Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? பலே கடன் அட்டை.. கிரெடிட் கார்டு தொலைஞ்சிடுச்சா? இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரெடிட் கார்டுகள் தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில், அதனை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்? தவறாக பயன்படுத்தினால் எந்த மாதிரியான சிக்கல்கள் வந்துவிடும் என்பதையெல்லாம் அறிந்து வைத்து கொள்வது நல்லது.

உங்கள் வங்கியில் போதுமான இருப்பு இல்லாவிட்டாலும்கூட, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.. இது ஒரு வகையான கடன் ஆகும்... ஆனால், இதை நீங்கள் பின்னாளில் கட்டாயம் திருப்பி செலுத்த வேண்டும்.. இதற்கான சலுகை காலமும் உண்டு.. சலுகை காலத்தில் செலவழித்த தொகையை நீங்கள் திருப்பி செலுத்தினால், அந்த தொகைக்கு வட்டி எதுவும் வங்கி வசூலிக்காது..

Are these Excellent advantages of credit card and Super tips about how to use your credit card safely

முழுப்பணம்: கிரெடிட் கார்டுகளை நாம் தொடர்ந்து பயன்படுத்தி, செயல்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.. பணம் கட்டவேண்டிய தேதிக்குள் முழுப் பணத்தையும் கட்டிவிட வேண்டுமே தவிர, தவணைமுறையை தேர்வு செய்வதை தவிர்க்கலாம்.

இந்த கிரெடிட் கார்டுகளில் மொத்தம் 2 வகையான நிலுவைத்தொகை வசதி உள்ளது.. ஒன்று மொத்தமாக நிலுவைத்தொகை, இன்னொன்று குறைந்தபட்ச நிலுவைத் தொகை...

குறைந்தபட்ச நிலுவை தொகையை மட்டும் செலுத்தினால், உங்கள் கார்டு பிளாக் செய்யப்படாது... ஆனால் நிலுவை தொகைக்கு நீங்கள் அதிக வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். எனவே, கட்டணம் செலுத்தும்போது எப்போதும் மொத்த நிலுவைத் தொகையை செலுத்திவிட வேண்டும்.

கடன்வசதி: குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே செலுத்துவது என்பது, உங்கள் கடனை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றாலும், நீண்ட காலத்திற்கு அதிக கடன் சுமைக்கு நம்மை கொண்டுசென்றுவிடும்...

அதுமட்டுமல்ல, கிரெடிட் கார்டு பில்லை செலுத்தாமல் தவறவிடுவதும் மோசமான விளைவை தந்துவிடும்.. ஒருவேளை தாமதமாக கட்டணங்களை செலுத்தினால், வட்டி விகிதமும் அதிகமாகிவிடும். கிரெடிட் ஸ்கோர் எதிர்மறையாக பாதிக்கப்படலாம்.. அதனால், அதிக சுமை இருந்தால் கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல், நிலுவை தொகையை செலுத்துவதில் கவனம் செலுத்தினாலே போதும்.

கவனம் தேவை: கிரெடிட் கார்டுகளை எப்போதுமே நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்... இந்த கார்டுகளின் பின்புறம் CVV (Card Verification Value) என்ற நம்பர் இருக்கும். இந்த நம்பரை யாரிடமும் சொல்லக்கூடாது..

கிரெடிட் கார்டுகளுக்கான மாத பில்லை பாதுகாத்து சேகரித்து வைப்பது நல்லது.. அப்போதுதான் கணக்கு சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவற்றை அழித்து விடலாம். ஒவ்வொரு மாதமும் உங்கள் கிரெடிட் கார்டின் செலவுகளை சரி பார்க்க வேண்டும்.. அதில், நீங்கள் செலவழிக்காத தொகை குறிப்பிடப்பட்டிருந்தால், உடனே வங்கியை அணுகி தெளிவுபெறவேண்டும்.

ரசீதுகள்: கிரெடிட் கார்டை பயன்படுத்தியதற்கு தரப்படும் பில்லில் கையெழுத்திடும்முன்பு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை சரி பார்க்க வேண்டும்.. அதில் காலியிடங்கள் இருந்தால் அடித்துவிட வேண்டும்.. இல்லாவிட்டால் கடைக்காரர்கள் ஏதாவது ஒரு தொகையை எழுதிவிட்டு வங்கிக்கு அனுப்ப வாய்ப்புள்ளது.

மலிவாக கிடைக்கிறதே என்பதற்காக 3, 4 கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளக்கூடாது.. உங்கள் கார்டு திருடு போய்விட்டால், உடனே வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாங்கள் உடனே அந்த கார்டின் மூலம் பரிவர்த்தனைகள் எதுவும் செய்ய முடியாமல் தடுத்துநிறுத்த முடியும்.

ஆவணங்கள்: கிரெடிட் கார்டு விண்ணப்பிக்க பொதுவாக தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன தெரியுமா? ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் கார்டுகள் தேவையாக உள்ளது.. வருமானம் தொடர்பான சில ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+