பிரபலங்கள் யார் பாருங்க.. லிஸ்ட் வந்ததுமே அதிர்ந்த கமலாலயம்.. இது யார் பார்த்த வேலை? அனலில் அறிவாலயம்
சென்னை: தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளினால், ஒருபக்கம் கமலாலயமும், மறுபக்கம் அறிவாலயமும், தகித்து காணப்படுகிறது.. இதையடுத்து, முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
தமிழக ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது... பாஜகவுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன... ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறி வருகிறது என்று, கூட்டணி கட்சிகள் வெளிப்படையாகவே சொல்லியும் வருகின்றன..
இதன் எதிரொலியாகத்தான், தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அன்றே குரலை எழுப்பியிருந்தது விசிக..

அதுமட்டுமல்ல, "ஆளுநர் ஆர்என்ரவி, ஆர்எஸ்எஸ்ரவியாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. சனாதனம் பற்றி பேசிய அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொண்டாற்ற போக வேண்டும்" என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
மாணவர் அணி: சமீபகாலமாகவே ஆளுநர் மீதான அதிருப்தி போக்கு வெடித்து கிளம்பி உள்ளது.. கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் கட்சி, திராவிடர் கட்சி உட்பட திமுகவின் அனைத்து தோழமை கட்சிகளும், ஆளுநரை, மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை அதிகமாக வலியுறுத்த துவங்கி உள்ளன..
இதற்குநடுவில்தான், செந்தில்பாலாஜி கைது விவகாரம் வெடித்தது.. ஏற்கனவே அதிருப்தியில் இருந்த திமுகவினர், செந்தில்பாலாஜி விவகாரத்தையடுத்து, மேலும் கொந்தளித்துவிட்டனர்.. மதுரை திருப்பரங்குன்றம் தங்கள் ஆதங்கத்தை போஸ்டர் அடித்தும் ஒட்டியிருந்தனர்.. "மத்திய அரசே.. உங்க மிரட்டலுக்கு திமுக எப்போதும் அஞ்சாது, நாங்க மிசாவையே பார்த்தவங்க; பயம் எங்க பயோ டேட்டாவிலேயே கிடையாது' என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்..
ஆச்சரியக்குறி: பதிலுக்கு பாஜகவினர், 'சிறைபட்டது அணில்.. அடடே ஆச்சரியக்குறி, திராவிட மாடலே! நீங்க மிசாவை தானே பார்த்தீங்க.. அமித்ஷாவை பார்த்ததில்லையே? பயம் உங்க பயோடேட்டாலயே இல்ல.. பார்த்தாலே தெரியுதுல' என்று வாசகத்தை அச்சிட்டு, நெஞ்சுவலியுடன் கதறிய செந்தில்பாலாஜியின் போட்டோவையும் ஒட்டியிருந்தனர்.
அதுமட்டுமல்ல, "வெந்து தணிந்தது காடு" என்ற பாரதியாரின் வரிகளுக்கு பதிலாக, "வெந்து தணிந்தது திராவிடம்' என்று அச்சடித்து ஒட்டி போஸ்டர்களிலேயே இரு தரப்பினரும் பரபரப்பை கிளப்பினர்.
செந்தில் பாலாஜி: இப்போது விஷயமென்னவென்றால், ஆளுநருக்கு எதிரான போஸ்டர் யுத்தத்தை தீவிரப்படுத்தியிருக்கிறார்களாம் திமுகவினர். அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை கவர்னர் நீக்கிய நிலையில் அதனை கண்டித்து சென்னையில் போஸ்டர் ஒட்டியிருந்தது திமுக. இது ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர்.
அந்த வகையில், சேலம் மாநகரில், திமுகவின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் அவரது ஆதரவாளர்கள் கவர்னருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த போஸ்டர்களில் மத்திய மோடி அரசின் அமைச்சரவையில் உள்ள கிரிமினல் குற்றப் பின்னணி கொண்ட அமைச்சர்களின் படங்கள், அவர்களின் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்பதெல்லாம் லிஸ்ட் போட்டுள்ளார்களாம்..
லிஸ்ட்டுகள்: குறிப்பாக, மத்திய அமைச்சர்களான ஸ்ரீநிசித் பிரமானிக் 11 வழக்குகள், ஜான் பார்லா 9 வழக்குகள், முரளிதரன் 7 வழக்குகள், கிரிராஜ் சிங் 6 வழக்குகள், பங்கஜ் சவுத்ரி 5 வழக்குகள், சத்தியபால் சிங் பாகேஜ் 5 வழக்குகள், அஸ்வினிகுமார் சவுபே 3 வழக்குகள், அஜய்குமார் மிஸ்ரா 1 வழக்கு என போஸ்டர்களில் அச்சிடப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், ''ராஜ்பவன் ஆர்.என்.ரவி, எங்கள் அமைச்சரை நீக்க நீ யார்? டெல்லிக்குச் செல். இவர்களை மந்திரி பதவியில் இருந்து உடனடியாக நீக்கச் சொல். கொலை, கொள்ளை குற்ற வழக்குகளைச் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை பதவி நீக்கம் செய்யச் சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதிவிட்டாயா?'' என்றும் போஸ்டரில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
அறிவாலயம்: இந்த போஸ்டர்களை பார்த்து பாஜகவினர் கொந்தளித்து இருக்கிறார்களாம்.. சேலம் போஸ்டர்களை, அண்ணாமலையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ள சேலம் மாவட்ட பாஜகவினர், "திமுக அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளை பட்டியலிட்டு நாமும் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் பாஜகவினர். இதற்கிடையே சேலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரம் அறிவாலயத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications