Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாமே "கைமாறுது" போல.. பாஜகவுக்கு இவர்தான் கரெக்ட்? உதயநிதியால் குலுங்கும் குறிஞ்சி இல்லம்.. பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்கிவரும்நிலையில், திமுகவில் சில முக்கிய மாற்றங்கள் விரைவில் நிகழக்கூடும் என்கிறார்கள்.. இதுகுறித்த ஸ்பெஷல் செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக நியமிக்கப்பட்டபோதே, மேலும் சில கூடுதல் பொறுப்புகளை அவருக்கு ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தரப்பு நினைக்கிறதாம்.

Are there going to be changes in DMK Important Postings and What is Udhayanidhi Stalin going to do the Next

குறிஞ்சி இல்லம்: எனினும், ஆட்சி நிர்வாகம், கட்சி நிர்வாகம் என இரண்டையுமே திறன்பட கவனித்து வருகிறார் உதயநிதி.. அதனால்தான், அதிகாரிகளுடனான முக்கிய சந்திப்புகளும், ஆலோசனைகளும் "குறிஞ்சி இல்லத்தில்" நடந்து வருவாக சொல்கிறார்கள்.

எனினும் தற்போது தேர்தல் நெருங்கிவிட்டதால், கட்சி தொடர்பான முழு பணிகளையும், பிரச்சனைகளையும் சேர்த்து கவனிக்கும்படியும், "குறிஞ்சி இல்லம்" போலவே, "அறிவாலயத்துக்கும்" வந்து, அதிகாரபூர்வமற்ற செயல் தலைவராக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உதயநிதியை, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டாராம்.

பாஜக சனாதனம்: இதுமட்டுமே இல்லை.. மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.. உதயநிதி மீது மொத்த கவனத்தையும் மேலிட பாஜக குவித்து வருகிறது.. அதிலும் உதயநிதியின் "சனாதன தர்மம்", பாஜக தலைவர்களையே கடுப்பாக்கிவிட்டதால், இதற்கு சரியான பதிலடியை திமுகவுக்கு தர தயாராகி வருவதாக தெரிகிறது.

அவைகளை எதிர்கொள்ள, உதயநிதியால் மட்டுமே முடியும் என்றும், அறிவாலய தரப்பு நம்புகிறதாம். அதனால், இந்த முறை தேர்தலில், உதயநிதியின் செயல்பாடுகளும், முக்கியத்துவமும் சற்று அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.

பிரச்சார வியூகங்கள்: தேர்தலையொட்டி, திமுகவினருடன் விவாதிப்பது, திமுகவின் வேட்பாளர்களை தேர்வு செய்வது, தேர்தல் செலவு விவகாரங்கள், பிரச்சார வியூகங்கள் என கட்சி சார்ந்த அனைத்து விஷயங்களையும் கவனித்து கொள்ளும் பொறுப்புகளை உதயநிதியிடமே வழங்கலாம் என்றும் திமுக தலைமை ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு பிரத்யேகமான செய்தியும் நமக்கு கிடைத்துள்ளது.. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அனைத்து விதமான தேர்தல் பணிகளிலும் சீரியஸ் காட்டி வருகிறது திமுக. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள், திமுகவில் நேர்காணல்கள் முடித்து திமுக வேட்பாளர்களை முடிவு செய்வது குறித்த இறுதி முடிவெடுக்கும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

உதயநிதி: கட்சி தலைவர் இந்த பணியில் தீவிரம் காட்டிவரும் நிலையில், அமைச்சர் உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்..

அந்த வகையில், திமுகவின் சொற்பொழிவாளர்களின் கூட்டத்தை இன்று மாலை சென்னை அக்கார்ட் ஹோட்டலில் நடத்துகிறார். இதில், சொற்பொழிவாளர்களுக்கான செயல் திட்டங்கள் குறித்து அவர்களிடம் விரிவாக விவரிக்கவிருக்கிறார் உதயநிதி. சொற்பொழிவாளர்களை ஊக்கப்படுத்த உதயநிதி நிதியுதவி அளிப்பார் என்றும் சொல்லப்படுகிறது

திமுக கழக பேச்சாளர்கள்: இப்படித்தான், சில தினங்களுக்கு முன்பு, திமுக தலைமைக் கழகப் பேச்சாளர்கள் மற்றும் கட்சியின் பேச்சாளர்கள் அனைவருக்கும் அமைச்சர் உதயநிதி, அன்பளிப்பு வழங்கியிருந்தார்.. அதாவது, கட்சி தொண்டர்கள் எந்த வகையிலும் அங்கீகரிக்கப்படவில்லை என்கிற ஆதங்கமும் அதிருப்தியும் திமுகவுக்குள் அதிகரித்து வந்ததால், இதனை களைவதற்கான உதயநிதி இந்த முயற்சியை கையில் எடுத்தார்.. தமிழகம் முழுவதுமுள்ள பேச்சாளர்களை குறிஞ்சி இல்லத்துக்கு வரவழைத்து மரியாதை செய்திருந்தார்..

சொற்பொழிவாளர்கள்: அந்தவரிசையில், இப்போது, சொற்பொழிவாளர்களின் மீதும் உதயநிதியின் கவனம் திரும்பியிருப்பது, முக்கியத்துவத்தை திமுகவுக்குள் ஏற்படுத்தி வருகிறது. இப்படி திமுகவின் ஒவ்வொரு தரப்பினரையும் பார்த்து பார்த்து கவனித்து வருவதால், உதயநிதியின் பொறுப்புகள் விரைவில் மேலும் கூடலாம் என்றே கணிக்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+