Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த கோபாலபுரம் நபர்".. நிர்மலா சீதாராமன் விடலயே.. அண்ணாமலைக்காக அதிரடி காட்ட துவங்கும் நிதியமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும்நிலையில், பாஜக மேலிட தலைவர்களின் வருகையும் அதிகரித்தவாறே உள்ளது. அந்தவகையில், இன்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பாஜக வேட்பாளர்களுக்காக ஆதரவை திரட்டுகிறார்கள்.

தமிழகத்தில் எம்பி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது... அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. தமிழக தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Are these BJPs Strategies and Finance Minister Nirmala Sitharaman Campaigns in Tamil Nadu for Annamalai today

உள்துறை அமைச்சர்: அந்தவகையில், நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தார்.. மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, நாகை, தென்காசி என 5 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதேபோல, பிரதமர் மோடி ஏற்கனவே 7 முறை வந்துசென்ற நிலையில், 8வது முறையாக மீண்டும் தமிழகம் வரப்போகிறார்.. நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை, 14ம் தேதி, பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழகத்துக்கு வந்து, நீலகிரி வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து, நட்டா மேட்டுப்பாளையத்தில் வாகன பேரணியில் ஈடுபட போகிறார்.

6 தொகுதிகள்: இப்படிப்பட்ட சூழலில், தமிழக பாஜக வேட்பாளர்களுக்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.. இதற்காக 2 நாட்களுக்கு மொத்தம் 6 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்..

நேற்றைய தினம், கிருஷ்ணகிரியில், பாஜக வேட்பாளர் நரசிம்மனுக்கும், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் கார்த்தியாயினுக்கு ஆதரவு திரட்டிய நிலையில், தஞ்சையிலும், பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், இன்று 13 ம் தேதி நீலகிரியில் எல்.முருகனுக்காக பிரச்சாரம் செய்ய போகிறார் நிதியமைச்சர்.. பின்னர், கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் 10 ஆயிரம் பெண்களுடன் சென்று அண்ணாமலைக்கு ஆதரவாகவும், பொள்ளாச்சியில் பாஜக வேட்பாளர் வசந்தராஜனுக்கு ஆதரவாகவும் நிர்மலா சீதாராமன் ஆதரவு திரட்டுகிறார்.

திமுக காங்கிரஸ்: பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம், மத்திய அரசின் நலத்திட்டங்களை எடுத்து சொல்லி வருகிறார் நிதியமைச்சர்.. அத்துடன், திமுக, காங்கிரஸ் கட்சிகளையும் சரமாரி விமர்சித்து கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்.

"பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குற்றசாட்டுகளே இல்லை.. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் ஊழலை கணக்கிடவே முடியாது.. அவர்களின் ஊழலால் பின்னோக்கி சென்று கொண்டிருந்த நாட்டை, மோடி அரசு மீட்டெடுத்துள்ளது" என்று புகழாரம் சூட்டியவாறே, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவை திரட்டி கொண்டிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கச்சத்தீவு: தொடர்ந்து நிதியமைச்சர் பேசும்போது, "கச்சத்தீவு விவகாரம் குறித்தும், மீனவர்கள் குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அன்னைக்கே கேட்டாங்க.. ஆனால் அப்பவே இவங்க பதில் சொல்லல.. இன்னைக்கும் இவங்க பதில் சொல்லல.

திமுகவில் அமைச்சராக இருந்தவரே ஒருமுறை பேசும்போது, 30000 கோடி ரூபாய் வரை அந்த குடும்பம் சம்பாதிச்சிட்டாங்க, அந்த பணத்தை எங்கே வைக்கிறது என்று தெரியாமல் விழிக்கிறாங்க என்ற சொன்னார்.. ஆனால், அதுகுறித்தும் கேள்வி கேட்டும் இப்போதுவரை பதில் வரவில்லை.

செருக்கு: காவிரியில் தண்ணி இல்லை. ஆனால், சாராயம் மட்டும் தண்ணி மாதிரி கொட்டுது... சாராயத்தினால் எத்தனையோ குடும்பங்கள் கெட்டுட்டு இருக்கு... போதைப்பொருள் வந்த ஆதாயத்தை வைத்து அந்த கோபாலபுரம் குடும்பத்தில் சினிமா எடுத்தார்கள்.. அதை பற்றி கேட்டாலும் பதில் இல்லை.. DMK என்பது Drung Munnetra Kazhagam ஆகிவிட்டது.. அதனால், "போதைப்பொருள் மூலமாக திமுகவுக்கு வந்த செருக்கு, ஓட்டு மூலமாக நொறுக்கு" என்று பேசி வருகிறார் நிதியமைச்சர்.

அதுமட்டுமல்ல, "பாரத் மாதா கீ சொல்லுங்க.. இன்னும் சத்தமா சொல்லுங்க.. இந்த சத்தம் கோபாலபுரம் வரைக்கும் கேட்கணும்" என்று பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிவருகிறார் நிர்மலா சீதாராமன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+