பாஜகவை திணறடிக்குதா பாமக? பலே பலே பிளான்கள்.. இறுதியில் திமுகவுக்கே லாபம்.. என்ன நடக்கிறது
சென்னை: பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி இந்த இரண்டு கூட்டணிகளில் எது வலுவான கூட்டணியாக உள்ளது? பாஜக கூட்டணியால், பாமகவுக்கு கிடைக்க போகும் லாபம் என்ன?
வழக்கமாக எந்த தேர்தல் என்றாலும், திராவிட கட்சிகள் பாமகவுடன் முந்திக்கொண்டு கூட்டணி வைக்கும்.. ஆனால், இந்த முறை அனைத்து கட்சிகளையும்விட, பாமகதான் கடைசியாக கூட்டணிக்குள் நுழைந்துள்ளது.

பாமக: அதிலும், பாமகவை யார் கூட்டணிக்குள் கொண்டுவரப்போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு கடைசி நிமிடம் வரை, அதிமுக - பாஜக இடையே நீடித்த நிலையில், இதில் பாஜக முந்திக்கொண்டது. இப்படி திடீரென பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், பாமகவின் சில முக்கிய நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் அதிருப்திகள் வெடிக்க துவங்கியிருக்கின்றன.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக கொண்டவந்தபோது, அதை பாஜக கூட்டணியிலிருக்கும் சில கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டணியை சிலர் விரும்பவில்லை என்றே தெரிகிறது.
வலிமை கூட்டணி: கடந்த முறை அதிமுகவுடன் வலிமையாக கூட்டணி வைத்தும்கூட, பாமகவால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. அப்படியிருக்கும்போது, இந்த முறை எப்படி பாஜகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற முடியும்? என்பதே இந்த அதிருப்தியாளர்களின் சந்தேகமாக எழுந்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை பாமக வலியுறுத்தியபோது, அதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், பாஜக அமைதி காத்து வருகிறதே? இதுவரை பாஜகவின் நிலைப்பாடு தெரியாதபட்சத்தில், எப்படி அந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது? இதனால் மேல்மட்ட தலைவர்கள் திருப்தியடைந்துகொள்ளலாமே தவிர, தொண்டர்களை திருப்திப்படுத்துவது கஷ்டம்.. தேர்தல் வேலைகளில் முழுமனதுடன் எப்படி வேலை செய்வார்கள்? என்றெல்லாம் குமுறல்கள் வெடித்துள்ளன.
அதிருப்திகள்: இத்தனை அதிருப்திகள் இருந்தாலும், பாமக - பாஜக கூட்டணி ஏன் அமைந்தது? பாமகவை இத்தனை முயற்சி எடுத்து, பாஜக ஏன் கூட்டணிக்குள் கொண்டுவந்தது? இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன..
வட தமிழகத்தின் வாக்கு வங்கிக்காக பாமவையே, பாஜக பெரிதும் நம்பியிருப்பதாக தெரிகிறது. பாமகவின் வாக்கு சதவீதத்தினால், கூட்டணிக்கு பலம் என்பதுடன், திமுக, அதிமுகவின் ஓட்டுக்களை சிதறடிக்க முடியும் என்றும் பாஜக நம்புகிறதாம். பாமக மூலம் வாக்கு சதவீதத்தை உயர்த்தினாலும், அதனை தங்களுக்கான வெற்றியாகவே திராவிட கட்சிகளிடம் காட்டிக்கொள்ளவும் முயலலாம். அந்தவகையில், பாமக கூட்டணியால் பாஜகவுக்கு லாபம் என்றே சொல்லலாம்.
வாக்கு வங்கி: அப்படியானால், பாஜகவுடனான கூட்டணியால், பாமகவுக்கு என்ன லாபம்? இதற்கும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.. கிடைத்திருக்கக்கூடிய 10 தொகுதிகளில், தலா ஒரு சதவீதம் வாக்கு வாங்கினால்கூட, தங்களது மாம்பழ சின்னத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
அதுமட்டுமல்ல, வரப்போகும் சட்டமன்ற தேர்தல்களில், ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காத நிலைமை ஏற்பட்டால், கூட்டணி ஆட்சிக்கான களம் நிச்சயம் ஏற்படும்..
எனவே, 2026 ஆண்டு தேர்தலுக்கான செயல் திட்டத்தையும் கணக்கிட்டுதான் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறதாம் பாமக.. ஒருவேளை யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில், கூட்டணி ஆட்சியிலாவது பங்கெடுக்கும் வாய்ப்பு உருவாகும் என்று கணக்கு போடுகிறதாம்.
எதிர்பார்ப்பு: ஆனால், தங்களைவிட குறைவான வாக்கு வங்கி வைத்திருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், பாமகவின் திட்டங்கள் நிறைவேறுமா? எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய ஆர்வமாக எழுந்துள்ளது. ஆக மொத்தம், அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது, திமுகவுக்கு பெருத்த லாபமாகி இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications