தலையே சுத்துது போங்க.. அப்ப அந்த 9 தொகுதி அவ்ளோதானா.. எடப்பாடி பழனிசாமி "ராஜதந்திரம்".. திமுக உஷார்
சென்னை: பாஜக கூட்டணியை, நிஜமாகவே எடப்பாடி பழனிசாமி கழட்டிவிட்டுள்ளாரா? அல்லது தேர்தல் யுக்தியா? என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பியவாறே வந்தாலும், அதிமுகவும், பாஜகவும் அடுத்தடுத்த வியூகங்களை கையிலெடுத்துள்ளனர்.
பாஜக கூட்டணியிலிருந்து விலகியதையடுத்து, திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள், திமுக கூட்டணியில் இடம்பெற முடியாத நிலைமை கொண்ட கட்சிகள், எல்லாமே அதிமுகவுக்கு ஆதரவாக மாறிவருகிறதாம்..

பாஜக: குறிப்பாக, "பாஜகவிலும் இல்லை, என்டிஏ கூட்டணியிலும் இல்லை" என்று அறிவித்து அதிமுகவில் தீர்மானம் போட்ட நிலையில், பாஜக கூட்டணிவுடன் இந்த தேர்தலிலும் இல்லை, வரும் சட்டமன்ற தேர்தலிலும் இல்லை என்று 2 முறைக்கு மேல் பகிரங்கமாகவே எடப்பாடி பழனிசாமி அறிவித்தபிறகு, அதிமுகவின் மவுசு சற்று ஏற்றமடைந்துள்ளதாக சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இந்த அரசின்மீது அதிருப்தியில் உள்ள வாக்குகளில், ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதிமுகவுக்கு நிச்சயம் போய்விடும் என்ற அச்சம் திமுகவுக்கு இருப்பதால்தான், அதிமுக மீதான விமர்சனங்கள் அதிகமாகி வருவதாக கருத்துக்கள் எழுகின்றன..
எடப்பாடி பழனிசாமி: ஆனால், எதிர்க்கட்சிகளோ, அதிமுகவை விடுவதாக இல்லை.. தற்போது எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள இந்த நிலைப்பாடு எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும், குறிப்பாக தேர்தலுக்கு பிறகு, பாஜகவுக்கு ஆதரவான முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துவிடுவார் அல்லது அப்படி ஒரு முடிவை எடுக்கும் சூழலுக்கு, பாஜக எடப்பாடியை கொண்டுவந்துவிடும் என்றும் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.
அதற்கேற்றார் இன்னொரு தகவல் கசிந்து கொண்டிருக்கிறது.. அதாவது, தமிழகத்தில் தங்களுக்கு செல்வாக்கு மிக்க இடங்கள் என்று கருதக்கூடிய 9 தொகுதிகளை பாஜக கையில் வைத்திருக்கிறது. கடந்த ஒரு வருட காலமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், டீமை இறக்கியதுடன், களப்பணிகள் செய்து, இறுதியில் தங்களுக்கு சாதகமாக உள்ள 9 இடங்களை தேர்வு செய்து, அதனை டெல்லிக்கும் அனுப்பிவைத்திருந்தது பாஜக.
9 தொகுதிகள்: அந்தவகையில், தென்சென்னை, வேலூர், நீலகிரி, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், என்ற இந்த 9 தொகுதிகளில் எப்படியும் தாமரையை மலரவைத்துவிடுவது என்ற தீவிரத்திலும் களமிறங்கி உள்ளது.
அதுமட்டுமல்ல, சமீபத்தில் சென்னை வந்திருந்த பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், "இந்த 9 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், பல தொகுதிகளில் டெபாசிட் காலியாகிவிடும்.. அந்த தொகுதிகளில் நமக்கு தேசிய அளவில் கெட்ட பெயர் வரும். அதனால் தேவையில்லாத விஷப்பரீட்சைக்கு தயாராக வேண்டாம்" என்று அறிவுறுத்தியதுடன், இந்த 9 தொகுதிகளிலும் பணிகளை உடனடியாக ஆரம்பியுங்கள் என்றும் தமிழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது.
திமுக: ஆனால் இதில் இன்னொரு சிக்கல் எழுந்துள்ளதாம். பாஜக லிஸ்ட்டில் உள்ள இந்த 9 தொகுதிகளுமே, அதிமுக, திமுகவுக்கு செல்வாக்கான தொகுதிகளாம்.. எவ்வளவுதான் செலவு செய்து, வேட்பாளர்களை பாஜக நிறுத்தினாலும், வெற்றிவாய்ப்பு என்பது நூலிழையில் தவறிப்போகவும் வாய்ப்புள்ளதாம். மேலும், அதிமுக - பாஜக பிரிந்துள்ளதால், அது திமுகவிற்குத்தான் சாதகமாக மாறிவிடும் என்பதையும் பாஜக உணர்ந்தே உள்ளது.
எனவே, 2 விதமான யோசனைகளை பாஜக முன்னெடுக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. ஒன்று, அதிமுகவுடனான கூட்டணியை மீண்டும் ஏற்படுத்தி கொள்வது, அல்லது அவ்வளவாக பிரபலமாகாத வேட்பாளர்களை 9 தொகுதிகளிலும் அதிமுகவை நிறுத்த சொல்வது என்பதே அந்த யோசனையாம். செல்வாக்கில்லாத வேட்பாளர்களை அதிமுக களமிறக்கினால், அந்த 9 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற எளிதாக இருக்குமாம்.
பாஜக பிளான்: ஒருவேளை இந்த யோசனையை பாஜக முன்னெடுத்தால், இதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளுமா என தெரியாது.. அப்படி ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், அதிமுகவின் பாதுகாப்புக்கு, பாஜக உறுதி தரக்கூடும்.
இந்த விஷயத்தை அதிமுகவும் யோசிக்காமல் இல்லை.. 3 ஆக உடைந்துள்ள கட்சி + கூட்டணி முறிவு + வலுவான கூட்டணி அமையாமல் போவது போன்றவையெல்லாம், திமுகவுக்கே சாதகமாகிவிடும் என்பதையும் அதிமுக உணர்ந்துள்ளதால், பாஜகவின் யோசனைக்கு செவிசாய்க்கலாம் என்கிறார்கள். ஆக, நாளுக்கு நாள் இப்படியான சலசலப்புகளால், அரசியல் களமே பரபரப்பாக காணப்படுகிறது.
-
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications