சல்லி சல்லியா போச்சே.. திமுக "கிராப்" ஏறுதே.. கதறிய புள்ளி.. "பொறுப்பா" அல்லாடும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: விரைவில் அதிமுகவில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க போகிறது. இதுகுறித்து ஒரு முக்கியமான, ஸ்பெஷல் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுக பக்கம் கொண்டு வரும் முனைப்புடன், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டது. எனவே, வரப்போகும் தேர்தலில், சிறுபான்மையினர் ஓட்டுக்களை அள்ளலாம் என்ற முடிவில் அதிமுக காத்து கொண்டிருக்கிறது.
ஆனால், அசாதுத்தீன் ஓவைசி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி என ஒருசிலரே எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை தந்துள்ளார்களே தவிர, பெரிய கட்சி யாருமே இதுவரை அதிமுகவுடன் கூட்டணியை அறிவிக்கவில்லை.

பாரிவேந்தர்: அதேபோல, பாரிவேந்தர், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், ஏசி சண்முகம், ஜான்பாண்டியன், தேமுதிக, பாமக, என இவர்களும் இதுவரை உறுதியான முடிவை வெளியிடவில்லை. அந்தவகையில், கூட்டணியை முறித்தும்கூட, எடப்பாடி பழனிசாமிக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்ல, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை விலக்கினால் திமுக கூட்டணி உடையும், அந்த கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என்றெல்லாம் கணக்கு போட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையிலும், திமுகவில் இருந்து யாருமே கூட்டணிக்கு வரவில்லை.
அதிமுக: ஆக, சிறுபான்மையினர் தரப்பு + திமுக கூட்டணி தரப்பு + சொந்த கூட்டணி தரப்பு = என 3 பக்கத்திலிருந்துமே, அதிமுக கூட்டணிக்கு இதுவரை வராமல் உள்ளனர். இதுதான் அதிமுகவுக்குள் இப்போது, புயலாக வீச தொடங்கியிருக்கிறதாம்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விரைவில் கூடவிருப்பதால், அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விசயங்கள் குறித்து சீனியர்களிடம் ஆலோசித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, அதிமுக கூட்டணிக்குள் எந்த கட்சியும் வராதது பற்றி பேச்சு எழுந்துள்ளது.
விஐபிகள்: அந்த பேச்சை எடுத்த பாஜக ஆதரவாளர்களான 2 அதிமுக விஐபிகள், "பாஜகவை வெளியேற்றினால், காங்கிரஸ் நம்மிடம் வரும் என்றும், திமுக கூட்டணி கலகலத்துவிடும் என்றும் சொன்னீங்க. அதற்கான அறிகுறிகளே இப்போது வரைக்கும் எங்குமே காணப்படவில்லை.. அதிமுக கூட்டணிக்கு போய் விடுவோம்னு நம்மைக் காட்டி திமுகவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. இப்படி பேரம் பேசத்தான் அதிமுக-பாஜக கூட்டணி முறிவு உதவியிருக்கிறது" என்று சொல்லியுள்ளனர்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "ஏப்பா... அரசியல்னா அப்படித்தான் இருக்கும். எல்லாரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்ல பிசியாக இருக்காங்க. தமிழ்நாட்டை பத்தி அவங்க இன்னும் யோசிக்கவே இல்லை. சீட் ஷேரிங் எதுவும் திமுக கூட்டணியில முடிவாகலை. அதுக்கான பேச்சுவார்த்தை நடக்கும் போதுதான் ரகளைகள் நடக்கும். அப்போ, நம்மை நோக்கி வருவாங்க. பொறுத்திருங்க" என்று விளக்கமளித்தாராம் .
ராகுல் காட்டம்: எடப்பாடி பழனிசாமி இப்படி சொல்வதற்கு பின்னணி காரணம் இல்லாமல் இல்லை.. காங்கிரஸை கூட்டணிக்குள் இழுத்துப்போடும் முயற்சியையும் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஆனால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க, ராகுல் காந்திக்கு கொஞ்சம்கூட இஷ்டம் இல்லையாம். திமுக கூட்டணியில் இணக்கமான போக்கு உள்ளபோது, அதிமுக பற்றி ஏன் பேசறீங்க? என்று தன்னிடம் பேச வந்த தமிழக கதர்களிடமே கடிந்து கொண்டாராம்.
நிலைமை இப்படியிருக்கும்போது, மெகா கூட்டணியை அமைக்கவும், திமுகவை களமாடவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னதான் செய்ய போகிறார் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.!!












Click it and Unblock the Notifications