சிதறுதா திமுக ஓட்டு? அந்த 10 தொகுதி இதுதானா? இறங்கியடிக்க தயாராகும் 2 கட்சிகள்..எல்லாம் பாஜக பிளான்?
சென்னை: பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க போவதாக, டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் கூட்டாக அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்த சில தகவல்கள் கசிந்து வருகின்றன.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த ஒரு வருடமாகவே செய்தியாளர்களிடம் பேசும்போது, தன்னுடைய கூட்டணி நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக எதுவுமே சொல்லவில்லை. ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் இணைந்து தேர்தலை அமமுக சந்திக்கும் என்று சொல்லிவந்தாரே தவிர, அந்த தேசிய கட்சி, பாஜக என்று வெளிப்படையாக சொல்லவில்லை.

எனினும், பாஜகவுடனேயே தினகரன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகவே செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அந்தவகையில், பாஜகவுடனான பேச்சுவார்த்தைகளையும் அமமுக அவ்வப்போது மறைமுகமாக நடத்தி வந்ததாக தெரிகிறது.
அமமுக: சில நாட்களுக்கு முன்பு, தங்களுக்கு சாதகமாக உள்ள 22 தொகுதிகளை பாஜகவிடம் லிஸ்ட் போட்டு தந்திருந்தது அமமுக.. இதில், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகள் கேட்கப்பட்டிருக்கின்றன.. குறிப்பாக, ராமநாதபுரம் தொகுதி தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியிருந்தாராம்.. அதேபோல, தேனி அல்லது சிவகங்கையையும் அமமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டாராம்.
இந்த முறை தேர்தலில் தினகரன் போட்டியிட போவதில்லை என்றாலும், தன்னுடைய ஆதரவாளர்களை களமிறக்க மேற்கண்ட இடங்களை கேட்டிருந்தார். இதில், தேனி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்படுமா என்று தெரியவில்லை.
ஓபிஎஸ் டீம்: காரணம், இந்த தொகுதியை ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்க பாஜக நினைக்கிறதாம். இந்த தேனி தொகுதியை பொறுத்தவரை, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என இருவருக்குமே செல்வாக்கு இருப்பதால், பாஜக யாருக்கு ஒதுக்க போகிறது என்பது தெரியவில்லை.
தேனியை தவிர்த்து, சிவகங்கை, திருச்சியை அமமுகவுக்கு பாஜக ஒதுக்குமா? என்பதிலும் எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது. மொத்தத்தில், 22 சாதகமான தொகுதிகளை லிஸ்ட் போட்டு தந்தாலும், குறைந்தது 10 சீட்டுக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதிலும், பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டாலும்கூட குக்கர் சின்னத்தையும் வாங்கிவிட விட வேண்டும் என்பதிலும் தினகரன் முனைப்பு காட்டி வருகிறாராம்.
கூட்டணி விவகாரம்: சமீபத்தில் 2 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில், ஓபிஎஸ் - தினகரன் கூட்டணி விவகாரம் தொடர்பாக ஏதாவது முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமரை சந்திக்க அழைப்பு எதுவும் வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில், பாஜகவின் தொகுதி பங்கீடு குழுவினர், விரைவில் ஓபிஎஸ், தினகரன் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
எனவே, கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவருமே ஆர்வமாகி உள்ளனர். அந்தவகையில், ஓபிஎஸ், தினகரன் இருவருக்கும் சேர்ந்து பாஜக 10 தொகுதிகளை ஒதுக்கி, அவைகளை சமமாக பிரித்து, தலா 5 தொகுதிகளில் இருவருமே போட்டியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாம்.
தொகுதிகள்: அதுமட்டுமல்ல, எந்தெந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது குறித்து, ஓபிஎஸ் - தினகரன் தரப்பில் லிஸ்ட் ஒன்று தயாரித்து வைத்திருக்கிறார்களாம்... அமமுக தரப்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள், ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, தென்சென்னை, வேலூர், நீலகிரி, நாகப்பட்டிணம், விழுப்புரம், திண்டுக்கல், திருவள்ளூர் தொகுதிகள் கோரப்பட்டுள்ளது..
ஓபிஎஸ் தரப்பில், தேனி, ஸ்ரீபெரும்புதூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சை, வட சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை ஆகிய தொகுதிகள் கோரப்பட்டுள்ளது. ஆளுக்கு ஒருபக்கம் லிஸ்ட் தயார் செய்தாலும், ஓபிஎஸ் - தினகரன் இருவருமே தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறதாம்.
என்னாகுமோ: இருவருமே தனி சின்னத்தில் நிற்க விரும்புவதாக தெரிவித்துள்ள நிலையில், இன்னும் அதற்கு மேலிடத்திலிருந்து பச்சை கொடி கிடைக்கவில்லையாம். அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications