மேஜையில் இருந்த "ரெட் நோட்".. ஸ்டாலின் உடனே இந்த 3 விஷயங்களை செய்யணும்.. இல்லைன்னா பெரிய சிக்கல்தான்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் சில சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . தமிழக அரசு இது போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள உடனே சுதாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இங்கே விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இவர்கள் அடுத்தடுத்து பலியானார்கள்.
அடுத்த சம்பவம்: இந்த சம்பவத்தின் ஈரம் காயும் முன் தற்போது சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை செய்யப்பட உள்ளது.
தற்போது சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கொலை சிக்கல்: இவரின் கொலை நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தேசிய அளவில் தலித் அமைப்புகள் இடையே கடுமையான எதிர்ப்புகளை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டாலின் செய்ய வேண்டிய விஷயங்கள்: இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் சில சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு ரெட் நோட் சென்றுள்ளதாம். அதாவது தமிழக அரசு இது போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள உடனே சுதாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது.
இது தொடர்பாக ஸ்டாலினிடம் அவருக்கு நெருக்கமான சிலர் முக்கியமான சில ஆலோசனைகளை சொல்லி இருக்கிறார்களாம். ஆட்சியில், நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை சொல்லி இருக்கிறார்களாம்.
1. அதன்படி மொத்தமாக உளவுத்துறையில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதிகாரிகள் அளவில் முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும்.
2. ஒரு அரசு என்பது முதல்வர் கவனிக்காமல் இருந்தாலும் ஆட்டோ பைலட் முறையில் இயங்க வேண்டும். முதல்வர் சொன்னால்தான் எதுவும் நடக்கும் என்று இருக்க கூடாது. எல்லாம் ஆட்டோபைல்ட் முறையில் இயங்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் சரியாக இருக்க வேண்டும்.. அதற்கு ஏற்றபடி அதிகாரிகள் உடனே மாற்றப்பட வேண்டும்.
3. சென்னைஉள்ளிட்ட பெருநகரங்களில் போல்சி அதிகாரிங்கள், கமிஷனர்கள் மாற்றப்பட வேண்டும். சென்னை , கோவை, மதுரையில்தான் குற்றங்கள் கூடி உள்ளன. இதை சரி கட்ட இங்கே அதிகாரிகள் மாற்றப்ப வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளதாம் .












Click it and Unblock the Notifications