சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நொறுங்கிடுச்சே" மொத்தமா.. தினகரன் வெச்ச "புள்ளி".. அலங்கோலமாகிவிட்ட பிளான்.. 3 லீடரும், 3 திசைகளும்

எடப்பாடி பழனிசாமி, டிடிவி பேட்டிகள் கூட்டணியை அசைத்து பார்ப்பதாக உள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த ஒரு தமிழக அரசியலில் நிறைய சலசலப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள நிலையில், அனைத்துக்கும் காரணமாக 3 கட்சி தலைவர்களின் பேச்சுக்களும், பேட்டிகளும் அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விவாதங்களும் இணையத்தில் வெடித்துள்ளன.

பொதுவாக, ஒரு கட்சியின் நிலைப்பாடாக, அக்கட்சி அடுத்து மேற்கொள்ள போகும் காய்நகர்த்தலாகவே, அரசியல் தலைவர்களின் பேட்டிகள் பார்க்கப்படுகின்றன.

இந்த பேட்டிகளின் மூலமாகவே, அக்கட்சியின் எண்ண ஓட்டத்தையும் நம்மால் அறிந்து கொள்ளவும் முடிகிறது.. இந்த பேட்டிகள் சில சமயம் சுமூகமான சூழலையும் களத்தில் ஏற்படுத்தும், சில சமயம், மாறுபட்ட கோணங்களையும் யாருமே எதிர்பார்க்காத வகையில் உருவாக்கிவிடும்.

அமித்ஷா வரும்போதெல்லாம் போய் சந்திக்கணுமா? 'நாங்க பிரதான எதிர்க்கட்சி’ - சீறிய எடப்பாடி பழனிசாமி! அமித்ஷா வரும்போதெல்லாம் போய் சந்திக்கணுமா? 'நாங்க பிரதான எதிர்க்கட்சி’ - சீறிய எடப்பாடி பழனிசாமி!

 3 லீடர்கள்

3 லீடர்கள்

அப்படித்தான் தமிழக அரசியல் கட்சிகளின் சூழலும் உருவாகி உள்ளது.. இதற்கு 3 கட்சி தலைவர்களின் பேட்டிகளை உதாரணமாக சொல்லலாம்.. அதுவும் ஒரே வாரத்தில், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அண்ணாமலை என 3 பேரின் அடுத்தடுத்த பேட்டிகள்தான், அமைய போகும் கூட்டணியை அசைத்து பார்க்கும்படியும் அமைந்துள்ளன.. முதலாவதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை எடுத்துக் கொண்டால், கடந்த முறையில் இருந்தே அதிமுகவுடன் கூட்டணி என்பதில் விருப்பம் காட்டி வருகிறார்.. எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லவில்லையே தவிர, அவரது எல்லா பேச்சுமே, அதிமுகவுடனான நல்லுறவை பேணுவதில் உள்ளது..

 காய் நகர்த்தல்

காய் நகர்த்தல்

ஒருபக்கம் திமுகவை எதிர்கொள்ளவும், மறுபக்கம் மேலிடத்தை கூல் செய்வதற்காகவும் இந்த காய்நகர்த்தலை அவர் மேற்கொண்டாலும், எடப்பாடி கறார்தன்மையை தொடர்ந்து காட்டி வருகிறார்.. ஒரு சதவீதம்கூட தினகரனுக்கு கட்சியில் இடமில்லை என்று எடப்பாடி சொன்னதற்கு காரணமே, டிடிவி தினகரன் தந்த பேட்டிதான் என்கிறார்கள்.. எடப்பாடியின் மெகா கூட்டணியில் சேர போவதாக தினகரன் சொல்லி இருக்கக்கூடாது, அப்படி சொன்னது, அமமுகவின் பலவீனத்தையே காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

அமமுக

அமமுக

நாங்கள்தான் மாற்று என்று துணிச்சலாக சொல்லி இருக்க வேண்டும், அதுதான் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்கிறார்கள். அதுமட்டுமல்ல, பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி என்று பொத்தாம் பொதுவாக தினகரன் சொல்கிறார் என்றால், அமமுகவுக்கென்று ஒரு நிலைப்பாடு கிடையாதா? யாரிடம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்ற நிலையில் அக்கட்சி உள்ளதா? பிறகு, தனித்து போட்டியிடுவோம் அல்லது கூட்டணி வைத்துவிடுவோம் என்றும் சொல்கிறார்.. இதிலும் தெளிவான பேச்சு இல்லை..

 சாணக்கியன்

சாணக்கியன்

தினகரனை பொறுத்தவரை, மிகச்சிறந்த அரசியல் சாணக்கியர் என்ற பெயர் உள்ள நிலையில், இப்படியெல்லாம் பேட்டிகளை தருவதே அவருக்கு சறுக்கலை தந்துவிடக்கூட வாய்ப்புள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தினகரனின் சமீபத்திய பேட்டிகளை டெல்லி மேலிடமே அவ்வளவாக விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கும்போது, பாஜகவுடன் இணக்கமாக செல்வதை இப்போதே தினகரன் வெளிப்படையாக காட்டிக் கொண்டிருக்க கூடாது, இதனால் சிறுபான்மையினரின் அதிருப்தியையும் பெற நேரிட்டுவிடுகிறது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

 ப்ளான் ஓகே?

ப்ளான் ஓகே?

எப்படி பார்த்தாலும், அதிமுகவுடன் கூட்டணியில் முழுமையாக நுழையாதபடிக்குக்கு தினகரனின் பேட்டிகள் அமைந்துவிட்டதாகவே சொல்கிறார்கள். அதேபோல, சென்னை வந்த அமித்ஷாவை சந்திப்பது குறித்தும், எடப்பாடி அப்படி ஒரு பேட்டியை தந்திருக்க கூடாது என்கிறார்கள்.. எடப்பாடியின் பேட்டி, டெல்லிவரை பாஸ் செய்யப்பட்டுவிட்டதாகவும், இது எடப்பாடிக்கே நெருக்கடியை தரவும் வாய்ப்புள்ளதாம்.. எடப்பாடியின் இந்த பேட்டி குறித்துதான், செய்தியாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கருத்து கேட்டார்கள்.. மேலும் கூட்டணி குறித்து 2024-ல் நாங்கள் முடிவு செய்வோம் என்று எடப்பாடி சொன்னது குறித்தும் அண்ணாமலையிடம் கருத்து கேட்கப்பட்டது.

ரியாக்‌ஷன்

ரியாக்‌ஷன்

எடப்பாடி பேட்டியில் என்ன சொன்னார் என்று 2 முறை திரும்ப திரும்ப செய்தியாளர்களை கேட்டார் அண்ணாமலை..கூட்டணி குறித்து 2024-ல் நாங்கள் முடிவு செய்வோம் என எடப்பாடி சொல்வதாக சொன்னதுமே, சிறிது நேரம் யோசித்துதான் அண்ணாமலை அதற்கு ரியாக்ட் செய்தார்.. விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்.. அதை நோக்கி நாங்கள் நகர்கிறோம் என்று பட்டென பதிலளித்தார் அண்ணாமலை.. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்பது, அதிமுகவுக்கு எதிராக வைக்கப்படும் செக் என்பதாகவே பார்க்கப்படுகிறது..

புள்ளி

புள்ளி

அந்தவகையில், அதிமுக - பாஜக உறவு என்பதும் தேய்மானத்தில் செல்ல ஆரம்பித்துவிட்டது. 2 நாளைக்கு முன்பு, நீலகிரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, உங்களின் இந்த நிலைமைக்கு காரணமே திராவிட கட்சிகள்தான் என்று போட்டு தாக்கியுள்ளார்.. அதாவது, அதிமுக, திமுக என 2 கட்சிகளையும் நேர்எதிர் புள்ளியில் வைத்து, தமிழக பாஜக நகர தொடங்கி உள்ளதோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. இதற்கான சிக்னலும் மேலிடத்தில் இருந்து வந்ததையடுத்து, அதிமுகவை டீல் செய்ய பாஜக தயாராகி வருவதாகவும் சொல்கிறார்கள்.. ஆக, தினகரன் தந்த பேட்டியானது, அவரை அதிமுகவில் இருந்தும், எடப்பாடி தந்த பேட்டியானது, அவரை கூட்டணியில் இருந்து, தூர விலக்கி கொண்டும் சென்றுவிட்டதாகவே சென்றுள்ளதாகவே தெரிகிறது.. இனி அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!!

English summary
Are the interviews of the 3 Party leaders troubling alliance and what TTV Dinakaran going to do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X