Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மிஸ்டர் கிளீன்".. முதலமைச்சருக்கே முதன்மை ஆலோசகர்.. அடேங்கப்பா, தலைமை செயலாளருக்கு இத்தனை கடமைகளா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.. தலைமை செயலாளர் என்பவர் யார்? ஒரு மாநில முதல்வருக்கே முதன்மை ஆலோசகராக விளங்கும், இந்த தலைமை செயலாளரின் பணிகள், அதிகாரங்கள் என்னென்ன தெரியுமா?
மாநிலத்தின் நிர்வாகம், தங்குதடையின்றி இயங்க செய்வது, தலைமை செயலாளரின் முழுமுதற் பொறுப்பாகும்.. அரசின் கீழ் செயல்படும் அனைத்துத் துறைகளின் செயலாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரமும் தலைமை செயலாளருக்கு உண்டு. அதேபோல் அனைத்து துறைகளின் பணியாளர்களும் இவரது கட்டுப்பாட்டுக்கு உள்ளானவர்கள்.

சவால்கள்: ஒவ்வொரு துறைகளிலுமுள்ள சவால்களை எதிர்கொள்வது மற்றும் தேவையான மாற்றங்களை செய்வதும் இதில் அடங்கும். முக்கியமாக, அவசரநிலைகள் அல்லது நெருக்கடிகளின் போது, ​​நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைப்பதிலும், பொது பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தலைமை செயலாளரே முதன்மையாக நிற்பார்.

chief secretary Tamil Nadu stalin

அரசு தொடர்பான டெண்டர்கள், கான்ட்ராக்ட்டுகள், நிலம் கையகப்படுத்துதல் என அனைத்தும் தலைமைச் செயலாளரின் கீழ்தான் செயல்படும்... அதாவது, நிர்வாகத்தலைமை, முதலமைச்சரின் ஆலோசனைப் பங்கு, அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, மனித வள மேலாண்மை, நிதி மேலாண்மை என்று ஒவ்வொன்றிலும் தலைமை செயலாளரின் பணிகள் முக்கியத்துவம் நிறைந்தவை.
அமைச்சரவை கூட்டம்: அமைச்சரவைக் குழுவின் செயலாளரும் தலைமை செயலாளரே.. அமைச்சரவை குழு கூட்டங்களை திட்டமிடுவதும், அந்தக் கூட்டத்தின் இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை திட்டமிடுவதும்கூட தலைமை செயலாளரின் முக்கிய பொறுப்புதான்.. அரசு விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை நிர்வகிக்கும் அதிகாரமும் இந்தப் பதவிக்கு உண்டு.அரசுத் துறைகளுக்கு வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளும், உத்தரவுகளும் தலைமைச் செயலாளர் பெயரில் வெளியிடப்படும்.

முதலமைச்சரின் ஆலோசனை பங்கு: நாட்டை வழிநடத்தும் முதலமைச்சருக்கே, முதன்மை ஆலோசகராக இருப்பவர் தலைமை செயலாளர்தான்.. பலதரப்பட்ட கொள்கை விஷயங்களில் தலைமைச் செயலாளரே ஆலோசனைகளை வழங்குவார்.. பொருளாதார மேம்பாடு, சமூக நலன், சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் பிற முக்கியமான பிரச்சினைகள் அடங்கும்..

உரிய நேரத்தில், உரிய தகவல்களை தருவதுடன், அதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்து குறித்தும் முதலமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்கக்கூடியவராக விளங்குவார். ஒரு திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக அம்சங்கள், அவற்றுக்கான நிதி ஆதாரம், நடைமுறை பிரச்சினைகள் என எல்லாவற்றையும் முதல்வருக்குத் தலைமைச் செயலாளர்தான் எடுத்துரைக்க வேண்டும்.

அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு: அதேபோல, ஒரு மாநில அரசு சிக்கலின்றி செயல்பட வேண்டுமானால் மத்திய அரசின் ஒத்துழைப்பும், இணக்கமும் அவசியமாகும். அந்தவகையில், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே, ஒரு இணைப்பு பாலமாக செயல்படுபவர் தலைமைச் செயலாளர்தான்.. வள ஒதுக்கீடு, கொள்கை சீரமைப்பு, மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகள் போன்ற விஷயங்களில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவார்..

