Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் "டபுள் ஸ்கெட்ச்".. சென்னை கோபாலபுரத்தில் ஒரே பரபரப்பு போல! அப்ப கிடுகிடுன்னு வளருதா பாஜக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியிலும், கட்சியிலும் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தகவல்கள் பரபரத்து வரும்நிலையில், ஒரு பிரத்யேகமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் களப்பணியை சரியாக செய்யாமல், ஃபெர்மான்ஸ் குறைவாக இருந்த அமைச்சர்கள் குறித்து, உளவுத்துறையும், சபரீசனின் "பென்" அமைப்பும் முதல்வருக்கு ரிப்போர்ட்டை தந்திருந்தது.

Are these the 2 plans discussed in Gopalapuram Family and When will Udayanidhi Stalin be given the post of Deputy CM

ரகசிய ரிப்போர்ட்: இதே போன்ற ரகசிய ரிப்போர்ட் ஒன்று, உதயநிதிக்கும் சென்றிருந்ததாம்.. எனவே, தேர்தல் ரிசல்ட் வந்ததும் அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தியிருக்கிறாராம் உதயநிதி... அந்தவகையில், பெர்ஃபார்மென்ஸ் குறைவாக இருக்கும், நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள். அதேபோல, இளைஞர் அணியை சேர்ந்தோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம் என்கிறார்கள்.

ஆக மொத்தம், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமைச்சரவை மாற்றம், திமுக நிர்வாகிகளுக்கு கல்தா, உள்ளிட்ட அதிரடி மாற்றங்களை கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறாராம். அதுபோலவே, துணை முதல்வராக உதயநிதிக்கு ப்ரமோஷன் இருக்கலாம் என்றும் சலசலக்கப்படுகிறது.

உதயநிதி: இதுகுறித்துதான், நமக்கு ஒரு பிரத்யேகமான செய்தி கிடைத்திருக்கிறது.. அதாவது, துணை முதல்வர் பதவியை ஏற்பது இப்போது வேண்டாம் என உதயநிதி நினைக்கிறாராம். அதே எண்ணத்தில்தான் முதல்வர் ஸ்டாலினும் இருப்பதாக திமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் குடும்பத்தில் இயல்பாக ஒரு மீட்டிங் நடந்துள்ளது.. இந்த மீட்டிங்கில் இந்த விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியைப் பிடித்தால் உதயநிதிக்கு கட்டாயம் ப்ரமோஷன் தரப்படுமாம்.. அதற்கு மாறாக, மீண்டும் மோடியே பிரதமரானால் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டாம் என்று நினைக்கிறார்களாம்.

நியமனம்: மத்தியில் அமையும் ஆட்சிக்கும், உதயநிதியை துணை முதல்வராக நியமிப்பதற்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்? என்று நாம் விசாரித்தபோது, " அதெல்லாம் அப்படித்தான். கூட்டிக் கழித்துப் பாருங்கள் கணக்குப் புரியும் " என்று சொல்கிறார்கள் கோட்டையில் இருக்கும் அரசு அதிகாரிகள்.

இதற்கிடையே, திமுகவில் நிர்வாகிகள் மாற்றம் நடக்கும் போது, மாவட்ட பொறுப்பில் உள்ள அமைச்சர்களையும் மாற்றலாம் என்கிற யோசனையில் இருக்கிறதாம் கட்சித் தலைமை. அதாவது, திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரும், ஒரு மாவட்டத்தின் பொறுப்பாளராகவும் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுக்கு அந்த பொறுப்பைக் கொடுத்துள்ளார்.

ரிப்போர்ட்: ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் பொறுப்பு மாவட்டத்தை முழுமையாக கவனிக்கவில்லை என சில அமைச்சர்கள் மீது முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

அதாவது, அமைச்சர்கள் தங்கள் மாவட்டத்தில் காட்டிய அக்கறை பொறுப்பு மாவட்டத்தின் மீது காட்டவில்லை என்பதுதான் புகாராம். அதேசமயம், சில அமைச்சர்கள், இந்த மாவட்டம் எங்களுக்கு வேண்டாம் என தலைவர் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்களாம். அதனால், அமைச்சர்களின் பொறுப்பிலுள்ள மாவட்டங்களிலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என்கிறார்கள் மேலிட உடன்பிறப்புகள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+