Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கருப்பு ஆடு" மாட்டுது? உளவுத்துறையால் பறந்த அசைன்மென்ட்.. தமிழக பாஜகவில் இந்த "5 பேரும்" வெற்றி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் வெளியாகி உள்ள நிலையில் தேர்தல் தீவிரம் உச்சத்துக்கு சென்றுள்ளது.. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக பிரத்யேமான செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

நடக்க போகும் தேர்தலில் எப்படியாவது 400 சீட்டுக்கு மேல் பெற வேண்டும், ஹாட்ரிக் ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்த தீவிரம் தமிழகத்தில் சற்று கூடுதலாகவே தென்படுகிறது.

Are these the 5 constituencies that BJP is most focused on and What are the Tamil Nadu BJPs Big Assignment

பிரதமர் மோடி: அதனால்தான், ஏற்கனவே 7 முறை வந்துசென்ற பிரதமர் மோடி, 8வது முறையாக மறுபடியும் இங்கே வரப்போகிறாராம்.. நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவும் போகிறாராம். உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினமும், பாஜக தேசிய தலைவர் நட்டா நாளைய தினமும் தமிழகத்தில் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன்மூலம் தென்மாவட்டங்களில், காலூன்றுவதுடன், இந்த முறை வாக்கு வங்கியையும் கணிசமாக உயர்த்திவிட வேண்டும் என்பதிலும் பாஜக உறுதியாக உள்ளது.

பிரபலமானவர்கள்: இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.. தமிழக பாஜக சார்பில் போட்டியிடும் பிரமுகர்கள் அனைவருமே பிரபலமானவர்கள் என்பதால், தங்களது வெற்றியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கும் நெருக்கடிக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.. எனவே, திமுகவை குறி வைத்தே, தன்னுடைய தேர்தல் வியூகங்களையும் பாஜக முன்னெடுத்தும் வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், நமக்கு ஒரு பிரத்யேகமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பாஜகவில் கோவையில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல். முருகன், தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தராஜன், நெல்லையில் போட்டியிடும் பாஜக சீனியர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் போட்டியிடும் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வெற்றிக்காக சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாம் பாஜக மேலிடம்.

மோப்பம்: ஆனால், மேற்கண்ட இந்த தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, சில கட்சிகள் திட்டம் தீட்டி வைத்திருக்கிறதாம். இந்த திட்டத்தினை உடனே மோப்பம் பிடித்துவிட்ட மத்திய உளவுத்துறையானது, தங்களின் மேலிடத்துக்கு இதைப்பற்றி தெரியப்படுத்தியுள்ளது.

உடனே மேலிடமும், அதிகாரிகளுக்கு முக்கிய அசைன்மெண்ட் ஒன்றினை வழங்கியிருக்கிறது.. அதன்படி, எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் ரூட்டுகளை தேர்தல் பார்வையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதனடிப்படையில் பணம் கொடுப்பதை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்றும், அப்படி பணத்துடன் பிடிபடுவதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

கண்டிஷன்: அதுமட்டுமல்ல, ஒரு பைசா கூட வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு விடக்கூடாது என்கிற ஸ்ட்ரிக்டான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, "கழுகுக்கண்களுடன்" அசைன்மென்ட் வேலையிலும் தீயாய் இறங்கியிருக்கிறார்களாம் ஆபீசர்ஸ்.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மேலிட பாஜக முன்னெடுத்து வரும் இந்த நடவடிக்கைகள், அரசியல் களத்தை இன்னும் சூடாக்கி வருகின்றன.

பூனைக்குட்டி: பாஜகவின் விருப்பம் இப்படியிருந்தாலும், ரஜினிகாந்த் இதுதொடர்பாக என்ன முடிவெடுக்க போகிறார் என்பதுதான் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.. இதை திமுகவும் கவனித்து வருவதாகவே தெரிகிறது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பாஜக முன்னெடுத்து வரும் "ரோடு ஷோ" உள்ளிட்டவைகள், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியோடு தென்படுகிறது. இந்த சமயத்தில், ரஜினியின் ஆதரவும் கிடைத்தால் அது பாஜகவுக்கு மேலும் பிளஸ்பாயிண்ட்டாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒருவேளை பாஜகவுக்கு ரஜினி ஆதரவு தந்துவிட்டால், திருமாவளவன் சொல்லும் அந்த "பூனைக்குட்டி" நிஜமாகவே வெளியே வந்துவிடுமா??? என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+