மத்திய அரசு நிதி உதவி பெறும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பது குறித்தும் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். மத்திய அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பை தழைக்க செய்வதும் தலைமை செயலாளர்தான். மண்டல அளவிலான மாநில அரசுகள் ஆணையத்திலும் மாநிலத்தின் சார்பாக அதன் தலைமை செயலாளரே பிரதிநிதியாக செயல்படுவார்.

மனித வள மேலாண்மை: குடிமையியல் பணி தொடர்பான விவகாரங்களும் இந்தப் பொறுப்பின் கீழ்தான் வரும். முக்கிய அரசு உயர் அதிகாரிகளின் நியமனங்களையும் தலைமைச்செயலாளரே பார்ப்பார். குறிப்பாக, ஆட்சேர்ப்பு, பயிற்சி, டிரான்ஸ்பர், புரமோஷன் முதல் சம்பந்தப்பட்டவர்களின் செயல்திறனையும் மதிப்பிட்டு, பொறுப்புகளை வலியுறுத்தும்வரை அடங்கும்.

மாநிலத்தின் மேம்பாட்டுபணிகளையும் திட்டங்களையும் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் தலைமை செயலாளரின் தலையாய பணியாகும். அதேபோல, அரசு திட்டங்களை அந்தந்தத் துறைகளின் செயலாளர்கள் உரிய முறையில் நிறைவேற்றுகிறார்களா? திட்டப்பலன்கள் மக்களை சென்றடைகின்றனவா என்பதையும் துறை செயலாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடத்தி, தலைமை செயலாளர் உறுதி செய்வார்.
ஐஏஎஸ் அதிகாரிகள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர்களால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதுகுறித்தும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வது தலைமைச் செயலாளர்தான்.. ஐஏஎஸ் அதிகாரி தவறு செய்யும்போது, விசாரணை நடத்தப்பட்டு, அதில் தவறு செய்ததற்கான முகாந்திரம் இருப்பது உறுதியானால், ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருக்கும் தலைமை செயலாளர்தான், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்... இறுதியாக, மாநில அரசை நிர்வாகம் செய்யும் தலைவர் என்ற முறையில், தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பார்.

நிதி மேலாண்மை: அரசாங்க செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு, ஒரு மாநிலத்தின் பட்ஜெட் திட்டத்தை தயாரிப்பதில் தலைமை செயலாளரின் பங்கு தவிர்க்க முடியாதது... சட்ட பேரவையில் புதிய திட்டங்களை முதல்வர் அறிவிப்பார்... அந்தவகையில், அரசு திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய பொறுப்பு தலைமை செயலாளருக்கு மட்டுமே உண்டு.

பல்வேறு துறைகளை கண்காணித்தல், அவற்றுக்கிடையே திறமையான ஒருங்கிணைப்பை உறுதி செய்வது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது போன்றவைகள் அடங்கும். அரசின் கொள்கைகள் அடிமட்ட அளவில், சிறப்பாக செயல்படுகிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்வதும் தலைமை செயலாளரின் பணியாகும்.

அசாதாரண சூழல்: மாநிலத்தில் நிலவும் நெருக்கடிகள், அல்லது அசாதாரண சூழ்நிலைகளின்போது, அரசின் பக்கம் நின்று, அவசியமாக எடுக்க வேண்டிய முடிவுகளுக்கான ஆலோசனை தர வேண்டியது தலைமைச் செயலாளருடைய பொறுப்பு.

முக்கியமாக எமர்ஜென்சி அமல்படுத்தப்படும் சமயங்களில், மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் அவரின் கீழ்தான் இருக்கும்... எந்தவொரு நெருக்கடி, அசாதாரண சூழ்நிலையிலும் அரசின் பக்கம் நின்று, அவசியமாக எடுக்க வேண்டிய முடிவுகளுக்கான ஆலோசனை தர வேண்டியது தலைமை செயலாளருடைய பொறுப்பாகும்...

இப்படி தமிழக அரசின், ஒட்டுமொத்த பணிகளுக்கும், முழுபொறுப்பு தலைமைச் செயலாளரே என்பதால், மிக உயரிய பதவியாக போற்றப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+