கிரைய பத்திரம் பண்ண போறீங்களா.. கிரயம் செய்யும்போது "இதை" மட்டும் மறக்காதீங்க.. ரொம்ப ரொம்ப முக்கியம்
சென்னை: பத்திரப்பதிவு அலுவலகத்தில், கிரைய பத்திரம் செய்ய போறீங்களா? அப்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னென்னவென்று பார்க்கலாம்.
ஒரு நிலத்தை, ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, அதை உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரைய பத்திரம் எனப்படும்..

இதை முத்திரை தாள்களில் விரிவாக எழுதி, சார் பதிவாளர் அலுவலகத்தில், சாட்சிகள் முன்னிலையில் ரிஜிஸ்டர் செய்வதுதான், கிரயப்பத்திர பதிவு ஆகும்.
இந்த கிரைய பத்திரம் எழுதும்போது சில முக்கிய விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.. அதன்படி, வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம் என்று தனித்தனியாக எழுத வேண்டும். ஒருவேளை ஒரே மாவட்ட பெயராக இருந்தாலும் , வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம் என்று தனித்தனியாக பிரித்து எழுத வேண்டும்.
கவனிக்க வேண்டியவை: கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என்று எழுத வேண்டும். மேலும், அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்பதையும், பார்த்து, தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது நல்லது.
நிலத்தை எழுதி தருபவரின் பெயரும், அவரது இன்ஷியலும், சரியாக குறிப்பிட வேண்டும். அவரது அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, முன் பத்திரம் போன்றவைகளில் உள்ளதுபோலவே, பத்திரத்திலும் எழுதப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்..
அடையாள அட்டைகள்: அதேபோல, கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர், இன்ஷியல், அட்ரஸ் போன்றவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி, பிழையில்லாமல் இருக்கிறதா என்று சரிபார்த்து வேண்டும்.
முத்திரை வரி முறையாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும். முத்திரைத் தாள், வரைவோலை அல்லது இ-ஸ்டாம்பிங் முறை மூலம் முத்திரை வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்..
விற்பனையாளர், வாங்குபவர் கையொப்பம் இடம் பெற வேண்டும். குறிப்பாக, 2003க்கு முன் விற்பனையாளர் கையெழுத்து கிரயப் பத்திரத்தில் இடம் பெற்றிருக்கும்.. அதேபோல, கிரயப்பத்திரத்தில் எந்த ஒரு நிபந்தனையும் இருக்கக்கூடாது.
பட்டா மாற்றம்: அதேபோல, கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர், இன்ஷியல், அட்ரஸ் போன்றவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி, பிழையில்லாமல் இருக்கிறதா என்று சரிபார்த்து வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், இப்போதுள்ள முகவரியும் ஒன்றாக இருக்கிறதா அல்லது வேறு மாதிரி இருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும். காரணம், அந்த சொத்து அவருக்கு எப்படி வந்தது, வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம். அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை,விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
சர்வே எண்கள்: கிராம எண் + சர்வே எண் இரண்டை பற்றின தெளிவான புரிதல் வேண்டும். அதேபோல, பட்டா எண், பட்டா படி உட்பிரிவு போன்றவை இருந்தால், புதிய சர்வே எண்ணை குறிப்பிட வேண்டும். ஒருவேளை சொத்து, கூட்டுப்பட்டாவில் இருந்தால், அந்த சர்வே நம்பரையும் தெளிவாக, அதாவது திசைவாரியாக, நீளம் + அகலத்துடன் குறிப்பிட வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் அதையும் குறிப்பிட வேண்டும்.
கட்டிடம், கிணறு, பொது வழி, பொதுச் சுவர், பொது தண்ணீர் உரிமை, இதெல்லாம் தெளிவாக எழுத வேண்டும். பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவரின் கையொப்பமும், எழுதி கொடுப்பவர் கையெழுத்தும், இரு தரப்பு சாட்சிகளின் கையெழுத்தும் அட்ரஸூடன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முத்திரைத்தாள்கள் சரியாக உள்ளதா? DD கரெக்ட்டாக எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
ஆவணங்கள்: இறுதியாக பட்டா நகல் மற்றும் அதன் நில வரைவடம் அதில் இணைத்திருக்க வேண்டும். நகல் ஆவணம் அசல் ஆவணத்துடன் ஒப்பிடும் வகையில் எல்லா ஆவணமும் ஒத்திருக்க வேண்டும்.. கையால் எழுதப்பட்ட நகல் ஆவணத்தை அசல் ஆவணத்துடன் ஒப்பிடும்போது விற்பனையாளரின் பெயர் வாங்குபவரின் பெயர், கிரயத்தொகை, சொத்து விபரம் சரிபார்க்க வேண்டும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications