"கேம்சேஞ்ச்?".. அதிமுகவுக்கு லட்டு போல "சிக்கிய" அந்த மேட்டர்.. சண்முகம் விடமாட்டார் போல.. என்னாச்சு

திமுகவுக்கு செக் வைக்கும் வகையில் முக்கிய மேட்டர் ஒன்று அதிமுகவுக்கு சிக்கி உள்ளதாக கூறுகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலில், எப்படியாவது மாஸ் வெற்றியை பெற்றாக வேண்டும் என்று திமுக தரப்பு ஆர்வம் காட்டி வரும்நிலையில், அதிமுக தரப்பிலோ அதற்கு செக் வைக்கும் வகையில் ஒரு மேட்டர் சிக்கி உள்ளதாம். என்ன அது?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 முனைப்போட்டி எழுந்துள்ளது.. இதில் எதிர்க்கட்சிகளை டெபாசிட் வாங்காமல் செய்ய வேண்டும் என்று திமுகவும், மெஜாரிட்டி வாக்கு சதவீதத்தை எட்டிப்பிடித்து விட வேண்டும் என்று திமுகவும் மும்முரமாகி உள்ளன.

இதற்காக சில "தாராளங்களையும்" தொகுதிக்குள் உலாவ விட்டுள்ளதாக தெரிகிறது.. இது சம்பந்தமான உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.

 குக்கர்கள்

குக்கர்கள்

அதாவது, ஆளுங்கட்சி ஓட்டுக்கு 6 ஆயிரம் தர திட்டமிட்டுள்ளதாகவும், தினமும் தலைக்கு 1000 ரூபாய், அசைவ பிரியாணி மற்றும் வீட்டுக்கு ஒரு குக்கர் என்று பட்டப்பகலிலேயே பட்டுவாடா நடக்கிறது என்று அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருவதுடன், அது தொடர்பான வீடியோக்கள் உள்ளதாக கூறி, அவைகளை பரவவிட்டும் வருகின்றனர்.. குறிப்பாக, ஈரோடு கிழக்கு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் வீட்டுக்குவீடு திமுகவினர் வெளிப்படையாக குக்கர் கொடுத்து வருவதாக புகார் ஒன்று நேற்றுகூட கிளம்பி உள்ளது.. ஓட்டுக்கு ரூ4000, வீட்டுக்கு வீடு கோழி கறி, மளிகை சாமான், இந்த வரிசையில் இன்று குக்கர் என்று லிஸ்ட் போட்டு அதிமுகவினர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

 ஸ்பெஷல் ஹிண்ட்

ஸ்பெஷல் ஹிண்ட்

இப்படிப்பட்ட சூழலில் ஒரு ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதால் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது இல்லையா? இந்த சூழலில் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், பால்வளத்துறையின் கமிஷனராகவும் இருக்கும் சுப்பையன் ஐ.ஏ.எஸ்., ஈரோடு மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் 500 குடும்பத்தினருக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 10-ந்தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 பிரம்மாஸ்திரம்

பிரம்மாஸ்திரம்

இதன் மூலம், ஈரோடு ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் 500 பேர் 1000 ரூபாய் முதல் 4000 வரை பணப்பலன் பெறுவர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, இப்படிப்பட்ட பணபலன் அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றமாகும். நடத்தை விதிகள் மீறப்பட்டால், தேர்தலையே ரத்து செய்யும் அதிகாரம் தமிழ்நாடு தேர்தல் ஆணைய தலைமை அதிகாரிக்கு உண்டு. அந்த வகையில், இந்த உத்தரவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தைதான் தற்போது அதிமுக கையிலெடுத்துள்ளதாம்..

 லட்டு சான்ஸ்

லட்டு சான்ஸ்

அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இது தொடர்பான விபரங்கள் தரப்பட்டுள்ளன. இதனை மையப்படுத்தி, தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கலாமா? என்று எடப்பாடியிடம் சி.வி.சண்முகம் விவாதித்துள்ளதாகவும் தெரிகிறது.. ஏற்கனவே, திமுக மீதான புகாரை டெல்லி வரை கொண்டு சென்றவர் சிவி சண்முகம்.. ஈரோடு இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் சிவி சண்முகம் புகார் மனு ஒன்றை அளித்திருந்த நிலையில், இப்போது இன்னொரு விவகாரம் லட்டுபோல சிக்கி உள்ளது.. இது திமுக தரப்புக்கும் கலக்கத்தை தந்துள்ளதாக தெரிகிறது.

 ஸ்வீட் பாக்ஸ்கள்

ஸ்வீட் பாக்ஸ்கள்

வாக்காளர்கள் குக்கர் பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாம்... குக்கர் கொடுக்கப்படும் குடோனையும் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.. அதேபோல, அதிமுக தரப்பிலும் "ஸ்வீட்பாக்ஸ்கள்" விநியோகம் ஜரூராக நடப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான பொறுப்பை செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவனின் மேற்பார்வையிலும் மேலும் சில அசைன்மென்ட்கள் நடப்பதாக தகவல்கள் கசிந்து கொண்டே இருக்கின்றன.. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, இப்படி யூகமான தகவல்கள் தினந்தோறும் வெளிவந்து, ஈரோட்டின் பரபரப்பை கிளப்பி விட்டபடியே உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+