Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிச்சி நொறுக்கிட்டாரே அந்த "பிரபலம்".. இப்ப எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலி.. கவனிக்கும் பாஜக மேலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ பன்னீர்செல்வம் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியுள்ள நிலையில், அதுகுறித்த விவாதங்களும், கருத்துக்களும்தான் இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றன.

எம்ஜிஆா் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக 51ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாட்டை நடத்துவதாக ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்திருந்தனர்.

அதன்படியே, நேற்றைய தினம் திருச்சியில் மாநாடு நடத்தப்பட்டது.. மாலை 5 மணிக்கு இந்த மாநாடு பண்ருட்டியார் தலைமையில் துவங்கியது.. இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Are these the actions taken by OPSs sons against Edappadi palanisamy and What are Jayapradeeps plans

10 தீர்மானங்கள்: குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழு கலைக்கப்பட்டு, அடிப்படை தொண்டர்களால் புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும், போலி பொதுக்குழு மூலம் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லாது, எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக ஜாதி, மதம், கடந்து அனைத்து மக்களுக்குமான இயக்கமாக இருக்க வேண்டும், நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான், புதிய பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் ஓபிஎஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

லூசு, லூசு: மாநாட்டில் உரையாற்றிய வைத்திலிங்கம், "ஆயிரம் எடப்பாடி பழனிச்சாமி வந்தாலும், ஒரு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஈடாகாது. மூன்று முறை முதல்வர் பதவியை திரும்ப கொடுத்தவர் ஓபிஎஸ். எடப்பாடி பழனிச்சாமிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.. ஆனால், ஓபிஎஸ்ஸின் பேச்சை கேட்டு பலரும் திகைத்து விட்டனர்.. காரணம், இதற்கு முன்பு எடப்பாடி தரப்பை இவ்வளவு வெளிப்படையாக ஓபிஎஸ் சாடியது கிடையாது.. அதுவும் பகிரங்கமாகவே பெயரை சொல்லி, விமர்சித்ததை பலரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

Are these the actions taken by OPSs sons against Edappadi palanisamy and What are Jayapradeeps plans

கல்நெஞ்சக்காரர்கள்: ஓபிஎஸ் பேசும்போது, "கழக விதிகளை மாற்றி அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய கபட வேடதாரி, அரசியல் வியாபாரி, நயவஞ்சக துரோகி எடப்பாடி பழனிசாமி... இந்த கல் நெஞ்சக்காரர்களை ஓட, ஓட விரட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஐயா, எடப்பாடி பழனிசாமி, உங்களுக்கு முதல்வர் பதவியை சின்னம்மா தான் கொடுத்தார். புரட்சி தலைவரும் நீயும் ஒன்றா, அவருடைய கால் தூசிக்கு நீ வரமாட்டாய். லூசு சிவி சண்முகம்..

அந்த லூசு வந்து, 23 தீர்மானங்களும் செல்லாது செல்லாது என்று சொல்கிறது. அந்த தீர்மானத்தை வடிவமைத்தது யார்? ஜெயக்குமார், அது ஒரு லூசு. அது சொல்லுது, பன்னீர்செல்வம் தனியா நின்று டீ ஆத்திக் கொண்டு இருக்கிறார் என்று. இப்போது பார்த்தாயா எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று. இப்போது கூடியிருப்பது 33 மாவட்ட தொண்டர்கள் தான். இன்னும் 55 மாவட்டங்கள் இருக்கிறது. அந்த மாவட்டங்களில் நிச்சயம் மாநாடு நடத்தப்படும்" எனறு பேசியிருக்கிறார்.

Are these the actions taken by OPSs sons against Edappadi palanisamy and What are Jayapradeeps plans

இந்த மாநாட்டை பொறுத்தவரை, எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தபடியே உள்ளன.. சசிகலா, தினகரன் மாநாட்டுக்கு வரவில்லை.. "தொண்டர்கள் தங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற ஓபிஎஸ் சொல்லியும், பணம், சாப்பாடு, குவார்ட்டர் என தந்தும்கூட, தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க முடியவில்லை.. தன் செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ்சுக்கு ரூ.20கோடி வீணானதுதான் மிச்சம்.. போதாக்குறைக்கு, கு.ப.கிருஷ்ணன் - வைத்திலிங்கம் இருவருக்கும் இடையே ஈகோ வெடித்துள்ளதால், இவர்களை சமாளிக்க வேண்டிய நிலைமையில் ஓபிஎஸ் உள்ளார்" என்று எதிர்தரப்பில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

