நீலாங்கரை சமாச்சாரம்.. "கவுனில்" நின்ற கமல்ஹாசன்.. கூட்டணி சமயத்தில் இது வேற கிளம்பிருச்சே.. நிஜமா?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் குறித்து 2 தகவல்கள், இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. இதுதான் ஹாட் டாபிக்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் விழா, கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டுள்ளது.. இதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதிலுமிருந்து, கட்சி நிர்வாகிகளும், ரசிகர் மன்றத்தினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்..

தடபுடல் விருந்து: தடபுடல் விருந்து, கலைநிகழ்ச்சிகள் என அமர்க்கப்பட்டுள்ளன. அனைத்தையும் ரசித்துப்பார்த்த கமல், மேடையில் நின்று, நிர்வாகிகளையும், ரசிகர்களையும் தனித்தனியே சந்தித்துள்ளார்..
ஆனால், மேடையில் கமலுக்கும், அவரை சந்திக்கும் நிர்வாகிகளுக்கும் இடையில், மேஜையை வைத்து, இடைவெளி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், மேடையேறி தன்னிடம் வந்தவர்களுக்கு கைகளை கூப்பி வணக்கம் மட்டுமே கமல் சொன்னார்.
அவர்களிடமிருந்து புத்தகங்களையும் பரிசாக ஏற்றார்.. சில நிர்வாகிகளும், ரசிகர்களும் கமலை பார்த்ததுமே, உணர்ச்சிவசப்பட்டு, கைகளை குலுக்க சென்றுள்ளார்கள். ஆனால், அவர்களிடம் கமல் கைகளை நீட்டாமல், வணக்கம் மட்டுமே சொல்லியிருக்கிறார்.
விரக்திகள்: இதனால், ஏமாற்றமடைந்த நிர்வாகிகளும், ரசிகர்களும், விரக்தியுடனும், ஏமாற்றத்துடனும், அதிருப்தியுடனும், மேடையிலிருந்து கீழே இறங்கி சென்றுவிட்டார்களாம். சமூக நீதியும், ஜனநாயகமும் தங்களின் 2 கண்கள் என்று சொல்லிவரும் கமல், சொந்த கட்சியினரின் கைகளை குலுக்க தயங்குவது ஏன்? இதுதான் சமூக நீதியா? மநீம தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களாம்.
அதேபோல, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நீண்ட கவுன் போல ஆடையை அணிந்து வந்தது, கமலின் ரசிகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பிடிக்கவில்லையாம்.. ஒரு கட்சி தலைவர், அதுவும் எம்பி தேர்தலுக்கு தயாராகி வரும்நிலையில், இப்படியெல்லாம் கவுன் போட்டுக்கொண்டு வருவதா? தலைமைக்கான இமேஜை அந்த டிரஸ் உருவாக்கவில்லை என்றும் கட்சி தொண்டர்கள் பேசிக்கொள்கிறார்களாம்.
டிரஸ் மீம்ஸ்: இந்த 2 செய்திகளும் உண்மையா? அல்லது கிளப்பி விடப்பட்டதா? என்று தெரியவில்லை.. விஜய் டிவிக்கு அணிந்து வந்த டிரஸ் குறித்து, இணையத்தில் மீம்ஸ்கள் உலா வந்தபடி இருப்பது உண்மைதான்..
காரணம், கமலின் பிக்பாஸ் டிரஸ்ஸுக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.. ஒவ்வொரு முறையும், பிக்பாஸ் ஷோவின் புரோமோ வெளியாகும்போதும், கமல் என்ன பேசுகிறார் என்பதைவிட, அவரது டிரஸ்ஸை ரசித்து பார்ப்பவர்கள்தான் அதிகம்.
கட்சி சின்னம்: ஒருமுறை, கருப்பு ஊதா நிறத்தில் கோட் சூட் அணிந்து கொண்டு, அந்த டிரஸ்ஸின் ஹாண்ட் ஸ்லீவில், "மக்கள் நீதி மய்ய கட்சி"யின் கொடியின் சின்னத்தை போல வைத்திருந்தார் கமல்.. பொதுநிகழ்ச்சியில், எதற்காக இப்படி சின்னத்துடன் வந்து நிற்கிறார் கமல்? என்று பலரும் அப்போது கேள்வி எழுப்பியிருந்தனர். அந்தவகையில், தற்போதைய கவுன் மாடல் டிரஸ்ஸூம், மக்களை ஈர்த்திருந்தது.
ஆனால், நீலாங்கரை விழாவில், நிர்வாகிகளை தொடவில்லை, அவர்களுக்கு கைகுலுக்கவில்லை, சமூக நீதிக்கு எதிராக கமல் நடந்துகொண்டார் என்றெல்லாம் வெளிவரும் தகவலின் உண்மைத்தன்மை தெரியவில்லை. விரைவில் நடக்க போகும் தேர்தலில், திமுகவுடனான கூட்டணி, கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது..
ஆனால், தொகுதி, சீட் ஷேரிங் போன்ற விவரங்கள் மட்டுமே இன்னமும் பேசப்படாமல் உள்ளது. அநேகமாக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து கமல்ஹாசன் பேச வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.
பாஜக வாக்குகள்: அந்தவகையில், பாஜகவின் வாக்குகளை, இந்த முறையும் கமல் பிரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கமல் பெயரை டேமேஜ் செய்வதற்காகவே, இப்படியெல்லாம் கிளப்பிவிடுகிறார்கள் என்று ஒரு சாரார் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.. அந்தவகையில், கமல் மீதான சலசலப்புகள் இன்னமும் ஓயவில்லை..!!
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications