகவும் உள்ளது.. அந்தவகையில், ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோர் மேலிட பாஜகவிடம் சமரசம் பேசிவருவதாகவும் செய்திகள் பரபரத்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவின் மூத்த தலைவர் முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி தந்துள்ளார். அதில்,"கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் உணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். அண்ணா குறித்து விமர்சனம் வைக்கப்படும்போது அவரின் பெயரை கட்சியின் பெயராக வைத்து இருக்கும் இயக்கத்தால் எப்படி அதனை சகித்துக் கொள்ள முடியும். தேசிய கூட்டணியில் இருந்து அதமுக. விலகுகிறது..
நோ கூட்டணி: 2024 ம் ஆண்டில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். இனி ஒரு போதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது" என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் மூத்த தலைவர் முனுசாமி.
முனுசாமி இப்படி செய்தியாளர்களிடம் சொல்லி கொண்டிருக்கும்போதே, திடீரென கிருஷ்ணசாமி கூறியிருக்கும் கருத்தானது, பரபரப்பை கிளப்பி வருகிறது. கூட்டணியை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது, விரைவில் நல்ல முடிவு வரும் என டெல்லி தலைவர்கள் சொல்வதாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்..
அமைச்சர் முனுசாமி: "எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சொல்லியுள்ள நிலையில், அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது"என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளது, குழப்பத்தை தந்து வருகிறது.

ஏற்கனவே, அதிமுக எடுத்த முடிவு நிஜமா? அல்லது அரசியல் தந்திரமா? என்று பாஜக, அதிமுக தொண்டர்கள் குழம்பி போயிருக்கிறார்கள்.. நேற்றைய தினம், ஜான்பாண்டியன் ஒரு பேட்டி தந்திருந்தார்.
ஜான் பாண்டியன்: அந்த பேட்டியிலும்கூட, "3வது அணி என்றெல்லாம் இப்போது பேச தேவையில்லை.. நல்லதையே நினைப்போமே.. அதிமுக - பாஜக இருவருமே சேரக்கூடும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் சொல்லியிருந்தார்.. இதையேதான் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும் சொல்லியிருந்தார்.. இதையேதான், தமாகா தலைவர் வாசனும் சொல்லியிருந்தார்.. இப்போது முனுசாமியின் பேச்சு "தலைகீழாக" உள்ளதால், தொண்டர்களுக்கு தலையை சுற்றுகிறதாம்...!!!












Click it and Unblock the Notifications