எனினும், ஓபிஎஸ்ஸுக்கு இந்த மாநாடு ஆகச்சிறந்த வெற்றி என்றே பூரிக்கிறார்கள் அவரது தொண்டர்கள்.. காரணம், கடைசிவரை எவ்வளவோ முயற்சித்தும், இந்த மாநாட்டை எடப்பாடியால் தடுத்து நிறுத்த முடியவில்லை, எவ்வளவோ முட்டுக்கட்டைகள் போட்டும், மாநாட்டை தடுக்க முடியவில்லை என்கிறார்கள்.. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், திருச்சி மாநாட்டின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக இருந்தது, ஓபிஎஸ்ஸின் இரு மகன்களும்தான் என்கிறார்கள்..

Are these the actions taken by OPSs sons against Edappadi palanisamy and What are Jayapradeeps plans

ஓபிஆர் அதிரடி: தற்போது ரவீந்திரநாத் எம்பியாக உள்ள நிலையில், பாஜகவின் ஆதரவாளராகவும், மேலிட தலைவர்களின் அன்பை பெற்றவராகவும் விளங்கி வருவது தெரிந்து விஷயம்தான்.. ஆனால், ஜெயபிரதீப்பின் பங்களிப்பு இந்த மாநாட்டில் ஓங்கியிருந்ததாக சொல்கிறார்கள்.. பொதுவாக, தேர்தல் சமயங்களில் மட்டுமே தலைகாட்டி வருபவர் ஜெயபிரதீப்.. எப்போதாவது இவர் பதிவிடும், அரசியல் ட்வீட்கள் பெரும் பரபரப்பை கிளப்பிவிடும். அதிமுகவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு, தேர்தல் சமயங்களில் பதிவுகளின்மூலம் அதிரடிகளை கிளப்பிவிடுவார்..

எடப்பாடி தரப்புக்கு பதிலடி தருவதாகவும், திமுகவுக்கு பதிலடி கொடுப்பதிலும் ஜெயபிரதீப் முக்கிய பங்காற்றுபவர்.. அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், சமீபத்தில்கூட, அவருக்கு ஜெயபிரதீப் பதில் தந்திருந்தார்.. அதில், தன்னுடைய அப்பாவின் தரப்பின் நியாயங்களையும், ஆதங்கங்களையும் அதில் கொட்டியிருந்தார்..

Are these the actions taken by OPSs sons against Edappadi palanisamy and What are Jayapradeeps plans

2 மகன்கள்: இந்நிலையில் நேற்று நடந்த திருச்சி மாநாட்டில், அதிமுக தலைமை அலுவலக முகப்பு வடிவில் மேடை, மாநாட்டில் தொண்டர்கள் உட்காரும் 2 பகுதிகளுக்கு நடுவில் நடந்து வர நீண்ட மேடை + .இரட்டை இலை சின்னத்துடன் கொடி + தொண்டர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள், + உணவு + என பல்வேறு விஷயங்களை ரவீந்திரநாத்துடன் சேர்ந்து ஜெயபிரதீப்பும் கவனித்து கொண்டாராம்.. அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் முயற்சியை முறியடிக்க, தங்கள் ஆதரவு நிர்வாகிகளுடன் அடுத்தக்கட்ட அதிரடியிலும் இறங்கியிருக்கிறார்களாம் ஓபிஎஸ்ஸின் மகன்கள் ரவீந்திரநாத்தும், ஜெயபிரதீப்பும்..!

முதல் அடி: இதனிடையே, நேற்றைய தினம் ஓபிஎஸ் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள், விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றன.. இந்த தீர்மானங்கள் எதுவுமே, ஆச்சரியத்தை தரவில்லை என்றும், அவைகள் யாவுமே வலுவாக இல்லை என்றும் கூறப்படுகின்றன.. எடப்பாடி பழனிசாமிக்கு இந்த மாநாடு மூலம் ஓபிஎஸ் என்ன சொல்ல வருகிறார்? இந்த திருச்சி மாநாடு எதை நோக்கி செல்கிறது? ஓபிஎஸ் இனி, என்ன செய்ய போகிறார்? அவரை நம்பியிருப்பவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பிவிடுவார்களா? என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளனர். ஆனால், மக்களை நேரிடையாக சந்திக்க துவங்கி உள்ள ஓபிஎஸ்ஸின் அதிரடியை பலரும் வரவேற்றும் வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+