3 சூரியன்.. திமுகவுடன் இணைகிறார் அந்த "பிரபலம்".. அப்ப பாஜக ஓட்டெல்லாம் சிதறிடுமோ? விஸ்வரூப வளர்ச்சி
சென்னை: மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் மற்றும் திமுக கூட்டணி குறித்து சில தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், தமிழக அரசியல் களம் சூடாகி வருகிறது.
பாஜக வாக்குகள்: கடந்த முறை போலவே, இந்த முறையும், பாஜகவின் வாக்குகளை, கமல் பிரிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டு வருவதால், மய்யத்துக்கு 2 சீட் ஒதுக்க அறிவாலயம் ஓகே சொல்லும் என்கிறார்கள்..

சமீபத்தில், கமல்ஹாசனுக்கு சென்னை நீலாங்கரையில் நடத்தப்பட்ட பிறந்தநாள் விழாவுக்காக, தமிழகம் முழுவதிலுமிருந்து, கட்சி நிர்வாகிகளும், ரசிகர் மன்றத்தினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்..
விருந்து, கலைநிகழ்ச்சிகள் நடந்து முடிந்த நிலையில், நிர்வாகிகளையும், ரசிகர்களையும் தனித்தனியே மேடையில் கமல் சந்தித்துள்ளார்.. ஆனால், மேடையில் கமலுக்கும், அவரை சந்திக்கும் நிர்வாகிகளுக்கும் இடையில், மேஜையை வைத்து, இடைவெளி ஏற்படுத்தப்பட்டுவிட்டதாம்.
கமல்ஹாசன்: கமலை பார்த்ததுமே, உணர்ச்சிவசப்பட்டு, கைகளை குலுக்க சென்ற நிர்வாகிகளிடம், கமல் தன்னுடைய கைகளை நீட்டிகுலுக்காமல், வெறும் வணக்கம் மட்டுமே சொன்னதால், நிர்வாகிகளும், ரசிகர்களும், ஏமாற்றத்துடனும், அதிருப்தியுடனும், மேடையிலிருந்து இறங்கி சென்றுவிட்டதாக தகவல்கள் கசிந்தன.
சமூக நீதியும், ஜனநாயகமும் தங்களின் 2 கண்கள் என்று சொல்லிவரும் கமல், சொந்த கட்சியினரின் கைகளை கூலுக்க தயங்குவது ஏன்? இதுதான் சமூக நீதியா? என மநீம தொண்டர்கள் அதிருப்தி அடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டன. அதுமட்டுமல்ல, திமுகவுடன் கூட்டணி வைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், கமல் மீதான விமர்சனங்களை, வேண்டுமென்றே சிலர், சோஷியல் மீடியாவில் கிளப்பிக்கொண்டு இருப்பதாகவும் மய்யத்தினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
சீட் ஷேரிங்: இந்நிலையில், கூட்டணி தொடர்பாக சில தகவல்கள் கசிந்து வருகின்றன.. திமுக கூட்டணியில், தொகுதி, சீட் ஷேரிங் போன்ற விவரங்களில் இதுவரை உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்றாலும், கமலுக்கு தென்சென்னையில், 1 சீட் தந்து, டெல்லி அனுப்புவதற்கு திமுக சம்மதித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், மய்யத்தினர் தரப்பு வேறு விதமான யோசனைகளை முன்வைத்து வருகிறது.
தென்சென்னை: தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார் போன்ற தொகுதிகளில் தலா ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றுள்ளோம்.. அதனால், இந்த 4 தொகுதிகளில் ஒன்று, தெற்கு அல்லது கொங்கு மண்டலத்தில் ஒன்று என 2 தொகுதிகள் கிடைத்தால், திமுக கூட்டணியில் இணையலாம் என்றும் கமலிடம் ஆலோசனை சொல்வதுடன், 1 + 1 என்ற பார்முலாவுக்கு நிச்சயம் திமுக ஓகே சொல்லும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்களாம்.
திமுக தரப்பிடம் மய்யம் சார்பாக சில பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.. குறிப்பாக, கடந்த தேர்தலில் விசிகவுக்கு 2 சீட்தான் தரப்பட்டு, இந்த முறை 3 கேட்டு வரும்போது, மநீம சார்பாக 2 சீட் கேட்க கூடாதா? வரும் பிப்ரவரிக்குள், படங்களின் ஷூட்டிங்குகள் முடித்துவிட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவும் கமல் திட்டமிட்டு வருகிறார்..
திமுக கூட்டணி: திமுக கூட்டணிக்கு ஆதரவாக, 40 தொகுதிகள் மட்டுமில்லாமல், தென் மாநிலங்கள், வட மாநிலங்களிலும் "இண்டியா" கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் கமல்ஹாசன் தயாராக இருக்கிறார். கூட்டணி வெற்றிக்காக, இவ்வளவு முயற்சிகளையும் கமல்ஹாசன் எடுக்கும்போது, கூடுதலா ஒரு தொகுதி தருவது குறித்து யோசிக்க வேண்டாம்" என்றெல்லாம் திமுகவிடம் பேசப்பட்டு வருகிறதாம்.
ஆனால், இதுகுறித்து கமல் என்ன முடிவெடுக்க போகிறார் என்று தெரியவில்லை.. முதல்வர் ஸ்டாலினை விரைவில் நேரில் சந்தித்து பேசும்போது, சீட் ஷேரிங் குறித்து பேச வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.. தேசிய அளவில் பிரபலம் கொண்ட கமல், வடமாநிலங்களிலும் பிரச்சாரத்தில் இறங்கினால், அது காங்கிரஸ், திமுகவுக்கு பெருத்த பலத்தினை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது.
பாஜக வாக்குகள்: கடந்த முறை போலவே, இந்த முறையும், பாஜகவின் வாக்குகளை, கமல் பிரிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டு வருவதால், மய்யத்துக்கு 2 சீட் ஒதுக்க அறிவாலயம் ஓகே சொல்லும் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
இதில், இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. இந்த முறை, ஐகேஜகே நிறுவனர் பாரிவேந்தர், பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதாக தெரிகிறது. இப்போதைக்கு அவர் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.. எனவே, கமலுக்கு தென்சென்னையுடன் சேர்த்து, இந்த பெரம்பலூர் தொகுதியையும் ஒதுக்க திமுக முன்வரலாம் என்கிறார்கள்..
1+1: ஆனால், மநீமய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் உள்ள நிலையில், பாரிவேந்தரை போலவே, கமலுக்கும் உதயசூரியன் சின்னத்தை ஒதுக்க திமுக முன்வரலாம் என்கிறார்கள். அதாவது 1+1 சீட் என்றால், ஒரு தொகுதியில் டார்ச் லைட், இன்னொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கினால், மய்யம் என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications