Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அதை" பார்த்தீங்களா.. டக்குனு திரும்பிய ஸ்டாலின்.. குடுகுடுன்னு ஓடிவந்த உதயநிதி.. புன்னகைத்த ரவி.. செம

பதவிப்பிரமாணம் செய்யும்போது உதயநிதி காதில் என்ன சொன்னார் முக ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்... வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியாது, செயல்பாடுகள் மூலமே பதிலளிக்க முடியும்" என்று உதயநிதி சொல்லி உள்ள கருத்துக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதல் பேட்டி அளித்தார்.

திகைப்பு

திகைப்பு

அப்போது, தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன், அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன், விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியாது, செயல்பாடுகள் மூலமே பதிலளிக்க முடியும்" என்று கூறியிருந்தார்... உதயநிதி இப்படி சொன்னதுமே, சோஷியல் மீடியாவில் விவாதங்கள் வெடித்து கிளம்பி விட்டன. ஆனால், வாரிசு அரசியல் என்பது எல்லா கட்சிகளிலும் உள்ளது.. ஆனால், திமுகதான், இதற்கு தொடர்ந்து வழிவகுத்து வருகிறது.

 ஆபத்து ஆபத்து

ஆபத்து ஆபத்து

"சொந்த கட்சிக்குள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றெல்லாம் திமுகவால் ஒருபோதும் சொல்ல முடியாது.. காரணம், வாரிசு அரசியல் முறை, சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது, ஆபத்தையும் விளைவிக்கக்கூடியது.. கட்சிக்காகக் கடுமையாக உழைப்பதால் பதவி தரப்படுகிறது என்கிறார்கள், ஆனால், இந்த வாரிசுகளைவிட திமுகவில் கடுமையாக உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே? பிரச்சாரத்துக்கு வந்துவிட்டார், சொந்த தொகுதிக்கு நன்மை செய்கிறார் என்பதையெல்லாம் ஒரு தகுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.

 ரவீந்திரநாத்

ரவீந்திரநாத்

அதிகாரத்தைத் தங்களின் குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே வாரிசுகளைக் கொண்டுவருகிறார்களே தவிர, வேறொன்றும் இல்லை என்ற கேள்விகளையும் எதிர்தரப்பில் முன்வைக்கிறார்கள். மற்றொரு தரப்பில், வாரிசு அரசியல் என்றாலே திமுகவை ஏன் சொல்கிறார்கள்? அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத், தேனி தொகுதி அதிமுக எம்பியாக இருக்கிறாரே? பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ். இப்போது பாமக தலைவராகவும், மாநிலங்களவை எம்பியாகவும் இருக்கிறாரே? இதற்கு மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறாரே?

ஜெயவர்த்தன்

ஜெயவர்த்தன்

ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் வாரிசு அரசியல் இல்லையா? அவ்வளவு ஏன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரே மகன் ஜெய் ஷா, பிசிசிஐ செயலாளராக இருக்கிறார்.. கிரிக்கெட்டுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? போட்டி வைத்துதான் இவரை தேர்ந்தெடுத்தார்களா? கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? எல்லா கட்சிகளிலுமே வாரிசுகள் தலைதூக்கி இருக்கின்றன.. எனினும், வாரிசு அரசியல் தவறு கிடையாது என்கிறார்கள் இன்னொரு சாரார்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

உதயநிதி தந்த முதல் பேட்டியை வைத்து, இப்படி விவாதங்கள் வெடித்து வரும்அதேசமயம், இன்றைய தினம் உதயநிதியின் பதவியேற்பு விழாவின் வீடியோ வீடியோ ஒன்றும் பலரது கவனத்தை பெற்று வருகிறது. பதவிப்பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் வந்திருந்தார்.. மேடையில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருக்க, ஆளுநருக்கு உதயநிதி சாதாரணமாக கை கொடுக்கிறார். பிறகு, ஸ்டாலின் ஏதோ சொன்னதும், வேகமாக வந்து மறுபடியும் ஆளுநர் ரவியிடம் கை கொடுத்து பவ்யமாக காட்டுகிறார்.. அதேபோல ஆளுநருக்கு பூங்கொத்து கொடுக்கப்பட்டது.. உதயநிதியிடம், ஸ்டாலின் கை காட்டவும், பூங்கொத்தை அங்கிருந்தோரிடமிருந்து பெற்று, அதை ஆளுநரிடம் தந்து மீண்டும் கை கொடுத்து வணங்கினார் உதயநிதி.

 நல்லக்கண்ணு

நல்லக்கண்ணு

முன்னதாக, ஆளுநர் மாளிகைக்கு உதயநிதி வந்திருந்தபோது, முன்கூட்டியே எவ வேலு, கேஎன் நேரு, தங்கம் தென்னரசு உட்பட மூத்த தலைவர்கள் வருகை தந்திருந்தனர்.. காரைவிட்டு இறங்கி நடந்து வந்த உதயநிதி, இவர்களை பார்த்ததுமே, திடீரென அவர்களிடம் ஓடிச்சென்றார். மூத்த தலைவர்கள் முன்கூட்டியே வந்திருந்த நிலையில், அவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று தனித்தனியாக வணக்கம் சொல்லி, வாழ்த்துக்களை பெற்றார்.. அன்று சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றபோதும்கூட, ஓடோடி சென்று மூத்த தலைவர் நல்லகண்ணு, விஜயகாந்த் என பெரியவர்களை சந்தித்து உதயநிதி ஆசி பெற்றிருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. பதவி வரும்போது பணிவும் சேர்ந்தே வருவது, திமுக தொண்டர்களை பெருமிதம் கொள்ள வைத்து வருகிறது.

ஃபைல்கள்

ஃபைல்கள்

அதுமட்டுமல்ல, வாக்குறுதியில் தரப்பட்ட பெரும்பாலும் நிறைவேற்றப்படாத குறை திமுக மீது உள்ளது.. எந்த திட்டத்தின் ஃபைல்களும் எளிதில் நகர்வதில்லை, கிடப்பிலேயே உள்ளது என்ற விமர்சனமும் திமுக மீது நிலவி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், உதயநிதியின் அமைச்சர் பதவியானது, திட்டங்களை விரைவுப்படுத்த உதவும் என்றும், திமுக மீதான குறைகளை களைக்க, உதயநிதியின் செயல்பாடு அமையும் என்றும் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.. அதேசமயம், உதயநிதி சினிமாவை எக்காரணத்தை கொண்டும் கைவிடக்கூடாது என்பதும் அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+