பதற வைத்த 8 காரணம்.. இப்போ வேண்டாம்! வந்து பார்த்துக்கலாம்! அமைச்சரவையில் கை வைக்காத ஸ்டாலின்! ஏன்?
சென்னை: இன்று முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு அவர் செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
சமீபத்தில் தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் அதிகாரிகள் மாற்றம் சில நாட்களுக்கு இனி இருக்காது.. என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அடுத்ததாக.. தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த மாற்றம்தான் செய்யப்படவில்லை.
அமைச்சரவை மாற்றம்: இப்படி அமைச்சரவை மாற்றம் செய்யப்படாமல் போவதற்கு 8 முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது உறுதி. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வெளிநாடு செல்லும் முன் இதை செய்ய வேண்டாம் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.
2. செந்தில் பாலாஜி விரைவில் வரலாம். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களை தாமதம் செய்கிறார்கள். செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்க மாட்டார். ஆனால் ஸ்டாலின் அவருக்காக காத்து இருப்பதாக கூறப்படுகிறது.
4. அமைச்சரவை மாற்றத்திற்கு எதிராக சீனியர்கள் சிலர் வேலை பார்க்கவில்லை என்று புகார் உள்ளது. சீனியர்கள் அமைச்சரவை மாற்றத்தை விரும்பவில்லை. இதை எல்லாம் ஆய்வு செய்வதால்.. தாமதம் ஆவதாக கூறப்படுகிறது.
5. கட்சியில் சீனியர் ஜூனியர் மோதல் தொடங்கி உள்ளது . ஜூனியர் சிலர் அமைச்சர் ஆவதை சில சீனியர்கள் விரும்பவில்லை.
6. எதையாவது செய்துவிட்டு அமெரிக்கா போக வேண்டாம்.. வந்த பின் பார்த்துக்கொள்ளலாம். செந்தில் பாலாஜியும் வரட்டும்.. இப்போது செய்துவிட்டு அமெரிக்கா சென்றால்.. இங்கே ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாது என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.
7. அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடு செல்வது, 2026 சட்டசபை தேர்தல், ஆட்சி அதிகாரத்தில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இப்போது அமைச்சரவை மாற்றம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
8. செந்தில் பாலாஜி: ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை தாமதமாவதால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதானவழக்கில் இதுவரை வைக்கப்பட்ட வாதங்கள் கவனம் பெறுகின்றன. அவர் மட்டுமல்ல வேறு சில விவகாரங்களும் இதற்கு காரணம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications